Wednesday, July 18, 2018

. outer mind. Inner mind. Super concious mindரங்கராட்டின ரகசியம்

இனிய காலை வணக்கம்

** **

மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு எளிமையான வித்தை.

ரங்கராட்டின ரகசியம் என்பது ஒரு வித்தியாசமான அதேசமயம் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கான சுலபமான வழிமுறையாகும். இந்த ரங்கராட்டின ரகசியத்தைத் தெரிந்து கொள்வதால் கோபம், பதட்டம் tension, பயம், கவலை, விரக்தி போன்றவற்றை எளிதாக கையாளவும் அவற்றை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்

ரங்கராட்டின வித்தையைக் கற்றுக்கொள்வதால் எதிரிகளால், துரோகிகளால், மற்றவர்களால் என வேறு எவராலும் வரும் மனக்குழப்பங்களையும், நமது மனதில் ஏற்கனவே உள்ள பலவிதமான குழப்பங்களையும், பயத்தையும், கவலையையும் வெளியேற்றி அந்த இடத்தில் அன்பு, அமைதி, சந்தோ­ம், நிம்மதி, விடாமுயற்சி, ஆரோக்கியம் போன்ற நல்ல எண்ணங்களைப் பதிவுசெய்ய முடியும்.

ரங்கராட்டின ரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக மனதை புரிந்து கொள்வோம்

💥நமது மனம் மூன்று அடுக்குகளைக் கொண்டது💥

1. மேல்மனம் Conscious Mind
மேல்மனம் என்பது தற்காலிகமான பதிவுகளைக் கொண்டது. உதாரணமாக நேற்று மதியம் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் உங்களால் உடனே பதில் கூறமுடியும். ஏனென்றால் அந்த விசயம் மேல் மனதில் பதிவாகி இருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட தேதியில் அன்று என்ன சாப்பிட்டீர்கள் எனக் கேட்டால் அதற்குச் சரியாக பதில் சொல்ல முடிவதில்லை. ஏனென்றால் அந்தப் பதிவு அழிந்துவிட்டது. அதன் காரணம் அது பதிவான இடம் மேல்மனம்.

2. நடுமனம் Sub Conscious Mind
அதே சமயத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நம்மை ஒருவர் அவமானப்படுத்தி இருந்தாலோ அசிங்கப்படுத்தி இருந்தாலோ, அல்லது ஏமாற்றி இருந்தாலோ, அந்த நிகழ்ச்சி மட்டும், இந்த நாள், இன்ன கிழமை, இத்தனை மணிக்கு, இந்த இடத்தில் நடந்தது என்று நினைவுபடுத்திக்கொண்டு கோபப்படுகிறோம். இந்த கோபம் என்பது ஒரு பதிவு. இது நடுமனதில் பதிவாகி இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நடுமனதில் உள்ள எல்லாப் பதிவுகளும் நமது வாழ்க்கைக்கு கஷ்டத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது

அதாவது நாம் சந்தோ­மாக இருக்கும்பொழுது அந்த உணர்வுகள் நமது உயிரோடு உயிராகக் கலந்துவிடுகின்றன. ஆனால் நமது மனதுக்குப் பிடிக்காத விசயங்கள் நடக்கும் பொழுது அது நமது உயிரோடு உயிராகக் கலக்காமலும் அதே சமயத்தில் வெளியேறிச் செல்லாமலும் நடுவில் நமது நடுமனதில் பதிவாகிவிடுகிறது.

கவலை என்பது மனதில் உள்ள ஒரு பதிவு அவ்வளவுதான். ஒரு விசயத்திற்காக நாம் கவலைப்படுகிறோம், கோபப்படுகிறோம் என வைத்துக் கொள்வோம். ஒரு அரை மணிநேரத்திற்கு நமக்கு இந்த உணர்வுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். “அந்த நேரத்தில் புத்தி இதற்காகக் கவலைப்படாதே, கோபப்படாதே” என்று கூறினாலும் ஐந்து நாட்களுக்குப்பிறகு அதே விசயத்திற்கு மீண்டும் கவலை, கோபம் போன்ற உணர்வுகள்தான் வருகிறது. அது குறைந்தபாடில்லை. ஆனால் ஐந்து நாட்களுக்கு முன்பு இருந்த கவலையை விட இப்பொழுது அதிகம்தான் ஆகியிருக்கிறது.

