#யார் #இந்த #சித்தர்கள்... ?
*****************************
{ காலத்தால் அழியாத மாபெரும் ரகசியம். }
சித்தர்கள் பற்றி நமக்குள் எழும் கேள்விகளும்
அதற்கான பதில்களும்... உணர்த்து
வாசியுங்கள் . பல உண்மைகள் புரியும் . இந்த அருமையான கேள்வியை கேட்டவர் நமது
நண்பர் indu krish . ஆன்மீகம் என்னும் கடலை
கடக்க நினைக்கும் அணைத்து மனிதர்களுக்கும்
மனதில் கட்டாயம் இந்த கேள்விகள் எழுந்தே
தீரும். விளக்கம் அளிக்கும் வாய்ப்பை
கொடுத்தமைக்கு ஈசனுக்கு நன்றியோடு இந்த
பதிவை பதிக்கிறேன்.
சிவம் –
*********
சிவம் என்றால் மங்கள் என்பது பொதுவான
பொருள். ஆனால் உண்மையில் சிவன் என்றால்
“உயிர்” என்பதே சூட்சுமப் பொருள். சிவன்
கோவிலுக்கு போகிறேன், சிவனை
வழிபடப்போகிறேன் என்றால் உயிரின்
மூலத்தை தேடிப்போகிறேன், உயிரை உணரப்
போகிறேன் என்பதே பொருளாகும்.
அந்த உயிரை உணரத் தொடங்கி விட்டால்
பிறகு உடம்பு ஒரு பொருட்டே இல்லை.
உடம்பை என்ன வேண்டுமானாலும்
செய்யலாம். ஒரு குரங்காட்டி தன் குரங்கை
ஆட்டி வைப்பது போல ஆட்டிவைக்கலாம்.
உயிர் மூலத்தை உணர முடிந்தவரை சித்தன்
எங்கிறோம். அதனால் தான் ஒரு சித்தனுக்கு
நீரில் நடப்பதும் காற்றில் மிதப்பதும்,
கூடுவிட்டு கூடு பாய்வதும் சாதாரண ஒரு
சாகசமாகிறது.!
, சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன
தொடர்பு? அதாவது சிவன் இருக்கும்
இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன்
காரணம் என்ன?
யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் கடவுள்
அல்ல.... ஆதி சித்தன். அதாவது முதல்
சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை
காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை
அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக
இறைவனை அடைய முடியும் என்பதை
நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த
முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள்
சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக
தான் பார்கிறார்கள்.... குரு இருக்கும் இடத்தில
தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான்
இந்த நிலை.
ரகசியம் என்கிற வார்த்தைக்கு ஒருவருக்கு
மட்டுமே தெரிந்த உண்மை என்பதே
பொருளாகும். ஒருவருக்கு மட்டுமே
தெரிந்திருக்கும் ஒரு விஷயம் பொய்யாக
இருக்கும் பக்ஷத்தில் அது கூட ரகசியமாகாது.
அதேபோல ஒளிந்து கிடக்கும் உண்மைகள்
எல்லாமும் கூட ரகசியங்கள் தான். அதை நாம்
உணர முடிவதில் தான் சூட்சுமம்
இருக்கிறது...
ரகசியம் என்ற உடனேயே எல்லோருக்கும்
சிதம்பர ரகசியம் என்கிற சொற்பதம் டான்
முதலில் நினைவுக்கு வரும். ஆனால் அந்த
சிதம்பர ரகசியத்தை முற்றாக ஒருவர் கூட
இது வரையில் அறிந்திருக்கவில்லை.
ஒரு ரகசியம் மட்டுமே அங்கு இருந்தால் அதை
ஒரு வேலை கண்டு பிடித்திருக்கலாம்.
பலப்பல ரகசியங்கள் புதைந்திருந்தால்
எப்படிக் கண்டறிய முடியும்?
ஆனாலும் சிதம்பர ரகசியங்கள் பலவற்றை
அறிந்த சிலரும் இருக்கவே செய்கின்றனர்.
அந்த ரகசியங்கள்...?
**********************
சிதம்பரம் என்றவுடன் ரகசியம் என்கிற
வார்த்தையும் சேர்ந்து நினைவுக்கு வரும்!
