Monday, June 6, 2016

ஏழுமலையானுக்கு கோபுரம்இல்லாதது ஏன்?

திருப்பதி ஏழுமலையானுக்கு கோபுரம்
இல்லாததற்க்கு ஆதிசேஷனே
காரணம் !

வீர நரசிம்ம கஜபதி என்னும்
விஜயநகர மன்னர் ராமேஸ்வரத்திற்கு
யாத்திரை புறப்பட்டார். வரும் வழியில்
திருப்பதி பெருமாளை தரிசிக்க
மலையேறினார். ஏழுமலையானை தரிசித்த
பின், அங்கு கோபுரம் கட்ட
உத்தரவிட்டார்.

ராமேஸ்வரம்
யாத்திரை முடித்துவிட்டு, மீண்டும்
திருப்பதி வந்தார். கோபுரம் கட்டும் பணி
நடந்து கொண்டிருந்தது.
பெருமாளை தரிசித்த அவர்,
மலையிலேயே தங்கினார்.

அன்றிரவு கனவில் பாம்பு வடிவில்
தோன்றிய ஆதிசேஷன், “மன்னா! இந்த
மலையே என் உடம்பாகும். இங்கு கோபுரம்
கட்டினால் ஏற்படும் பாரத்தை
என்னால் தாங்க முடியாது,” என்று
சொல்லி விட்டு கருவறைக்குச்
சென்று எம்பெருமானின்
வலக்கையில் சுற்றிக்
கொண்டார்.

பதறி எழுந்த மன்னர், பண்டிதர்களை
அழைத்து கனவுக்கான விளக்கத்தை
கேட்டார். அவர்கள், “மன்னா!
கோபுரப்பணியை இப்போதே நிறுத்தி விடுவோம்.
ஆதிசேஷனை அமைதிப்படுத்தும் விதத்தில்
பரிகாரமாக தங்க நாகாபரணம்
ஒன்றைச் செய்து
பெருமாளுக்கு அணிந்து விடுவோம்.”
என்று கூறினர்.

அதன் படி, வீரசிம்ம
கஜபதி அளித்த நாகாபரணமே
இன்றும் ஏழுமலையானின் வலது திருக்
கரத்திற்கு அழகு சேர்க்கிறது

RAJAJI JS

No comments:

Post a Comment