Wednesday, April 18, 2018

கூட்டுத் தவம் இயற்றும் முறை

KG Sami write up

சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக நமது மனவளக்கலையானது மெல்ல, மெல்ல வளர்ந்து வருகிறது. அந்த வளர்ச்சியில் பல பரிணாமங்கள் தோன்றியுள்ளன. இதன் காரணமாகத் தவம் நடத்தும் முறையிலும்,  பிற விஷயங்களிலும் ஏற்படுத்த்ப்பட்ட மாறுபாடுகள் மற்றும், மேம்பாடுகளால் ஆங்காங்கும் அவ்வ்ப்போதும் சில வித்தியாசங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், தேவையான சீர்திருத்தங்களைச் செய்து, ஓர் ஓர்மை நிலையை (Uniformity) ஏற்படுத்தி அதையே இனி எல்லோரும் எங்கேயும் பின்பற்ற வேண்டும் என்பது நமது அருள் தந்தை அவர்களுடைய அறிவுரை.

தவம் தொடங்கும் போது,

(1) தவம் நடத்துவருபவர் இடத் தூய்மையைப் பின்வருமாறு 3 முறை சொல்ல வேண்டும் : ‘நாம் அமர்ந்துள்ள இடத்தைச் சுற்றிலும், நல்ல தெய்வீக ஆற்றலே நிரம்பின’  * அவ்வளவு தான். இதற்கு மேல் கூட்டவோ,  குறைக்கவோ, மாற்றவோ கூடாது.

(2) அருள் சக்தியை உடலில் பாய்ச்சும் போது, ‘அருட்ரோற்றல் நம் உடலிலும், உயிரிலும் அலை அலையாக் பாய்வதை உணர்கிறோம்’ * என்று 3 ன்று முறை கூற வேண்டும். மாற்றம் கூடாது.

தவம் நடத்தும் போது, வர்ணணைகள் ஏதுமின்றி, ‘ஆக்கினை’, ‘துரியம்’, ‘துவாதசாங்கம்’, ‘சந்திரன்’, ‘சூரியன்’, ‘சக்தி களம்’, ‘சிவகளம்’, என்று தக்க கால இடைவெளி கொடுத்துச் சொல்லிக் கொண்டே போக வேண்டும். பிறகு, ‘தவத்தை நிறைவு செய்யலாம்’ என்று சொல்லி,  தொடர்ந்து, ‘மீண்டும் சக்திகளம்’, ‘சூரியன்’, ‘சந்திரன்’, ‘துவாதசாங்கம்’, ‘பிரம்மரந்திரம்’, என்று இறங்கச் சொல்ல வேண்டும். பிறகு, உடல் முழுதும் நினைந்து தவ ஆற்றலை உடல் முழுவதும் பரவ விட்டுக் கொள்ளுங்கள் என்று சிறிது நேரம் உடலில் மனம் செலுத்தச் சொல்ல வேண்டும்.

அதன் பிறகு, சங்கற்பம், அது வருமாறு : ‘அருட்பேராற்றல் கருணையினால், உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வோம்’. இதை 3 முறை தவம் நடத்துபவர் சொல்ல, தவம் செய்பவர்கள் மனதில் வாங்கி, மௌனமாகச் சங்கற்பம் மேற்கொள்ள வேண்டும்.

பிறகு வாழ்த்துக்கள்: அவை:- ‘வாழ்க்கைத் துணைக்கு வாழ்த்து’, ‘பெற்ற மக்களுக்கு வாழ்த்து’, ‘உடன் பிறந்தோருக்கு வாழ்த்து’, ‘ஏனையவா உறவினர்கள், ந்ண்பர்களுக்கு வாழ்த்து’, ‘தொழில்துறை அன்பர்களுக்கு வாழ்த்து’, ‘மனவேறுபாடு கொண்ட அன்பர்கள் மனம் திருந்தி நல்வாழ்வு பெற வாழ்த்து’, இவ்வார்த்தைகளை மட்டும் மாற்றாது கூற வேண்டும்.

அதன் பிறகு, பின்வரும் வாழத்துக்களை தவம் நடத்துபவர் கூற, தவம் செய்பவர்கள் ‘வாழ்க வளமுடன்!’ என்று ஏகோபித்து வாய்விட்டுச் சொல்ல வேண்டும்: ‘அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வாழ்க வளமுடன்’ (3 முறை), ‘ஈரோடு மனவளக்கலை மன்றம் வாழ்க வளமுடன்’ (3 முறை), ‘அதனைச் சார்ந்த தவமையங்கள் வாழ்க வளமுடன் (3 முறை): இதற்குப் பதிலாக – கூட்டுத் தவம் ஒரு தவமையத்தில் நடைபெறும் பட்சத்தில் – அந்தத் தவ மையத்தின் பேரைச் சொல்லி 3 முறை வாழ்த்த வேண்டும்.

பிறகு, உலக நல வேட்பு, (உலகில் உள்ள பொறுப்புடைய....), இதைத் தவம் நடத்துபவர் சொல்ல, சபையோர் மௌனமாகக் காதில் வாங்கிச் சங்கற்பமாக்கி, மன அலைகளை வெளியிட்டுக் கொண்டிருக்க வேண்டும். அதே போல், மழை வாழ்த்து (ஏரி, குளம்.... 3 முறை)

பிறகு, ‘வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!’ எனக்கூறித் தவத்தை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு, கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு தலைக்கு மேல் கைகளைத் தூக்கி ஒரு மூச்சு இழுத்து விட்டு விட்டுக் கைகளை இறக்கிய பிறகு கண்களைத் திறக்க வேண்டும்.

*(இவ்வாசகங்கள் நமது அருள் தந்தையின் தவமுறை அகவலில் உள்ளவை. பார்க்க: ஞானமும் வாழ்வும்)

No comments:

Post a Comment