அந்த கோபமோ, கவலையோ ஏன் அதிகமானது? கோபம், பயம், டென்சன் போன்றவை ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆனால் குறைவதில்லை. ஏனென்றால் புத்தியை வைத்து நடுமனதில் பதிவான அந்த உணர்வுகளை அழிப்பது என்பது மிகவும் கடினம். நமக்குக் கோபம் வரும்பொழுது நமது புத்தியை வைத்து ஒரு அரைமணி நேரத்திற்கு இனிமேல் கோபப்படக்கூடாது என்று நினைக்கும்பொழுது அது அழிவதில்லை.

நடுமனதில் உள்ள பதிவுகள் தான் நமது கோபம், பயம், டென்சன், விரக்தி போன்றவற்றிற்குக் காரணம், இந்தப் பதிவுகளை ஒன்று அழித்துவிடவேண்டும் அல்லது அதன்படி நிகழ்த்த வேண்டும்.
. மனதில் அழிந்துவிட்ட பதிவுகள் புத்தியில் நேராக சென்று பதிவாகிறது.
புத்தியில் உள்ள பதிவுகளினால் யாருக்கும் உணர்ச்சி வயப்படுதல் என்பது நடக்காது. ஒரு விசயம் மனதில் இருந்து புத்திக்குச் சென்றுவிட்டால் அதனால் நமக்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது. ஆனால் கெட்டபதிவுகள் நமது நடுமனதில் இருக்கும்வரை அதனால் நமக்குத் துன்பங்கள்தான் வரும்.

3. கீழ்மனம் Super Conscious Mind
இந்த மனம் அண்ட பிரம்மாண்டத்தை அதில் உள்ள அதிர்வுகளை உணர்ந்து கொள்வதற்கு என இருக்கும் மனம். அதாவது நடந்தது, நடப்பது, நடக்க இருப்பது என அனைத்தையும் தெரிந்து கொண்ட ஒரு மனதிற்குப் பெயர்தான் மூன்றாவது மனமான கீழ்மனம்.
இந்த இடத்திற்கு எப்பொழுது நாம் செல்கிறோமோ அப்பொழுது எல்லாமே புரிந்துவிடும். உலகில் யாரிடமும் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டியதில்லை. . உலகில் உள்ள எல்லா மனிதர்களின் மனதிற்குள்ளும் அண்ட பிரம்மாண்டத்தின் ரகசியங்கள் அடங்கியுள்ளது. அதை அறிந்து கொள்வதற்கு முதலில் மேல்மனத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்? அடுத்து நடுமனதில் உள்ள கெட்ட பதிவுகளை அழிக்க வேண்டும் அல்லது நிகழ்த்தவேண்டும். அப்பொழுதுதான் Super Conscious Mind ஆழ்மனம் அல்லது கீழ்மனதிற்குள் செல்லமுடியும்.

ஒரு மனிதன் நிம்மதியாக வாழவேண்டும் எனில் நடுமனதில் உள்ள கோபம், டென்சன், கவலை, பயம், விரக்தி, வஞ்சம் போன்ற பல விசயங்க நமது புத்திக்கு அனுப்பவேண்டும். ஒன்று அழித்துவிட வேண்டும் அல்லது நிகழ்த்த வேண்டும்.

ரங்கராட்டின ரகசியம்
திருவிழாக்கள், பொருட்காட்சி போன்ற இடங்களில் ராட்டினத் தூரிகள் ஜெயிண்ட் வீல் எனும் ராட்டினம் .

அதில் உட்கார்ந்து நாம் மேலே செல்லும்பொழுது சாதாரணமாக இருக்கும். எப்பொழுது அந்த ராட்டினம் உச்சிக்குச் சென்று பின் கீழே இறங்குகிறதோ அப்பொழுது நமக்குள் வித்தியாசமான உணர்வுகள் ஏற்படும். உள்ளிருந்து ஏதோ வயிற்றைப் பிரட்டுவது போலவும், தலை சுற்றுவது போலவும், உயிர் நம் உடலைவிட்டுப் பிரிவது போலவும் பல விதமான உணர்வு நிலைகள் ஏற்படும்.
இன்னும் சிலர் என்னவென்று சொல்லமுடியாத அளவிற்கு ஏதோ உணர்வினை அடைவார்கள்.

