ரகசியம் ஈர்ப்பு விதி...!!!
இன்று ஒரு வாக்குறுதி
"தள்ளி போடுவதை்தவிர்ப்பேன்"
ஒரு வெற்றிவீரருக்கும் பங்கெடுத்துக் கொண்டவருக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு சுய ஒழுங்குமுறைதான். எழுத்தாளர் ஜான் எர்ஷ்கின் சொன்னார் ," மிக எளிமையாகச் சொன்னால் தலைவன்என்பவனுக்கு எங்கே போகவேண்டும்என்று தெரிந்தவுடன் கிளம்பிபோய்விடுகிறான்"
ஐந்து அம்சத்திட்டம்
தள்ளிப்போடும் விலங்குகளை தகர்த்தெறிவது எப்படி?
இதோ ஐந்து வழிகள்
1குறுகிய காலத்திட்டத்தை பயன்படுத்துங்கள்..
அடுத்த ஐந்துநிமிடத்தில் என்ன செய்யபோகிறோம் என்று உங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.
2. தன கையே தனக்கு உதவி
உதவிக்காக காத்திருக்காதீர்கள் . சார்லஸ் டி கால் சொன்னது போல் " பலபேர் செய்தால் விளைவு மெத்தனம்: ஒருவன் செய்தால் விளைவு செயல்'"
3. செய்ய அஞ்சும் வேலையை செய்யுங்கள்.
உங்கல் கால அட்டவணையில் எப்பாடு பட்டும் செய்து முடித்து விடுவேன் என்றுஎழுதிவைத்துக் கொள்ளுங்கள்.
4.தவறுகளை கண்டு வருந்தாதீர்கள்.
குறையில்லாத செயல்பாட்டை விட உடனடி செயல்பாடு சிறந்தது.
5. ரொம்பவும் யோசித்துக்கொண்டிருக்காமல் உடனே செயலில் இறங்குங்கள்.
மாமன்னர் அலெக்ஸ்சாண்டரை எப்படி உலகை வெல்ல முடிந்தது என்று கேட்டபோது அவர்" தாமதம் செய்யாததனால் தான்" என்று பதிலளித்தார்.
என்னதடைகள் வரலாம்என்று சற்று சிந்தித்தபின் உடனடியாக செயலில் இறங்குங்கள்..
No comments:
Post a Comment