Thursday, March 10, 2016

எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும்?

எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும்?
 

காலையில், சூரிய உதயம் ஆரம்பம் ஆகும் பொழுது, அன்றைய தினம் என்ன கிழமையோ, அந்த கிரகத்தின்ஹோரையே, முதல் ஹோரை அல்லது ஹோரை ஆரம்பம் ஆகும். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை சூரிய ஹோரை ஆரம்பம், திங்களன்று சந்திர ஹோரை, செவ்வாய் அன்று செவ்வாய்ஹோரை, புதனன்று புதன் ஹோரை, வியாழன் அன்று குரு ஹோரை, வெள்ளி அன்று சுக்கிர ஹோரை, சனியன்றுசனி ஹோரை ஆரம்பமாகும்.

ஹோரைகளைக் கணக்கிடும்போது, அன்றைய சூரிய உதயத்தில் இருந்து தான் கணக்கிட வேண்டும். ஒவ்வொரு ஹோரையும் கொடுக்கும் சுப மற்றும் அசுபபலன்கள் உள்ளன. ஹோரையினால் ஏற்படும் பாதிப்பை வைத்துதான், அதனை ஹோரை தோஷம் என்கிறோம். இதற்கு அந்த ஹோரைக்கு, கிரகத்திற்கு உரிய தெய்வத்தை வணங்கி, உரிய பரிகாரத்தைச் செய்யலாம். மற்றபடி மற்ற தோஷங்களைப் போல, ஹோரை தோஷம் பெரிதாக பயப்படக் கூடியது அல்ல.

இப்போது ஒவ்வொரு ஹோரைக்கும் அது கொடுக்கும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்.

சூரிய ஹோரை :-

ஏதாவது ஒரு பணியில் சேர, காரியத்தில் இரங்க, பெரிய மனிதர்களைச் சந்திக்க, வீடு, வாகனம் வாங்க பத்திர பதிவு செய்ய, சொத்து தொடர்பான உயில் எழுத, யாரிடமாவது நமக்காக சிபாரிசு, ஆலோசனை பெற,சூரிய ஹோரையைத் தேர்ந்தெடுத்தால், அது வெற்றிகரமாக முடியும், எக்காரணம் கொண்டும், சூரிய ஹோரையில் வீடு குடி போகக் கூடாது.

சந்திர ஹோரை:-

புதிய தொழில் தொடங்க, வர்த்தகம் தொடங்க, தீர்த்த யாத்திரை செல்ல, வெளிநாடு செல்ல, சந்திரஹோரை சிறப்பானதாகும்.கிருஷ்ணபட்ச சந்திரனாக இருந்தால், அதாவது தேய்பிறை சந்திரனாக இருந்தால்,மேற்கூறியவற்றை தவிர்ப்பது நல்லது.

செவ்வாய் ஹோரை:-

பொதுவாகவே நம்மில் பலரும் செவ்வாய் கிழமையை, நல்ல காரியங்களுக்குத் தவிர்த்துவிடுவார்கள். அதே போல செவ்வாய் ஹோரையில், நல்ல காரியங்களை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எந்தக்காரியத்தைச் செய்யும் போதும், நாம் பேசுகின்ற பேச்சுகளோ, நமக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவிடும் என்பதால், இனியசொற்களை, நேர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், கெடுதல் வராமல் தவிர்க்கலாம்.

புதன் ஹோரை:-

தகவல் தொடர்பு மூலமாக ஆதாயம் கிடைக்க உகந்த ஹோரை, புதன் ஹோரை என்பதினால் போன்,பேக்ஸ், இ-மெயில், இன்டர்நெட் ஆகியனவற்றை, நமது தொடர்புக்குப் பயன்படுத்தினால்நிச்சயமாக பலன் கிடைக்கும்.ஏதாவது பிரச்சனைகளுக்காக வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றால் வழக்கறிஞரை, இந்த ஹோரையில் பார்ப்பதுநல்லது. கதை கட்டுரைகள் எழுத, ஜாதகம் பார்ப்பதுகூட, இந்த நேரத்தில் பார்க்கலாம். புதிய கணக்குதொடங்கலாம்.நிலம் வாங்க, பெண் பார்க்க, திருமணம் விஷயமாக பேச்சு வார்த்தைகள் நடத்தக் கூடாது.

