*நாம் இறந்த பின் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?*
😱மூளை
நீங்கள் இறந்த மறுநொடியே உங்கள் மூளை திடீரென விரிந்து இயக்கம் முடிவுறும்.
உடல் வெப்பம்
உங்கள் உடலில் வெட்பநிலை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1.6 ஃபாரன்ஹீட் அளவு குறைய ஆரம்பிக்கும்.😱
இதனால், இறந்தவர்களின் உடல் மெல்ல, மெல்ல குளிர்ந்த நிலைக்கு செல்கிறது.
உடல் செல்கள்
ஆக்ஸிஜன் சப்ளை இல்லாததால் மெல்ல, மெல்ல உங்கள் உடல் செல்கள் இறக்க ஆரம்பிக்கும். பிறகு உடைய ஆரம்பித்து, வெளியேற ஆரம்பிக்கும், இதனால் தான் உடல் அழுக ஆரம்பிக்கிறது
கழிவு
சில சமயங்களில் தசை இலகுவாக ஆகும் தருணத்தில், இறந்தவரின் உடலில் இருந்து மலம் அல்லது சிறுநீரும் வெளியேறும்.🚽
தோல்
தோல் மெல்ல, மெல்ல ஈரத்தன்மை இழந்து, சுருங்க ஆரம்பிக்கும். இதனால், இறந்தவர்களின் கூந்தலும், நகமும் வளர்வது போன்ற தோற்றமளிக்கும்.
பழுப்பு நிறம்
புவி ஈர்ப்பு, இறந்தவர்களின் இரத்தத்தை கீழ் நோக்கி இழுக்கும். இதனால் சருமத்தின் மேற்புறம் பழுப்பு நிறமாக மாற ஆரம்பிக்கும்..
துர்நாற்றம்
உடல் அழுகும் போது ப்யுட்ரெஸைனை, காலரா நுண்ணுயிர் நச்சு இரசாயனங்கள் வெளியேறும். இதன் காரணத்தால் தான் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
புழுக்கள்
புழுக்கள், வண்டுகள் இறந்தவரின் உடலை உண்ண ஆரம்பிக்கும். புழுக்கள் இறந்தவரின் 60% உடலை ஒரே வாரத்தில் செரித்துவிடும்.
ஊதா, கருப்பு
மெல், மெல்ல இறந்தவரின் உடல் ஊதா மற்றும் கருப்பு நிறமாக மாறும். இதற்கு காரணம், பாக்டீரியாக்கள் தொடர்ந்து இறந்தவரின் உடலை செரிப்பது தான்.
முடி ஓரிரு வாரத்தில் இறந்தவரின் உடலில் இருந்து முடிகள் மொத்தமும் உதிர்ந்துவிடும்.
மாதத்தில் உண்டாகும் மாற்றங்கள்!
நான்கு மாதங்களில் இறந்தவரின் உடலில் இருக்கும் மொத்த தசை மற்றும் சருமம் அழுகி, வெறும் எலும்புக்கூடு மட்டுமே இருக்கும்
No comments:
Post a Comment