ராட்டினத்தில் மேலிருந்து கீழே வரும்பொழுது ஒரு வித்தியாசமான கற்பனை செய்யமுடியாத உணர்வு நிலையை அடைகிறோம். அந்த நேரத்தில் நடுமனதிற்கு நாம் நேரடியாக ஆழமாக செல்கிறோம்
நடுமனதிற்குள் ஆழமாகச் செல்லும் தருணங்களில் நாம் எது நினைத்தாலும் அது பதிவாகி வாழ்வில் கண்டிப்பாக நடக்கும் என்பது உண்மை.

இரண்டாவது நடுமனதிற்குள் ஆழமாகச் செல்லும் பதிவுகளால் அங்கிருந்து கெட்ட பதிவுகள் வெளியேறும் என்பதும் நல்ல பதிவுகளை ஆழ்மனதில் ஏற்படுத்தும் பொழுது அங்குள்ள எல்லா கெட்டபதிவுகளும் வெளியேற்றுவதற்கு நாம் ரங்கராட்டினத்தில் பயணம் செய்யும்பொழுது நடுமனதை அடைவது மிகமிக சுலபமாக இருக்கிறது.

எனவே நமது நடுமனதில் உள்ள தூய்மைக்கு விரோதமான விசயங்களை எடுத்துவிட்டு தூய்மைப்படுத்த வேண்டுமெனில் . ராட்டினத்தில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள் எப்பொழுதெல்லாம் ராட்டினம் கீழே வருகிறதோ அந்த சமயத்தில் நாம் நடுமனதிற்குள் ஆழமாக சென்றுவிட்டோம் என்பதைப் புரிந்து கொண்டு அந்த ஒரு நிமிடத்தில் நமக்குத் தேவையான எல்லா நல்ல விசயங்களையும் பதிவுசெய்யுங்கள்
.
உதாரணமாக

நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.

நான் நிம்மதியாக இருக்கிறேன்.

நான் புத்திசாலி, நான் பலசாலி,

என் குடும்பத்தில் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள்.

என் தொழிலை நான் சிறப்பாக செய்கிறேன்.

இவ்வாறு நாம் என்னவெல்லாம் நினைக்கிறோமோ அவை அனைத்தும் பதிவுகளாகி நமது வாழ்க்கையில் நடந்து விடுகிறது.

. ரங்கராட்டினத்தில் சுற்றாமலேயே நாம் நடுமனதிற்குச் செல்ல முடியும். அந்த இடத்தில் உள்ள பதிவுகளை நீக்கிவிட முடியும்

1. ரங்கராட்டினத்தில் ஏறி சுற்றும் பொழுது மேலிருந்து கீழே வரும்பொழுது நல்ல விசயங்களை நிறைய பதிவுசெய்ய வேண்டும். அப்பொழுது கெட்ட விசயங்களை விட நல்ல விசயங்கள் அதிகமாகும்பொழுது நாம் நிம்மதியாக வாழ்வோம்

நோய்களை நீங்கள் வரிசைப்படுத்துவதை விட ஆயிரம் நோய்களுக்கு ஒரேதீர்வு நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதுதான்.

நான் நிம்மதியாக வாழ்கிறேன் என்ற ஒரே ஒரு வார்த்தையில் எல்லா குழப்பங்களும் தீர்ந்துவிடுகின்றன.

நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.

நான் நிம்மதியாக வாழ்கிறேன்.

என் புத்தி தெளிவாக இருக்கிறது.

நான் புத்திசாலி

நான் பலசாலி

என்னிடத்தில் உலகில் உள்ள அனைவரும் அன்பாக இருக்கிறார்கள்.

நான் நல்லவன்.

நான் வல்லவன்

நான் என் குடும்பத்தாருடன் நிம்மதியாக வாழ்கிறேன்.

நான் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.

நான் ஆனந்தமாக இருக்கிறேன்.

என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நான் உதவி செய்கிறேன். அவர்களும் எனக்கு உதவி செய்கிறார்கள்.

எனது குடும்பம், எனது நண்பர்கள் எனது உறவினர்கள் எனது தொழில் வியாபாரம் சார்ந்த நண்பர்கள் அனைவரும் என்னிடத்தில் அன்பாக இருக்கிறார்கள்.

எனக்கு நல்ல பெயர் மட்டுமே கிடைக்கிறது.

எனக்கு தேவையான பொருளாதாரம் அபரிமிதமாக கிடைக்கிறது.

எனது வாழ்வின் இலட்சியங்கள் எல்லாம் விரைவில் நிறைவேறுகின்றன.

அனைத்து நல்ல விசயங்களையும் நல்ல மாதிரி மட்டுமே யோசியுங்கள்.