சிதம்பரத்தை பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய
ஸ்தலமாக குறிப்பிடுவார்கள். அங்குள்ள
சன்னதிக்குள்ளும் ஒரு வெற்றிடத்தை காட்டி
வணங்கச் சொல்வார்கள். அதுதான் பிரதான
ரகசியம்! அதாவது இறைவன் ஆகாயம்
போன்றவன். ஆகாயம் தான் நீள அகல உயர
என்னும் எந்த பரிமாணங்களும் இல்லாதது.
அவைகளுக்கும் அடங்காதது. அதன் ஆரம்பம்
எது என்றே தெரியாததால் முடிவும் அதற்கு
இல்லை. நம்முடைய பூமியில் இருந்து சூரிய
சந்திரர்கள் தொடங்கி கோடிக்கணக்கான
நட்சத்திரங்கள் வரை எல்லாமே ஆகாயத்தில்
தான் இருக்கின்றன. ஆகாயம் என்று ஒன்று
இல்லாவிட்டால் நாமும் பூமியில்
நடமாடமுடியாது. பூமிக்குள் வாழும் மண்
புழுக்களைப் போல வாழவும் நம்மால்
முடியாது. எனவே எப்படிப் பார்த்தாலும்
ஆகாயமே அனைத்திலும் விஞ்சி இருக்கிறது.
இதை சற்று மாற்றி கண்களுக்கு புலனாகாததே
இந்த உலகில் அதிகம் எனலாம். புலனாவது
மிக மிகச் குறைவே. இப்படி புலனாகாத,
புலப்படாத ஒன்றாக விளங்கும் ஆகாயத்திலோ
ஆயிரமாயிரம் ரகசியங்கள் இருக்கின்றன.!
1.கேள்வி -
************
சித்தர்கள் என்பவர்களுக்கு சரியான பொருள்
என்ன? இவர்கள் வேறு, முனிவர்கள் வேறா?
பதில் - சித்தம் எனப்படும் மனதை. ஒரு
கட்டுக்குள் அடக்கி ஆளத் தெரிந்தவர்களையே
சித்தர்கள் என்கிறோம். தவத்தின் மூலமாகவும்
மனதை அடக்கலாம். இப்படி மனதை அடக்க
முனைந்து தவம் செய்பவர்கள் முனிவர்கள்.
சித்தர்கள் வேறு முனிவர்கள் வேறு!
சித்தர்களுக்கு இந்த வழிதான் என்று ஒரு
கட்டுப்பாடு கிடையாது. எந்த வழியிலும்
அவர்களால் செல்ல முடியும். கடவுளே
இல்லை என்றும் சில சித்தர்கள்
கூறியுள்ளனர். முனிவர்கள் அப்படிக்
கிடையாது. ஒரு தெய்வத்தை நம்பி மூல
மந்திரத்தால் அந்த தெய்வத்தின் தரிசனம்
பெறவோ, இல்லை வரம் பெறவோ
விரும்புகிறவர்கள் முனிவர்கள்.
2.கேள்வி -
************
சித்தர்கள் இப்போதும் இருக்கிறார்களா?
பதில் - எப்போதும் இருப்பவர்களே சித்தர்கள்.
அவர்கள் காலத்தை வென்றவர்கள். உடம்புக்கு
என்று பஞ்ச பூத விதிகள் உள்ளன. அதனை
காயகல்பன்களால் அதிகபட்சம் 140 ஆண்டு
வரை உயிருடன் பேணி காக்கலாம்.
அதன்பின் உடம்பை உதிர்த்து விடுவதே
நல்லது. சூட்சும சரீரம் என்று நம்
எல்லோருக்குமே உண்டு. அதனுள் அடங்கி
வாழத் தெரிந்தவர்களே சித்தர்கள்.
3.கேள்வி -
*************
சித்தர்கள் மொத்தம் 18. பேர் தானா... ஆனால்,
நூற்றுக் கணக்கில் இருப்பதுபோல் தெரிகிறதே.
இது என்ன? 18 என்கிற ஒரு கணக்கு?
