மலையாள பட இயக்குனர் ராஜேஷ் பிள்ளை தனது 41வது வயதில் உயிரிழந்தார்.
41 வயதில் இவர் மரணமடைய காரணம்...பெப்ஸி.
இவருக்கு சிகரெட், குடி என எந்த கெட்டபழக்கமும் இல்லை. ஆனால் இவரது ஈரல் கடுமையாக பாதிப்படைந்தது. எப்படி என டாக்டர்கள் அதிர்ச்சியடைந்து வினவுகையில் தான் திரைப்படம் எடுக்கும் சமயத்தில் நல்ல உணவு உண்ண நேரமின்றி குப்பை உணவையும் தினமும் 30 பாட்டில் பெப்ஸியையும் இவர் பருகி வந்திருப்பது தெரிந்தது.
தன் ஈரல் பழுதடைந்து சிரோசிஸ் எனும் வியாதி தனக்கு வந்ததையும், அதற்கு காரணம் தன் பெப்ஸி அருந்தும் வழக்கம் எனவும் இவர் தன் நண்பர் சுகுமாறன் என்பவரிடம் கூறி வருந்தியுள்ளார்.
கடைசிவரை டாக்டர்கள் இவரை காப்பாற்ற முயன்றும் பலனின்றி இளவயதில் மரணமடைந்தார்.
இந்தியாவுக்கு இம்மாதிரி மரணங்கள் புதிதாக இருக்கலாம். ஆனால் உலகெங்கும் ஆண்டுக்கு 180,000 மரணங்களுக்கு இம்மாதிரி குளிர்பானங்கள் காரணமாக இருப்பதாக ஹார்வர்டு பல்கலைகழகம் ஒன்றின் ஆய்வு கூறுகிறது. ஒப்பீட்டளவில் 21ம் நூற்றாண்டின் மிக மோசமான யுத்தம் என அழைகக்படும் இராக்- அமெரிக்கா போரில் கடந்த 12 ஆண்டுகளில் 150,000 மரணங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன
குளிர்பானங்களில் இருக்கும் பழ சர்க்கரையான ப்ருக்டோஸ் நேரடியாக ஈரலில் மட்டுமே ப்ராசஸ் செய்யபடும். அதீத அளவில் ப்ருக்டோஸ் ஈரலில் சேர்கையில் ஈரலால் அந்த சர்க்கரையை கொழுப்பாக மாற்றி ப்ராசஸ் செய்ய முடியாமல் ஈரலில் கொழுப்பு தேங்கி பேட்டி லிவர் வியாதி உருவாகிறது. இது தொடர்ந்தால் சிரோசிஸ் ஆக மாறி ஈரல் கெடுகிறது. ராஜேச்ஜ் பிள்ளைக்கு நிகழ்ந்ததும் இதுவே
ஈரலை கெடுப்பதில் மதுவுக்கும், சர்க்கரைக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
தொழில் முக்கியம் தான். ஆனால் உடல்நலனை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஆன்டுக்கு ஒரு இராக் போரை நிகழ்த்தும் பெப்ஸி, கோக் கம்பனிகளை கடைசிக்கு சிகரெட்டுக்கு சமமாக கருதியாவது வரி விதிக்கபோவது எப்போது? http://www.onlookersmedia.in/…/no-alcohol-and-no-cigarettes…
No comments:
Post a Comment