Wednesday, March 2, 2016

இலுப்பை எண்ணெய்

இலுப்பை எண்ணெய்

இடுப்பு வலியைப் போக்குவதில் இலுப்பையின் பங்கு மிக அதிகம். இடுப்பில் வலியுள்ள பகுதியில் உளுந்த மாவினால் வரம்பு கட்டி வெதுவெதுப்பாக இலுப்பை எண்ணெய்யை ஊற்றி அரை, முக்கால் மணிநேரம் ஊற வைத்து வர, இடுப்பிலுள்ள வலி குறைந்து அப்பகுதியிலுள்ள இடுப்பு எலும்பு மற்றும் வெளிப்புறம் பிதுங்கியுள்ள வில்லைப் பகுதி மறுபடியும் தன்னிடத்திற்குத் திரும்ப வாய்ப்பிருக்கிறது. இதனால் அதற்கான அறுவைச் சிகிச்சையைக் கூட நம்மால் தவிர்க்க இயலும். இலுப்பை எண்ணெய்யை மூலிகை இலைகளுடன் காய்ச்சி தண்டுவடத்தில் வெதுவெதுப்பாக ஒத்தடமிட்டுத் தேய்த்து வந்தோமேயானால் உடல் பாரத்தினால் ஏற்படும் எலும்புத் தேய்வு குறைந்து முதுகுவலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகளும் தீருமென்கிறது ஓர் ஆயுர்வேதக் குறிப்பு. www.mooligaikadai.com

இலுப்பை எண்ணெய்யைக் கொண்டு எண்ணெய்க் குளியல் செய்து வர நாடி நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியம் பெருகும், மேனி மிருதுவாகும். மனத்தெளிவும், சுறுசுறுப்பும் ஏற்படும். ஆனால் கரப்பான், சொறி, தலை முடி கொட்டுதல் இருப்பவர்களுக்கு ஏற்றதல்ல. சேற்றுப் புண்ணுக்குத் தடவினால் குணமடையும். இதன் எண்ணெய்யை உட்கொள்ளும்போது குடல் வறட்சி நீங்கி மிருதுவாகும். இதனால் ஜீரணக்கோளாறு, புளித்த ஏப்பம், வயிற்றெரிச்சல் போன்றவை கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும், இது மலத்தை இளக்கி வெளியேற்றும். இலுப்பை தாதுக்களை விருத்திபடுத்தும். காசநோய்க்கு நல்ல மருந்தாகவும் பயன்படும். www.mooligaikadai.com

No comments:

Post a Comment