நல்ல வார்த்தைகளை வெள்ளைத் தாளில் எழுதி வைத்துக்கொண்டு அதை மீண்டும் மீண்டும் சொல்லி மனப்பாடம் செய்து கொள்ளுங்கள் பிறகு ரங்கராட்டினத்தில் சுற்றும்பொழுது கீழே வரும்பொழுது வித்தியாசமான உணர்வின்பொழுது இந்த விசயங்களை ஒருமுறை பதிவு செய்தால் ஒரு இலட்சம் முறை பதிவு செய்வதற்குச் சமம். நம்மை அறியாமலேயே நிம்மதியாக, அமைதியாக ஆரோக்கியமாக வாழ இது வழிவகுக்கும்.

. நமக்கு வரும் நல்லதிற்குப் புறம்பான விசயங்களை நாம் நல்ல விசயமாக மாற்றுவது எப்படி என்பதைப் புரிந்து கொள்வதுதான் இந்த ரங்கராட்டின ரகசியம். இதை மட்டும் தெளிவாக நாம் புரிந்து கொண்டால் இனிமேல் நிம்மதியாக மட்டுமே வாழ்வோம்.

  ரங்கராட்டின ரகசியத்தைப் பயன்படுத்தி இனிமேல் நிம்மதியாக வாழ்வோம். எதிரிகளை, துரோகிகளை வெல்வோம். இந்த உலகை அமைதியாக, நிம்மதியாக சந்தோசமாக மாற்றுவோம்.

எண்ணங்களால் மட்டுமே இந்த உலகை மாற்ற முடியுமே தவிர கத்தி, துப்பாக்கி ஆயுதங்கள் போன்றவை நமக்குத் தேவையே இல்லை. போட்டி, பொறாமை, பகை ஆகியவற்றை ஒழித்துவிட்டு ஒற்றுமையாக எவ்வளவு பேர் சேர்ந்து ஒரு கருத்தில் இந்த உலகம் நிம்மதியாக, சந்தோசமாக, அமைதியாக இருக்கவேண்டும் என்பதை நினைக்கிறோமோ அந்த அளவிற்கு இந்த உலகை மாற்ற முடியும்.

சுவாமியைப் பார்த்து நாம் அழும்பொழுது நம்  ஆழ்மனதிற்குச் செல்கிறோம். அப்பொழுது இறைவா என்னைக் காப்பாற்று என்று கண்ணீர் மல்க அழும்பொழுது ஆழ்மனதிற்குள் அது பதிவு செய்யப்பட்டு நடக்கிறது.

மந்திரங்களை 108 முறை  உச்சரிக்கிறார்கள்  ஒரேவிசயத்தை 108 முறை திரும்பதிரும்ப சொல்லும்பொழுது நம்முடைய ஆழ்மனதிற்குள் செல்கிறோம். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று கண்களை மூடி 108 முறை முழுகவனத்துடன் சொல்லும்பொழுது 108வது முறை அது நமது நடுமனதிற்குச் செல்கிறது. ஆனால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நாம் பதிவு செய்யும் பொழுது சில வினாடிகளில் அது பதிவாகிவிடுகிறது.

கெட்டதும் நல்லதே

கோபமும் நல்லதே

டென்சனும் நல்லதே

இன்று நமக்கு மிகப்பெரிய வரப் பிரசாதமாக சிறந்த ஞானம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதைப் பயன்படுத்தும்பொழுது கண்டிப்பாக நாம் நிம்மதியாக மட்டுமே வாழ முடியும்.
ரங்கராட்டின வித்தையைச் செய்யும் பொழுது .

* வார்த்தைகள் ஒவ்வொன்றும் நல்லவிதமாக, நல்ல விசயமாக இருக்கவேண்டும்

* ஒருமுறையாவது விபாசனா தியானத்திற்கு சென்று வரவேண்டும்.

* நமது ஆழ்மனதில் எது பதிவு செய்தாலும் நடக்கும் எனவே அது நல்ல விசயமாக மட்டுமே இருக்கவேண்டும்.

ரங்கராட்டின வித்தையைப் புரிந்து கொண்டு நாம் நிம்மதியாக ஆரோக்கியமாக, அமைதியாக, சந்தோசமாக, வாழ்நாள் முழுவதும் ஆனந்தமாக வாழ்வோம்.
மனதின் மணம்
விபாசனா

நன்றி

No comments:

Post a Comment