* கடலில் பெய்யும் மழை பயனற்றது.
* பகலில் எரியும் தீபம் பயனற்றது.
* வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது.
* நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
* முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
* மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது.
தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
* பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது.
* அழகு, ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும். * நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை, கெட்ட நண்பர்களால் கெட்டு போகும்.
* முறையாக கற்காத கல்வி கெட்டு போகும்.
* சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
* வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.
--------சாணக்கிய நீதி.
Tuesday, June 14, 2016
சாணக்கிய நீதி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment