Saturday, January 20, 2018

முல்லை பெரியாறு அணையை பார்த்து வியந்த பென்னிகுக் உறவினர்கள்

முல்லை பெரியாறு அணையை பார்வையிட வந்த பென்னிகுக் உறவினர் மற்றும் இங்கிலாந்து நாட்டின் பிரதிநிதிகளுக்கு தேனி மாவட்ட விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #mullaperiyardam #Pennycuick

கூடலூர்:

முல்லை பெரியாறு அணையை பார்வையிட வந்த பென்னிகுக் உறவினர் மற்றும் இங்கிலாந்து நாட்டின் பிரதிநிதிகளுக்கு தேனி மாவட்ட விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #mullaperiyardam #Pennycuick

தேனி அருகே கேரள எல்லையில் முல்லைபெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த அணையை கட்டியவர் இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுக். எனவே தேனி மாவட்ட மக்கள் இவரை கடவுளாக கருதுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ந்தேதி பென்னிகுக் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு இருபோக சாகுபடியால் பசுமையாக காண்பது விவசாயிகளுக்கு கிடைத்த பொக்கி‌ஷமாக கருதி பென்னிகுக்கை இன்றும் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

எனவேதான் தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பென்னிகுக் உருவப்படம் கட்டாயம் இடம்பெறும். பென்னிகுக் அண்ணன் சார்லஸ் மகள் வழிப்பேத்தி டயானாஜீப் தமிழகம் வந்து பெரியாறு அணையை பார்க்க விரும்பினார்.

அதன்படி நேற்று டயானாஜீப், இங்கிலாந்து தேவாலய அமைச்சர் சரோன் பில்லி, லண்டன் புனிதபீட்டர் தேவாலய செயலாளர் சூசன்பெரோ, ஊடக ஆய்வாயர் ஜெய்னி மோரி ஆகியோர் தேனி மாவட்ட எல்லைப்பகுதியான லோயர்கேம்ப் வந்தனர்.

அங்கு அவர்களுக்கு விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் மணிமண்டபத்தில் பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் பெரியாறு அணைக்கு செல்வதற்காக தேக்கடி வந்தனர். அங்கு டயானாஜீப் மற்றும் அவருடன் வந்தவர்கள் படகு மூலம் முல்லைபெரியாறு அணையை பார்வையிட்டனர். அப்போது கடல் போல் காட்சியளித்த தண்ணீரை பார்த்ததும் அவர்கள் வியந்து போனார்கள்.

அதன்பின்னர் அணை கட்டுமானப்பணிகள் நடைபெறும்போது இறந்தவர்களை அடக்கம் செய்த பகுதியையும் அவர்கள் பார்த்து அஞ்சலி செய்தனர். இதனை தொடர்ந்து உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தேனி மாவட்ட மக்கள் எங்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் மரியாதை எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அடுத்தமுறை வரும்போது இங்கு எங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் அழைத்து வருவேன். பென்னிகுக் செய்த காரியத்தால் இங்குள்ள விவசாயிகள் கடவுளாக நினைப்பதை பார்த்து நான் மெய்சிலிர்த்து போனேன்.

இவ்வாறு அவர் பேசினார்.  #mullaperiyardam #Pennycuick #tamilnews
Shared by M VIJAYAN

No comments:

Post a Comment