Friday, June 24, 2016

சிதம்பரத்தில் 9 தங்க கலசங்கள் 9சக்தியை குறிக்கும்

*

*21600 தங்க ஓடுகள், மனிதன் ஒருநாளில் விடும் மூச்சுகளின் எண்ணிக்கையை குறிக்கும்

*72000 ஆணிகளால் ஓடு கோர்க்கபட்டுள்ளது, அது சுவாசத்துக்கு ஆதாரமாக இருக்ககூடிய நாடிகளை குறிக்கிறது....

*மனித இதயம் உடலுக்கு இடது புறமாக தள்ளியிருக்கிறது, சிதம்பர ஆலய கர்பக்கிரகமும் அப்படியே அமைந்துள்ளது...

*பொற்சபையில் ஆறுகாலம் ஸ்படிகலிங்கத்திற்க்கு அபிஷேகமும்,இரண்டாம் காலத்தில் இரத்தின சபாபதிக்கும் சேர்த்து அபிஷேகம் நடக்கும்...

*இறைவனுக்கு இரத்தின சபாபதி அபிஷேகம் நடக்கும் மண்டபத்தில் 18 தூண்கள் உண்டு இது18 புராணங்களை குறிக்கும்...

*முன்மண்டபத்தில் உள்ள அர்த்தமண்டபத்தில் ஆறு தூண்களும் ஆறு சாஸ்த்திரங்களை அடையாளம் காட்டுகின்றது...

*நடராசமூர்த்தி சன்னதிக்கு அருகே செல்வதற்க்கு அமைந்த ஜந்து படிக்கட்டு இவை பஞ்சாட்சரத்தின் (நம சிவாய)அடையாளம்...

*நடராசமூர்த்தி எழுந்தருளியுள்ள விமானத்திற்க்கு நான்கு தூண்கள் இவை நான்கு வேதங்களின் அடையாளம்...

நடராசமூர்த்தி வலக்கரத்தில் உடுக்கையும்,மற்றொரு வலக்கரத்தில் அபய முத்திரையும்,இடக்கரத்தில் அக்னியையும்,திருவடியை காட்டி தாண்டவ கோலத்தில் காட்சியளிக்கிறார்...

உடுக்கை--சிருஷ்டி--படைத்தல்
அபையகரம்--ஸ்திதி--காத்தல்
அக்னி--சம்ஹாரம்--அழித்தல்
ஊன்றிய திருவடி---மறைத்தலையும்
தூக்கிய திருவடி---அருளளையும் என ஜந்து தொழில்களையும் குறிக்கின்றன...

நெல்லை--முனி தாண்டவம்
திருப்பத்தூர்--கவுரி தாண்டவம்
மதுரை--சந்தியா தாண்டவம்
திருவாலங்காடு--சம்ஹார தாண்டவம்
குற்றாலம்--திரிபுரத்தாண்டவம்
சிதம்பரம் ஆனந்த தாண்டவம்...

பித்த னைப்பெருங் காடரங் காவுடை

முத்த னைமுளை வெண்மதி சூடியைச்

சித்த னைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற

அத்த னையடி யேன்மறந் துய்வனோ......

ஹரி ஓம் நமோ நாராயணா

No comments:

Post a Comment