Sunday, June 12, 2016

புருவ நடுவும் நாடி நாதமும்

புருவ நடுவும் நாடி நாதமும்
==================================================
அன்பர்களே,நம்மில் பலருக்கு நாடி நாதம் என்றால் என்ன வென்றே தெரியாது. வாசி என்னும் மூச்சுக் காற்றால்தான் நாடி நாதம் எழும்பும்.  வாசியோகம் என்னும் மூச்சை ஒடுக்கும் பயிற்சியால் வாசியானது முதலில் இரத்தத்தில் கலக்கும்.வாசி வசப்பட்டால் மேல் நோக்கி எழும்பாமல் உடம்பில் ஊடுருவும்.

நீங்கள் சோடா புட்டியைப் பார்த்தால் அதில் உள்ள நீரில் கார்பன்-டை-ஆக்சைடு  என்னும் கரியமில வாயு கரைந்திருப்பது கண்ணுக்குத் தெரியாது.காரணம் புட்டிக்குள் காற்றழுத்தம் அதிகமாக இருக்கிறது.ஆனால் கோலியைத் தட்டினால் புட்டியில் உள்ள காற்றழுத்தம் குறைவதால் மறைந்திருந்த கரியமில வாயு, குமிழ்களாக வெளிப்படும்.

இவ்வாறே உடம்பில் ஊடுருவிய வாசி,ஏழு தாதுக்களிலும் (அனைத்துத் திசுக்களிலும்)கலந்திருக்கும்.அதாவது உடம்பில் காற்றழுத்தம் அதிகமாக இருக்கும். கும்பகத்தால்,உடம்பில் ஊடுருவும் வாசியும் அதிகரிக்கும். உடம்பில் ஊடுருவிய வாசியின் அளவு அதிகரிக்க அதிகரிக்க உடம்பினுக்குள் உள்ள காற்றழுத்தமும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

உடம்பில் ஊடுருவிய வாசி, மூக்கு வழியோ வாய் வழியோ வெளியேறாது. வாசி வெளியேறுவதற்கு உள்ள ஒரே ஒரு வழி,மேல் வாசலான புருவநடு ஒன்றே ஆகும். ஒரு கட்டத்தில் உடம்பினுள் உள்ள காற்றழுத்தம் மேல் வாசலின் தடுப்பை வாசி,நீக்கும். அந்த நேரத்தில் உள் மூச்சோ வெளி மூச்சோ நிகழாது. உடம்பில் ஏழு தாதுக்களிலும் கலந்திருந்த வாசியானது வாயுக்குமிழ்களாக மாறிப் புருவ நடு வழியே வெளியேறும்.  வாசி வெளியேறும்போது நாடி நாதத்தை எழுப்பும். சங்கொலியும் தாரையொலியும் நாடி நாதத்தில் குறிப்பிடத் தக்கன. இவற்றுள்ளும் தாரை ஒலியே மிகவும் குறிப்பிடத் தக்கதாம்.தாரை ஒலி,கொம்பொலி.எக்காள ஒலி எனும் இவையெல்லாம் ஒன்றையே குறிக்கும்.

இசுலாத்திலும் கிறித்துவத்திலும்  வானவர் எக்காள ஒலி எழுப்பும்போது கல்லறைகளிலிருந்த பிணங்கள் உயிர் பெற்று எழுந்து நியாயத் தீர்ப்பு வழங்கும் இடத்திற்குச் செல்வார்கள் என்று குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது.

இதிலிருந்து பெறப்படும் உண்மை என்ன வெனில் நாம் தாரை என்னும் எக்காள ஒலியை எழுப்பினால் அது நமக்கு ஏற்பட இருக்கும் மரணத்தைத் தடுக்கும் என்பதே யாகும்.
தாரை ஒலியை எழுப்பினால் மூளையில் அமுதம் சுரக்கும். இந்த அமுதத்தைக் குடிப்பவர் மரணத்தை வெல்வது சத்தியம்.

இந்த உண்மையைப் பொய் என்றும் கனவிலும் நடக்க முடியாத காரியம் என்றும் சித்தர் பெரு நெறியை அறியாதவர்கள் கூறுவார்கள். உண்மைதான்! பெரு நெறி அறியாதவர்கள் மரணம் அடைவதுதான் உறுதி.

ஆனால் முறையாக வாசியோகம் செய்து நாடி நாதத்தை எழுப்புபவர்கள்,அமுதமுண்டு மரணத்தை வெல்வது சத்தியம்.சத்தியம்.சத்தியம்.

எனவே,உலக மக்கள் அனைவரையும் நான் வற்புறுத்துவது ஒன்றே ஒன்று.வாசியோகத்தை இன்றே இப்போதே செய்ய ஆவன செய்யுங்கள். வள்ளலார் விரும்பிய மரணமிலாப் பெரு வாழ்வு பெற்றுப் பெருங்களிப்பு அடையுங்கள். இதற்குக் காசு பணம்

No comments:

Post a Comment