கருணைக் கிழங்கு
கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள்.www.mooligaikadai.com
மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும். இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்ளல், அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல், உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
மூல நோயில் கருணை காட்டுவதில் கருணைக் கிழங்கு மிகவும் சிறந்தது. ஆசன வாயில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும்.www.mooligaikadai.com
உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வரவேண்டும்
No comments:
Post a Comment