பதில் - நூற்றுக்கணக்கான சித்தர்கள்
இருக்கவே செய்கிறார்கள். ஆயினும் 18 என்ற
என்னுக்குள் அடைக்கப்பட்ட பதினெண்
சித்தர்களை விளங்கிக் கொண்டு அவர்களின்
எவர் வழி நடந்தாலும் உலக பந்தங்களில்
இருந்து விடுதலை பெற்று விடலாம்.
பதினெட்டு என்பது ஒரு சூட்சுமமான எண்.
ஒன்று முதல் ஒன்பது வரை தான் எண்கள்
உள்ளன. பிறகு பூஜ்யம் கண்டறியப்பட்டது.
ஆக. இந்த ஒன்பது எங்களையும்
பூஜ்ஜியத்தையும் கூட்டி, கழித்து, வகுத்து
பெருக்கியே பல கோடிகளை நாம் அடைந்து
விட முடியும்.
இதன் துவக்கம்தான் பதினெட்டு.
அதாவது பதினெட்டு என்பது ஒன்பதின்
பெருக்கப்பட்ட வடிவமாகும். ஒன்பதையும்,
ஒன்பதையும் கூட்டினாலும் பதினெட்டுதான்
வரும். இந்த 18க்குள் அதாவது 1 லிருந்து
8க்குள் மற்ற அவ்வளவு எண்களும் உள்ளன.
இந்த எட்டையும் ஒன்றையும் கூட்டினால் 9
வருகிறது. ஆக, இந்த 18 என்பது கூட்டல்,
கழித்தல், பெருக்கல், வகுத்தலை தன்னுள்
கொண்டிருப்பதாகும். ஏன் இது 19, 20, 21
என்று தொடர்கின்ற எண்களுக்கும் பொருந்தும்
எனலாம். உண்மைதான்.
ஆனால் 18 தான் முதல் வடிவம் அடுத்து 1
என்ற எண் சூரியனைக் குறிக்கும். 8.ஆம் எண்
சனியனைக் குறிக்கும். சூரியன் ஆத்மகாரகன்.
சனி ஆயுள்காரகன்.
ரகசியம் –
************
ரகசியம் என்ற வார்த்தையே மனதுக்குள் ஒரு
பரபரப்பை தரவல்லதாகும். மனித
மனங்களுக்கு ரகசியங்களை அறிவதில்
எப்போதுமே ஆர்வம் அதிகம். ஒரு ஆச்சர்யம்
என்ன வென்றால் ஒவ்வொரு மனிதனும் தன்
உள்ளங்கையிலேயே பல ரகசியங்களை
ஒழித்து வைத்துக் கொண்டிருக்கிறான். ரேகை
சாஸ்த்திரம் தெரிந்தவர்களுக்கு அந்த
ரகசியங்களை அறிந்து கொள்வது சுலபம்.
சித்த ரகசியங்களுக்கு ஒரு அளவில்லை.
ரகசியம் என்றாலே அது எழுத்தில் வராது.
ஆகவே அவைகளை அவர்கள் எழுதி வைக்க
விரும்பியதில்லை. மாறாக, சில ரகசியங்களை
அவர்கள் ஒளித்து வைத்துவிட்டுப்
போயிருக்கிறார்கள். அதுவும் சில பாடல்களில்
மட்டும்... அந்த பாடல்களை நாம்
விளங்கிக்கொள்ளத் தனி அறிவு வேண்டும்.
எது சித்தம் என்பது நமக்குத் தெரியாத
வரையில், அதுவும் நமக்குத் தெரியாமலே
இருக்கும்.
உதாரணமாக “ ஆதி “ என்கிற சொல்லுக்கு
ஆரம்பம், தொடக்கம், மிக மிக
முதன்மைப்பட்டது என்று தான் பொருள்
சொல்வோம். ஆனால் பெரும் நெருப்பு என்றும்
இதைப் பொருள் கொள்ளலாம். அதற்கு
சொல்லை பிரித்துப்பார்க்கத் தெரிய வேண்டும்.
ஆ+தீ என்பதே ஆதி என்பர். தீ”யாகிய நெருப்பு
எப்படி ஆவுடன் கூடும் போது தன் நீட்சியை
இழந்து தீ”யாக மட்டும் ஆகிறது என்று
கேட்கக் கூடாது. இலக்கணப்படி பார்க்கும்
போது இதில் பிழை தெரியலாம். ஆனால்
ரகசியத்தை ஒழிப்பதுதான் அவர்களுக்கு
நோக்கம், நமக்கும் சித்த அறிவு வசப்படும்
பட்சத்தில் இதை சரியாகப் புரிந்து அந்த
ரகசியத்தையும் புரிந்து கொள்வோம்.!
