வேப்பெண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில் (வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும். கோடை காலத்தில் வேம்புகளில் பூக்கும் பூக்களிலிருந்து காய்கள்உருவாகி, பழங்களாக பழுக்கும். உதிர்ந்த பழங்களை பொறுக்கி எடுத்து வெயிலில் உலர்த்தி அதன் விதையை எடுப்பர். அவ்விதைகளை அரைக்க எண்ணெய் கிடைக்கும். ஒரு மணமும், கசப்புத்தன்மையும் உடைய இந்த எண்ணெய் மருத்துவக் குணமுடையது. விதைகளை அரைத்த பின் கிடைக்கும் சக்கை வேப்பம் புண்ணாக்கு எனப்படும் இது ஒரு சிறந்த மண்ணுக்கான உரமாகவும் பூச்சிக்கொல்லியா கவும் பயன்படுகிறது.
www.mooligaikadai.com
வேப்பெண்ணெய் பொதுவாக குருதியைப் போன்று சிவப்பு நிறமுடையது. நிலக்கடலை, பூண்டு ஆகியவை இணைந்த ஒரு மணத்தை ஒத்தது. இது பெரும்பாலும் டிரைகிளிசரைடுகள், மற்றும் டிரிட்டர்பெனாய்டு ஆகியவற்றின் சேர்வைகளைக் கொண்டது. இவையே இதன் கசப்புத் தன்மைக்குக் காரணமாகும்.
கூந்தலின் அழகைக் கெடுப்பதில் பொடுகு மற்றும் பேன்களுக்கு பெரும்பங்கு உண்டு. பேன் ஒருவகையான புற ஒட்டுண்ணி. நமது ரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்ளும் இந்த பேன்கள் மிகவேகமாக இனப்பெருக்கம் செய்து கூந்தலியே www.mooligaikadai.com முட்டையிடுகின்றன. இதனால் அரிப்பும், கூந்தலுக்கு அழகின்மையும் ஏற்படுகின்றன. பேன்களை அழிக்க இயற்கை முறையிலேயே சில மருந்துகளை உள்ளன.
வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லை குறையும்.
வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.
வேப்ப எண்ணெய் முகப்பரு குறைக்கிறது
கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.
கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு வேப்ப எண்ணெய் சிறந்த மருந்து. www.mooligaikadai.com
No comments:
Post a Comment