Sunday, June 19, 2016

முத்திரைகளை பயிலும் முறை


1. “பத்மாசனம்” போன்ற
உட்காரும் ஆசனங்களில்
அமர்ந்து
யோகமுத்திரைகளை
செய்வது சிறந்தது.
ஆனால் நீங்கள் பல
நிலைகளில்
முத்திரைகளை
செய்யலாம். டி.வி.
பார்க்கும் போது,
நிற்கும் போது,
பயணிக்கும் போதும்
செய்யலாம்.
2. ஞான முத்திரைதவிர
மற்றவைகளை
ஒரேசமயத்தில் இரண்டு
கைகளை உபயோகித்து
செய்யலாம்.
3. எல்லா பருவத்தினரும்,
எப்போது
வேண்டுமானால்
முத்திரைகளை
செய்யலாம். விலக்கு
“சூன்ய முத்திரை”.
இதுமட்டும் காது
கேட்காதவர்கள் மட்டும்
செய்ய வேண்டிய
பயிற்சி.
4. எல்லா
முத்திரைகளையும்,
அக்னியை குறிப்பிடும்
கட்டைவிரலை சேர்த்துத்
தான் செய்ய வேண்டும்.
5. இவற்றை செய்யும்
போது, விரலோடு
விரலை மெதுவாக
தொடவும். அழுத்த
வேண்டாம்.
6. முதலில், ஆரம்பத்தில்
10-15 நிமிடம் இந்த
யோகமுத்திரை
பயிற்சிகளை
செய்யவும். பிறகு
தினமும் 45
நிமிடமாவது செய்ய
வேண்டும்.
7. வலதுகை
முத்திரைகள் உடலின்
இடது பக்க
அவயங்களுக்கு பலன்
அளிக்கும். அதே போல்
இடது கையினால்
செய்யப்படும் பயிற்சிகள்
வடபக்க உறுப்புகளுக்கு
பலன் கொடுக்கும்.
பிரித்வி முத்திரை
செய்முறை:
பிரித்வி என்பது
பூமியைக் குறிக்கும்.
உங்களுடைய மோதிர
விரலின் நுனியால்,
கட்டை விரலின்
நுனியைத் தொடுங்கள்.
மற்ற மூன்று விரல்களும்
விரிந்து நேராக இருக்க
வேண்டும். இந்த
முத்திரை செய்வதற்கு
குறிப்பிட்ட நேர அளவு
கிடையாது.
எப்போது
வேண்டுமானாலும்
செய்யலாம். எவ்வளவு
நேரம் வேண்டுமானலும்
செய்யலாம். ஆரம்பத்தில்
15 நிமிடத்தில் செய்தால்
போதுமானது.
நன்மைகள் :
இந்த முத்திரை உடல்
பலவீனத்தைக்
குறைக்கும். உங்கள்
தோலின் நிறத்தில்
பளபளப்பையும்
மினுமினுப்பையும்
ஏற்படுத்தும். உங்கள்
உடலை
சுறுசுறுப்புடன்
ஆரோக்கியமாக இருக்கச்
செய்யும். நீங்கள்
ஒல்லியாக இருந்தால்
உங்கள் உடலின் எடை
அதிகரிக்கச் செய்யும்.
வர்ணா முத்திரை
வர்ணன் என்பது நீரைக்
குறிக்கும்.
செய்முறை:
உங்கள் சுண்டு விரலின்
நுனி, கட்டை விரலின்
நுனியைத் தொட
வேண்டும். மற்ற மூன்று
விரல்கள் விரிந்து
நேராக இருக்க
வேண்டும். இந்த
முத்திரை செய்வதால்
உடலில் நீர்த்தன்மையைத்
தக்க வைப்பதோடு
உடலில் நீரின்மையால்
ஏற்படும்
நோய்களிலிருந்தும்
காக்கும்.
இந்த முத்திரை செய்ய
குறிப்பிட்ட நேர
வரையறை கிடையாது.
எப்போது
வேண்டுமானாலும்
செய்யலாம். எவ்வளவு
நேரம்
வேண்டுமானாலும்
செய்யலாம்.
நன்மைகள்: உங்கள்
உடலினுள் சுத்தத்தை
நிலை நிறுத்தச்
செய்யும். வாயுத்
தொல்லையால் ஏற்படும்
வலிகளைக்
கட்டுப்படுத்தும். உங்கள்
முகத்தில் சுருக்கம்
ஏற்படாமல் காக்கும்.
அறிவு முத்திரை
செய்முறை:
முதலில் விரிப்பில் அமர