4.கேள்வி –
*************
சித்த சாகசங்கள் என்று எதையெல்லாம்
சொல்லலாம்?
பதில் – அவைகள் கணக்கிலடங்காதவை!
ஆயினும் அஷ்டமாசித்திகளைச் குறிப்பிட்டு
சொல்லலாம். “ அணிமா, மகிமா, இலஹிமா,
கரிமா, பிராகாமியம், வசித்வம், பிராப்தி,
ஈசத்வம். என்கிற எட்டு சித்திகளை தான்
அஷ்டமா சித்தி என்பார்கள். அதாவது கடுகு
போலச் சிறுத்துபோவது, விஸ்வரூபம்
எடுத்து நிற்பது, மலைபோல கனப்பது,
பஞ்சுபோல மிதப்பது, கூடுவிட்டு கூடு
பாய்வது, வசியப்படுத்துவது, வேண்டியதை
அடைவது, கடவுளாவே ஆகிவிடுவது
என்பவைதான் அவைகள்.
நமது புராணங்களில் இவைகளை பல
இடங்களில் காணலாம். அனுமனின்
விஸ்வரூபம், திருமூலரின் கூடு விட்டு
கூடு புகுந்த விஷயம், திருநாவுக்கரசர்
கடலில் மிதந்த அனுபவம் இப்படிப்பட்டவைக
ள் அஷ்டமாசித்திகள் சார்ந்ததே.
சிலருக்கு எல்லாமே விரைவாக அலுத்துப்
போய்விடும். நவரசமான சமையலாகட்டும்,
சொகுசான பயனமாகட்டும், பாட்டுக் கேட்பது,
நடனம் பார்ப்பது, ஊரைச்சுர்ருவது, அரட்டை
அடிப்பது, நீண்ட தூக்கத்தில் அழ்ந்து போவது
என்று மனிதர்கள் விரும்பும் எல்லா விதமான
சுகங்களுமே ஒரு கட்டத்தில் அலுத்துப் போய்
மனதில் ஒரு வெறுமை உடர்வு சூழத்
தொடங்கும்.
இந்த வெறுமை உணர்ச்சிதான் சித்தத்தை நாம்
உற்று கவனிக்கத் தொடங்குவதன்
ஆரம்பமாகும். எல்லாமே அலுத்துப் போகிறது.
எதனாலும் நீடித்த நிலையான இன்பத்தைத் தர
முடியவில்லை.
தித்திப்பு பிடிக்கும் என்பதற்காக, அதையே
சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியவில்லை.
எவ்வளவு தான் வயிறு நிரம்பச்
சாப்பிட்டாலும் திரும்பவும் பசிக்கிறது.
கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும்,
உணர்ந்தாலும், உணராவிட்டாலும் உடலில்
மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுக்கவோ,
தவிர்க்கவோ முடியவில்லை. இதைப் பற்றி
எல்லாம் ஆழ்ந்து சிந்திக்க தொடங்கும்
போதும் சித்தம் விழித்துக்கொண்ட
ு விடுகிறது.
சித்தம் விழித்துக் கொள்வது அவ்வளவு
சுலபமல்ல! ஒரு வகையில் அது அருள்
சார்ந்ததும் கூட.
5.கேள்வி –
*************
நான் சித்தனாக விரும்புகிறேன். அதற்கு
முதலில் நான் என்ன செய்ய வேண்டும்?
பதில் – முதலில் சித்தம் பற்றியும். சித்தர்கள்
பற்றியும் அறிந்து கொள்ளுங்கள். சித்தனாவது
என்பது எளிதான விஷயமல்ல. அதற்காக அது
மிக கடினமானதும் அல்ல. ஆனால்
ஆசைப்படுவதெல்லாம் சித்தம் நோக்கிச்
செல்ல உதவாது. அது விதியின் கைகளில்
உள்ள உன்னதம். கல்லூரியில் படித்துப் பெற
அது பட்டம் அல்ல. கடைகளில் விலைக்கு
வாங்கிட அது பொன்னோ பொருளோ அல்ல.
