ராஜ்கிரண்
இவர் பெரும்பாலும் வேட்டி சட்டையில்தான் இருப்பார்
இதை உணர்ந்த முண்ணனி வேட்டி நிறுவனம் இவரை அனுகியது.
பெரும்பாலும் நாங்கள் பத்துலட்சம் தருவதுண்டு உங்களுக்கு பதினைந்து லட்சம் தருகிறோம்..விளம்பரத்திற்கு நடியுங்கள் ஒருநாள்தான் ஷூட்டிங் என்றார்கள்.ராஜ்கிரன் மறுத்துவிட்டார்.
அவர்கள் விடுவதாயில்லை,25 லட்சம் தருகிறோம்..என்று சொல்ல..அப்போதும் சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார் ராஜ்கிரன்.
மேலாளரிடம் தகவல் போனது..
வேட்டி கட்டும் ராஜ்கிரன்தான் பொறுத்தமானவர் என்று...மீண்டும் வந்து சார் 50 லட்சம் தருகிறோம்..நீங்கள் மறுக்காதீர்கள்..என்று கேட்க...
அப்போதும், எனக்கு விருப்பமில்லை என்று ராஜ்கிரன் சொல்ல...நிற்வாகத்தினர்..நிறுவனர்க்கு தகவல் தெரிவித்தனர்.
ஆச்சிரியப்பட்ட நிறுவனர்...கைபேசியில் ராஜ்கிரனை தொடர்புகொண்டார்.
ஒரு கோடி தருகிறோம்..ஒகேதானே...என்று கேட்க கொஞ்சமும் சலனமின்றி
எனக்கு வேண்டாமையா..விட்டுடுங்க என்றதும்...
மறுமுனையிலிருந்து என்ன சார் பிழைக்க தெரியாத ஆளா இருக்கிறீங்க...உங்களுக்கு இருக்கிற கடனை யோசிச்சீங்களா..நல்லா யோசிச்சு சொல்லுங்க என்றதும்
ராஜ்கிரன் சிரித்துக்கொண்டே இப்படி சொன்னார்
.
வேட்டி ஏழை பாலைங்க உடுத்துறது....எனக்கு கொடுக்குற ஒரு கோடிய அந்த வேட்டிலதான் வைப்பீங்க,பாவம் நூறு இருநூறுக்கு அதான் கிடைக்குது..அதுலேயும் மண் அள்ளி போடனுமா....
ராஜ்கிரன் சொல்ல வாயடைத்து போனர்.
.
No comments:
Post a Comment