வேண்டும். பின்னர்
ஆள்காட்டி விரல் நுனி
கொண்டு கட்டை விரல்
நுனியை தொடவும்.
மற்ற மூன்று விரல்களும்
நேராக இருக்க
வேண்டும். கட்டை விரல்
நுனிகள் பிட்யூட்டரி
மற்றும் எண்டாக்ரின்
சுரப்பிகளுக்கு
ஆதாரம்.
ஆள்காட்டி விரல்
நுனியால் அழுத்தம்
கொடுக்கும்போது
மேற்கண்ட சுரப்பிகளின்
இயக்கம்
சுறுசுறுப்படையும்.
இந்த முத்திரையை
நின்ற நிலை, உட்கார்ந்த
நிலை, படுத்த
நிலையிலும்
செய்யலாம். தினமும் 20
முதல் 30 நிமிடம் வரை
செய்தால்
போதுமானது.
பயன்கள்:
இந்த முத்திரையை
தொடர்ந்து செய்து
வந்தால் அறிவு
கூர்மையாகி
நினைவாற்றலை
அதிகரிக்கும்.
தூக்கமின்மையை
போக்கும். கோபம்
குறையும்.
மோகினி முத்திரை
செய்முறை:
விரிப்பில் நேராக
அமர்ந்து இந்த
முத்திரையினை இரு
கைகளிலும் வைத்துக்
கொண்டு கண்களை
மூடி, மனக் கண்ணால்
புருவ மத்தியைப்
பார்த்து ”ஓம்” என்ற
மந்திரத்தை மனதிற்குள்
ஜெபிக்க வேண்டும்.
இவ்வாறு 30 நிமிடம்
செய்யலாம்.
ஆரம்பத்தில் 15 நிமிடம்
செய்தால்
போதுமானது. நேரம்
கிடைக்கும் போது
எல்லாம் இந்த
முத்திரையை
செய்யலாம். ஆனால்
அதிகாலையில் இந்த
முத்திரையை செய்தால்
நல்ல பலன் கிடைக்கும்.
பயன்கள்: தியானம்
செய்தால் கிடைக்கும்
அனைத்து பலன்களும்
கிடைக்கும். மனதிற்கு
அமைதி
கிடைக்கும்.கோபம்
குறைவும்.
மகாஷீர்ஸ் முத்திரை
செய்முறை:
முதலில் விரிப்பில்
அமர்ந்து மோதிர
விரலை மடித்து
பெருவிரலின்
அடிப்பாகத்தைத் தொட
வேண்டும்.
பெருவிரலின்
நுனிப்பகுதியால்
ஆட்காட்டி விரலின்
நுனிப்பகுதியையும்
நடுவிரலின்
நுனிப்பகுதியையும்
மெதுவாக தொட
வேண்டும்.
சுண்டுவிரல் மட்டும்
நேராக இருக்க
வேண்டும். இந்த
முத்திரையை 30 நிமிடம்
செய்ய வேண்டும். எந்த
நேரத்தில்
வேண்டுமென்றாலும்
இந்த முத்திரையை
செய்யலாம்.
பயன்கள்:
இந்த முத்திரை
செய்வதால் சைனஸ்
பிரச்சனை குறையும்.
தலை சம்பந்தப்பட்ட
நோய்களை
குணப்படுத்த வல்லது
இந்த முத்திரை.
எலும்புகளுக்கு சக்தி
தரும் ஆகாய
முத்திரை
செய்முறை….
முதலில் விரிப்பில்
அமர்ந்து கொண்டு கை
பெருவிரலின்
நுனிப்பகுதியால்
நடுவிரலின்
நுனிப்பகுதியை
மெதுவாக தொட
வேண்டும். மற்ற மூன்று
விரல்களும்
நீட்டியபடியே இருக்க
வேண்டும். இந்த
நிலையில் 30 நிமிடங்கள்
வரை இருக்க வேண்டும்.
இந்த முத்திரையை எந்த
நேரத்தில்
வேண்டுமென்றாலும்
செய்யலாம்.
பயன்கள்……பெண்களுக்கு
மாதவிடாய் நின்ற பின்
எலும்புகளில் ஏற்படும்
சிறிய துவாரங்கள்
மற்றும் எலும்புகள்
சுலபமாக உடையும்.
இந்த நோயில் இருந்து
இந்த முத்திரை நல்ல
நிவாரணம் தரும்.
மேலும் உண்ணும்
உணவில் உள்ள
கால்சியம், பாஸ்பரஸை
கிரகித்து
எலும்புகளுக்குச் சக்தி
தரும்.

No comments:

Post a Comment