அது அறிவு நிலை! அதை பக்தியின்
துணையோடு அணுகவேண்டும்.
ஒருவரிடம் சித்தம் விழித்துக் கொள்ள
ஏராளமான தாக்கங்கள் தேவைப்படுகின்றன.
எவ்வளவு தாக்கங்கள் ஏற்பட்ட போதிலும்
நம்மில் பலர் கேட்டுக் கொள்ள வேண்டிய
கேள்வியை கேட்டுக் கொள்வதேயில்லை.
பசிக்கிறது சாப்பிடுகிறோம், திரும்பவும்
பசிக்கிறது – திரும்பவும் சாப்பிடுகிறோம்.
தொடர்ந்து விடாமல் பசிக்கிறது. பசிக்கும்
போதெல்லாம் நாமெல்லாருமே சாப்பிடத்தான்
செய்கிறோம். – சொல்லப்போனால்
சாப்பிடத்தான் வாழ்க்கை என்றும்
கருதுகின்றோம்.
ஏன் பசிக்கிறது, இந்த பசியை வெல்ல
முடியாதா? அதற்கு என்ன வழி என்றெல்லாம்
நாம் கேட்டுக் கொள்வதேயில்லை. சித்தம்
வித்துக் கொண்டவர்களுக்கோ இதுதான்
பிரதான கேள்வி. அன்றாடம் உண்ணவும்,
உறங்கவும் தானா வாழ்க்கை? இல்லை...
அளப்பரிய ஆற்றல் கொண்டது மனித மனம்.
அதனால் எதை வேண்டுமானாலும்
சாதிக்கலாம்.
ஆனால் நம் மனதை நாம் அற்ப சோகங்கள்,
மகிழ்ச்சிகளில் மட்டுமே வைத்திருக்கிறோம்...
இவைகளுக்கு நடுவே முடிந்த மட்டும் கனவு
காண்கிறோம். மனதை இவைகளைக் கடந்து
இயக்கவேண்டும். அதற்கு மனமானது நமக்கு
புரியவேண்டும். எனவே மனதை அடக்கி அதை
புரிய முயன்றனர்.
அது பாய்ந்து பாய்ந்து ஓட முற்பட்ட
போதெல்லாம் கட்டுப்பாடு என்னும்
உறுதியான சங்கிலியால் இழுத்துக் கட்டினர்.
மனதை அடக்க அடக்க அதன் ஆற்றலும்
அதிகரித்தது. புரியாத எல்லாமும் புரியத்
தொடங்கியது என்ன அது?
6.கேள்வி –
*************
சித்தத்தை ஒரு கல்வியாக போதிக்க
முடியாதா?
பதில் – காற்றை கையில் பிடிக்க முடியாதா?
சப்தத்தை கைகளால் பார்க்க முடியாதா? என்று
கேட்பதைப் போன்ற கேள்வி இது?
சித்த விலாசம் என்பது ஏட்டுக் கல்வியல்ல.
மேலான எண்ணத்தில் உருவாகி அந்த
எண்ணங்களாலேயே பல்கிப் பெருகி பின்
மொத்த எண்ணங்களுமே தொலைந்து போய்
மனமே ஒரு காலிப்பாத்திரம் போல
வெறுமையாகி விடும் அதிசயம் அது.
சித்தம் தெளிய, சித்தம் புலப்பட, சித்தம்
வசப்பட, சித்தம் பலப்பட, சித்தம் அடங்கிட,
சித்தம் ஒளிபெற விதிப்பாடும், குருவருளும்
பின் இறையருளும் பெரிதும் முக்கியம்! அது
இல்லாத உலகின் ஏட்டுக் கல்வியில்
சூரர்களாக வேண்டுமானால் நாம் திகழலாம்.
சித்தம் ஒரு சூரியனாய் எட்ட முடியாத
உயரத்தில் தான் இருக்கும்.
மனதை அடக்க அடக்க அதற்கு எப்படிப்பட்ட
சக்திகள் எல்லாம் வரும் என்பதை மனதை
அடக்கிப் பார்க்காமல் உணரவே முடியாது.