குரு ஹோரை:-

ஆடை, ஆபரணங்கள் வாங்க, திருமாங்கல்யத்துக்கு தங்கம் வாங்க ஏற்ற நேரம் குரு ஹோரை.பொதுவாக குரு ஹோரையில், உது செய்தாலும் அது நல்ல பலனையே கொடுக்கும். நகை வேலை செய்பவர்கள், நகைக்கடை நடத்துபவர்கள், இந்த ஹோரையில் தொழிலை ஆரம்பிக்கலாம். விவசாயம் செய்யவும் ஏற்ற நேரம்.வீடு,மனை வாங்க, விற்க உகந்த ஹோரை குரு ஹோரை, ஆனால் எதுவும் சட்டத்திற்குப் புறம்பானதாக இருக்கக்கூடாது.சுக்கிர ஹோரை:-சுப காரியங்களுக்கு ஏற்ற ஹோரையாகும். திருமணத்திற்கு பெண் பார்க்க, சாந்தி முகூர்த்தத்திற்குஉகந்த நேரம். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகள், புதிய வாகனம் வாங்க, சுக்கிர ஹோரை ஏற்றது. இந்த ஹோரையில் காணாமல் போன பொருட்கள், மேற்கு திசையில் சில நாட்களிலேயே கிடைத்துவிடும். கடன் மட்டும் கொடுக்கக்கூடாது.

சனி ஹோரை:-

சனி ஹோரையை அசுப ஹோரை என்றும் சொல்வார்கள். இருந்தாலும், இந்த ஹோரை, ஒரு சிலகாரியங்களுக்கு சிறப்பான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கும் ஏற்ற ஹோரை இது. இந்த ஹோரையில் கடனை அடைத்தால், திரும்பவும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. மருத்துவமனைக்குச் செல்லுதல், அறுவைச்சிகிச்சை செய்தல் போன்றவற்றை இந்த ஹோரையில் செய்யவே கூடாது.ஊழ்வினைக்கான (பூர்வ ஜென்மபாவத்திற்கான) பூஜை, பாத யாத்திரை, நடைப்பயணம் மேற்கொள்வது, மரக்கன்று நடுவது, விருட்சங்கள் அமைப்பது,அணைக்கட்டு போன்ற பொறியியல் பணிகளை தீர்மாணிப்பது போன்ற பணிகளுக்கும் ஏற்ற ஹோரை தான்.

குரு, சுக்கிர, சூரிய, வளர்பிறை சந்திரன் ஆகியன சுப ஹோரைகள் என்றும், செவ்வாய், சனி, கிருஷ்ண பட்ச அதாவது தேய்பிறை சந்திர ஹோரை முதலியன அசுப ஹோரைகளாவும் கருதப்படுகின்றன.

ஜோதிடர்களுக்கு ஹோரை பற்றித் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் ஹோரையை வைத்துத்தான், நல்ல நாளில் முக்கிய நல்ல நேரத்தைக் கணக்கிடவே முடியும். தவக்கிரங்களில்,ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அதனை மனதில் கொண்டுதான் ஜோதிடர்கள் ஹோரையைத் தேர்ந்தெடுப்பார்கள்.

குரு ஹோரை, ஹோரைகளிலேயே சிறந்த ஹோரை, உன்னதமான, சிறப்பான ஹோரை என்றாலும்,வெள்ளிக்கிழமை, குரு ஹோரையைத் தேர்ந்தெடுக்கக்கூடாது. ஹோரை தோஷத்தினால் அல்லது பாதிப்பினால் ஏற்படும் விஷயங்களை, நீங்களே உங்களுடைய அன்றாடவாழ்க்கையில் பார்த்திருப்பீர்கள். மனித வாழ்க்கையில் ஹோரைகளின் பங்களிப்பு சிறப்பானது.

நம்மை அறியாமலே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும், அதை உணர்ந்து நடந்தால், நலம் பெறுவீர்கள். குறிப்பாக, கணவன், மனைவி ஏதாவது வாக்குவாதம் செய்யத் துவங்கினால், செவ்வாய் அல்லது சனி ஹோரை வந்தால், அடக்கி வாசியுங்கள், இல்லையெனில் அது மிகப்பெரிய தகராறு ஆகிவிடும். கணவன், மனைவி என்றில்லை, அனைத்து பேச்சுவார்த்தைகள், விவாதங்களுக்கும் இது பொருந்தும். ஹோரை என்பது காலத்தின் ரகசிய கணக்கு, அதனைத் தெரிந்து வைத்துச் செயல்பட்டால் நல்லது. நல்ல நேரம் பார்த்து, நல்ல ஹோரை பார்த்துச் செய்யும் காரியங்கள், மிக மோசமான தசை, புத்தி காலத்திலும், உங்களுக்கும் கை கொடுக்கும், ஹோரை அறிந்து நடப்பவரை,யாரும் ஜெயிக்க முடியாது, என்பது சித்தர்கள் வாக்கு.

http://www.newstig.com/devotional/news/6574/any-horai-

No comments:

Post a Comment