ஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள் !!!
1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.
=============================================
வீட்டில், பாபாவின் வழிபாடு எந்த முறைப்படி செய்யப்பட வேண்டும் ?
ஒரு கோயிலில் பாபாவை வழிபடுவதற்கும் வீட்டில் வழிபடுவதற்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. வீட்டில் வழிபடப்படும் பாபாவின் விக்கிரகத்திற்கு பொதுவாக ' பிராண பிரதிஷ்டை ' செய்வதில்லை.
அவரது உருவப் படங்கள்தான் பொதுவாக வழிபடப்படுகின்றன. வீட்டில், பாபாவை வழிபடும் முறையை எளிதாக வைத்துக் கொள்வது அவசியம். தேவையான பக்தியை உள்ளுக்குள் உருவாக்காவிட்டால், பெரும்பாலான சடங்குகளும், சாங்கியங்களும் செயற்கையானதும் பயனற்றதும் ஆகும்.
சத்குருவின்மீது அசையாத நம்பிக்கையுடனும் உணர்வுபூர்வமாகவும் ஒரே ஒரு மலரை அர்ப்பணித்தால் கூட போதுமானது. நாம் வீட்டை விட்டு ஏதோ காரணமாக வெகு தூரத்தில் இருந்தாலும், ஓர் இடத்தில் அமர்ந்தவண்ணம் வீட்டில் செய்யும் வழிபாட்டைப் போலவே மானசீகமாக அப்பொழுதும் பாபா வழிபாட்டை நாம் செய்யலாம்.
அதேசமயம் வீட்டில் இவ்வழிபாட்டை வேறு யாரையாவது செய்யச் சொல்லலாம். வெவ்வேறு மதங்கள், சாதிகள், மத நம்பிக்கைகள், சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற பேதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் பாபா.
சத்குருவினுள் எல்லா தெய்வங்களும் அடங்கியுள்ளன என்று வேதங்கள் கூறுகின்றன. எனவே மற்ற தெய்வங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு பாபாவை மட்டுமே தெய்வமாக வணங்குவதில் தவறேதுமில்லை. அல்லது மற்ற தெய்வங்களை வணங்குகின்ற முறையிலேயே பாபாவையும் வணங்குவதிலும் தவறு ஏதுமில்லை.
சீக்கிய மதத்தினர் தங்கள் குருக்களுக்காக மகிழ்ச்சியுடன் உயிர்த்தியாகம் செய்தனர். காரணம் சத்குருவானவர் நிரந்தரமானவர் என்றும் தம்மோடு எப்போதும் இருப்பவர் என்றும் அவர்கள் உளமார நம்புகின்றனர். எனவே பாபாவின்பால் அசைக்கமுடியாத தீவிர நம்பிக்கை கொண்டிருப்பது என்பதே முற்றிலும் தேவையான ஒன்று.
http://www.newstig.com/devotional/news/6573/Baba-eleven-sermon-Languages
No comments:
Post a Comment