இந்த உலகில் ஆயிரக்கணக்கான மொழிகளும்
அதனுள் லட்சோப லட்சம் வார்த்தைகளும்
உள்ளன. இவைகளை பயன்படுத்தியே மனித
சமுதாயமும் மனதில் நினைப்பதை பேசியும்,
எழுதியும் வருகிறது.
இத்தனை மொழிகள் – வார்த்தைகள் இருந்தும்
சில அனுபவங்களையும், அதன் உணர்வு
நிலைகளையும் மிகச் சரியாக நம்மால்
விவரிக்க முடிவதில்லை. அதைப்போல்,
இதைப்போல் என்று நமக்கு தெரிந்த
உதாரணங்களைச் சொல்லிப் புரியவைக்க
முயல்கிறோம். ஆகாயத்தில் பறந்தது போல்
இருந்தது, தென் போல் தித்தித்தது. இப்படி
எல்லாம் தான் கூறுகிறோம்.
காரணம்... சில உணர்வு நிலைகளை விளக்கிட
வார்த்தைகளே இல்லை என்பதுதான். அதிலும்
சித்த யோகத்தில் அதன் அனுபவங்களை
வார்த்தைப்படுத்துவது ஆகாத காரியம். ஒரு
குறிப்பிட்ட யோகாசனமோ, இல்லை
மூளிகையோ, சித்த புருஷர் ஒருவரின்
பார்வைத் தீண்டலோ நம்முள் ஏற்படுத்தும்
தாக்கத்தை நாம் விவரிக்கவே முடியாது.
மனதைத் துளியும் எண்ணங்கள் இன்றி
வெறுமைக்கு ஆளாக்க வேண்டும். சிலருக்கு
தலையில் அடிபட்டு மூளைச் செல்கள்
பாதிக்கப்பட்டு எந்தவித எண்ணங்களும் இன்றி
இருப்பார்கள். சிலர் விபத்தில் கோமா
நிலையிலும் மனதில் எந்த எண்ணங்களும்
இன்றி இருப்பார்கள்.
இது சித்த யோக நிலையல்ல! மனதின் மீது
பிரக்ஞையோடு ஆதிக்கம் செலுத்தி
எண்ணங்களை அப்படியே அடக்கியும் கட்டிப்
போட்டும் எண்ணங் களற்று இருப்பதே
சித்தயோக நிலை. இப்படி ஒரு நிலையின்
போது உடல் நிலையில் நிலவும் மின்சார
கடியில் இருந்து உடம்பைச் சுற்றி தவழும்
ஆரா எனப்படும் அலை வெளிப்பாடு வரை
சகலத்திலும் மாற்றம் ஏற்படும்.
ரத்த ஓட்டத்திலும், இதய துடிப்பிலும் கூட
மாறுபட்ட தன்மை இருக்கும்.
இப்படி ஒரு நிலையில் தான் ஒரு பூ பூக்கும்
ஓசையில் இருந்து ஒரு குண்டூசி விழும்
சப்தத்தை கூட துளியமாகக் கேட்க முடியும்.
இங்கே தான் நம் எதிரில் இருப்பவர்களின்
மனதில் உள்ள எண்ண ஓட்டங்களையும் நாம்,
அவர்கள் கூறாமலே கேட்கும் ஆற்றல்
ஆரம்பமாகிறது!
7.கேள்வி -
*************
சைவம், வைஷ்ணவம், சாக்தம் போல சித்தமும்
வழி முறையா? இல்லை. அது ஒரு தவ
நிலையா?
நல்ல கேள்வி...
சித்தம் ஒரு வழிமுறை தான்... மிக மிக
பிரத்யேகமான ஒரு வழிமுறை என்றும்
கூறலாம். சைவத்துக்கு பெரிய புராணம்.
வைணவத்துக்கு நாலாயிர திவ்யபிரபந்தம்,
சாக்தத்துக்கு தேவி பாகவதம், கௌமாரத்துக்கு
திருப்புகழ் போல சித்தத்துக்கு பதினெண்
சித்தகளும் அவர்கள் பாடிய பாடல்களுமே
அடிப்படை.
இன்னொரு ஆச்சரியமான தகவல்! – சித்த
புருஷர்கள் மதம் கடந்தவர்களும் கூட.
பௌத்தத்தில் கூட ஏராளமான சித்த
புருஷர்கள் உண்டு.
தனக்குத் தானே விசாரமுற்று, தான் யார் எனும்
கேள்வியில் விழுந்து, உலகின் எந்த விதமான
மாயையும் பொருட்படுத்தாது பிறர் தயவின்றி
அல்லது ஒரு குருவின் தயவோடு தன்னை
கடைத்தேற்றிக் கொள்வதே சித்த மார்க்கம்.
பரிமளசாமி என்று ஒரு சித்தர். தென் ஆற்காடு
மாவட்டத்தில் சுற்றித் திரிந்தவர்.
இவரது பின்புலம் யாருக்கும் தெரியாது.
பொதுவாக சித்தர்களின் பின்புலங்கள்
யாருக்கும் தெரிவதே இல்லை. நதிமூலம்,
ரிஷிமூலம் பார்க்கத் தேவையில்லை என்று
இதை வைத்துத்தான் சொன்னார்களோ
என்னவோ?
பதினெட்டு சித்தர்களின் பெயர்களும் கூட
பெற்றோர் சூட்டிய பெயர்கள் அல்ல! எல்லாமே
காரணப் பெயர்கள்தான்.
குதம்பைச் சித்தர், தேரையர், கருவுரார்,
கொங்கணர், சிவவாக்கியர் என்று எல்லாமே
காரணப்பெயர்கள் தான். பரிமளசாமி என்கிற
பெயர் கூட அவர் அருகே சென்றால் ஒரு வித
சுகந்த வாசத்தை நாம் உணரலாம் என்கிற
அளவில் காரணப் பெயராகவே
அமைந்துவிட்டது.
அவருக்கு அது எப்படி சாத்தியமாயிற்று
என்பதும் ஒரு ஆச்சரியமூட்டும்
விஷயமாகும். இத்தனைக்கும் அவர் குளிக்கவே
மாட்டார். எப்பொழுதாவது மழை பெய்யும்
போது அதில் நன்றாக நனைவார். அதுதான்
அவரது குளியல். அப்படிப்பட்டவர் உடம்பில்
எப்படி வாசம் வீச முடியும்? இது என்ன
மாயம்?
இப்படிதான் கேள்விகள் எழும். ஆனால் அங்கே
தான் பல ஆச்சரியமூட்டும் உடல் குறித்த
உண்மைகள் ஒளிந்திருக்கின்றன! அவை...?
8.கேள்வி –
*************
சித்தர்களின் ஜீவசமாதிகளில் அப்படி என்ன
இருக்கிறது?
பதில் – பளிச்சென்று கூறுகிறேன். அவர்களது
அழியாத ஆன்மா அங்கே பிரகாசித்தபடி
இருக்கிறது. ஜென்மாந்திர தொடர்புகளில் சிக்கி
மீண்டும் பிறவாமலும் புண்ணிய
யோகங்களுக்கு சென்று அங்கு வாழாமலும்
தேகத்தை உயிர் நீத்த நிலையிலும் தேகமின்ரி
அந்த உயிராகிய ஆத்மா தவம் இயற்றும் இடம்
தான் ஜீவசமாதி! இடையில் தவம் கலைத்து
அந்த ஆன்மாக்கள் இந்த உலகை வளம்
வருவதும் உண்டு. வளம் வரும் தூய
அன்புடைய பக்தர்களுக்கு அவர்களது
ஞானக்கண்ணை திறந்து விடுவதும் அங்கு
நடக்கிறது..
எந்த ஒரு ஜீவசமாதி ஆரவாரமின்றி தூய்மை
துளியும் குன்றாமல் பேனப்படுகிறதோ அந்த
ஜீவசமாதியின் சூழலில் மனிதர்களும் சரி, பிற
உயிரனங்களும் சரி அன்போடும் பண்போடும்
பல விதமான நலன்களோடும் வாழ்ந்தபடி
இருப்பார்கள்.
கேணிகள் நிரம்பி வழியும் – மலர்கள் பூத்துக்
குலுங்கும் – பசியே இருக்காது.
பரிமளசாமி சித்தரிடமே ஒரு அன்பர் இந்த
கேள்வியை கேட்கவும் செய்தாராம். சாமி
பார்க்க அழுக்கா இருக்கற உங்க உடம்புல
எப்படி சுவாமி வாசனை வீசுது?” என்று...
“நாற்றம், வாசனை இரண்டுக்குமே என்ன?
என்று சுவாமியும் திரும்பி கேட்டாராம்.
இது என்ன சுவாமி கேள்வி... நாத்தம்னா
யாருக்கும் பிடிக்காமப் போகும். வாசனைன்னா
எல்லாருக்கும் பிடிக்கும்கற, ஒரு பதிலை
தனக்கு தெரிந்த விதத்தில் அந்த அன்பரும்
கூற, பரிமளசாமி சிரித்துவிட்டார். அப்படியே
நாத்தமோ, வாசனையோ அதை குனம்கூற”
ஒரு வார்த்தைல சொல்ல உனக்கு தெரியலை
என்றவர் “ குனம்கறது உணர்வு சார்ந்தது
மட்டுமல்ல – உடம்பு சார்ந்த்ததும் கூட...!
உணர்வு மனக்கனம்னா புத்தி தெளியனும்.
உடம்பு மனக்கனம்னா வயிறு தெளியனும்.
வயிறு உன் வரில குப்பைத் தொட்டியா
இருந்தா வேர்வை, மூத்திரம், மலம்னு
எல்லாமே நாறும். அதே வயிறு பால்
பாத்திரமா மாறிட்டா எல்லாமே மணக்கும்!”
என்றாராம்.
இந்த வித்தை எப்படி அப்படி வெச்சிக்கறது?
என்று கேட்கும்போது “ தினசரி காலைல
கோவிலுக்கு போ அதுவும் பெருமாள்
கோவிலுக்கு போ... தீர்த்தம், துளசி, சடாரி,
பொங்கல், சுண்டல்”னு அஞ்சும் அங்கதான்
கிடைக்கும். தாயார் சன்னதியில் மஞ்சள்,
குங்குமம் கொடுப்பாங்க. அதுவே உன்னை
ஆரோக்கியமா வெச்சுக்க போதுமானது
என்றாராம்.! எப்படி என்ற கேள்விக்கு அவர்
சொன்ன பதிலுக்குள் ஆச்சரியமூட்டும்
உண்மைகள்.!
9.கேள்வி –
*************
சித்தர்களை பற்றி தெரிந்த அளவு அவர்களது
தாய், தந்தையர் மற்றும் உறவுகள் பற்றி
தெரியாமல் போவது எதனால்?
பதில் – சித்தர்கள் பற்றி தெரிய
வந்திருப்பதிலேயே நிறைய முரண்பட்ட
பொய்யான தகவல்கள் உண்டு. சேர, சோழ,
பாண்டிய அரசர்கள் பற்றி உறுதியாக அறிந்திட
கல்வெட்டுகளும், செப்பேடுகளும்,
யாத்ரீகர்களின் குறிப்புகளும், கிடைத்திருப்பது
போல இவர்கள் வரையில் அழுத்தமாக ஒரு
ஆதாரமும் இல்லை. நூற்றுக்கு தொண்ணூறு
செவிவழிச் செய்திதான்.
தெளிந்து தேற வேண்டியது நம் பொறுப்பு.
நதிமூலம், ரிஷிமூலம் காணத் தேவையில்லை
என்பார்கள். சித்தமூலமும் அப்படியே...
நானறிய எந்த சித்தரும் அவர்களது பெற்றோர்
சூட்டிய பெயரால் நாம் இப்போது அவர்களை
அழைப்பதில்லை. அது என்ன வென்றும்
நமக்கு தெரியாது.
சிவவாக்கியர், காகபுஜண்டர், குதம்பையார்,
காடுவெளியார், இடைக்காட்டார், போகர்,
புலிப்பாணி, கருவூரர், தேரையர். என்று
எவரை எடுத்துக் கொண்டாலும் சரி, எல்லாமே
அவர்களது தனித்தன்மையை முன்னிறுத்தும்
காரணப் பெயர்களே.!
இப்படி பெயர்களே தெரிந்திராத நிலையில்
பெற்றோர்களை எப்படித் தெரிந்துகொள்ள
முடியும்?
No comments:
Post a Comment