Saturday, March 5, 2016

ஓஷோ

ஓஷோ இந்திய நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்ற குரு அல்ல.  உண்மையில் பாலுறவுக் கட்டுப்பாடுகள் எதுவுமேயில்லாத அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளே கூட அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாமல் அவரை விரட்டியடித்து விட்டனர் என நண்பர் ஒருவர் வாதிட்டார்.

ஆம் என்று தலையாட்டி வைத்தேன்.

பிறகு இவரொடு வேறென்ன வாதம் செய்வது?

அவர் ஒரு செக்ஸ் சாமியார் என்பது இந்தியர்களின் தவறான புரிதல்.

(உண்மையில் ஓஷோ செக்சுக்கு எதிரானவர்)

ஆகையால் அமெரிக்காவிலிருந்து அவர் விரட்டப்பட்டதற்கு அவர் செக்ஸைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார் என்பது காரணமல்ல. 

மனம் முழுக்க வக்கிரக் காம எண்ணங்கள் உடைய ஒருவன், தன் குட்டு வெளிப்பட்டுவிடுவோமோ என பயந்து அதை மறைக்கப் போராடும் முயற்சியே ஒஷோ போன்றோரின் வெளிப்படையான பேச்சை எதிர்த்தல்.

பாலுறவு குறித்த கட்டுப்பாடுகள் எதுவும் அற்ற நாடுகளில் ஓஷோ செக்ஸைப் பற்றி வெளிப்படையாய் பேசியதெல்லாம் பெரிய பிரச்சனையேயல்ல.

பிறகு ஏன் அவர்கள் ஓஷோவை எதிர்த்தனர்?

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முட்டாள் மதக்கொள்கைகளின் ஆணி வேரையே அசைத்துப் பார்த்தவர் ஓஷோ.

போப் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரத்தையே உலுக்கிப்பார்த்தவரை எப்படி அவர்களால் கொண்டாட முடியும்.

சிகரெட், மது தயாரிப்பாளர்களுக்கு, மது விலக்கு பற்றிப் பேசுபவனை எப்படிப் பிடிக்கும்?  அதுபோலத்தான்.

Osho is a dangerous rebellion ever lived on the earth in the past 25 centuries.

உண்மையை எதிர்கொள்ளத் துணிவில்லாதவர்களுக்கு வெகு நிச்சயமாய் ஓஷோவைப் பிடிக்காது.

உதாரணமாய்.....

மனைவியோடு வெளியே செல்லும் போது எதிரே வரும் அழகான ஒரு பெண்ணை கணவன் ரசிப்பது என்பது இயல்பு.

நீ இப்படி ரசிக்கிறாய்.  அதில் தவறேதுமில்லை.  அது இயற்கையானதே.  அது குறித்து குற்றமனப்பான்மை கொள்ள ஏதுமில்லை.  ஆகவே அதை ஒத்துக்கொள் என்று நம் போலி முகத்திரையைக் கிழித்து உண்மையை ஏற்றுக்கொள்ளச் செய்பவரே ஓஷோ.

ஆனால் அப்படி ஏற்றுக்கொள்ள ஒரு அசாத்தியத் துணிச்சல் தேவை.

சமுதாயத்தின் மதிப்பு, மரியாதை, நற்பெயர், கௌரவம் இவற்றைத் தூக்கிக் கடாசும் தைரியம் தேவை.

இப்படி தன் முகமூடியை கிழிப்பவரை பொதுவாக நாம் வெறுப்பது இயல்புதான். ஏனெனில் உண்மையை எதிர்கொள்ளும் துணிவற்றவர்கள் நாம்.

"10 வருடங்களாகக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட மனைவியை வைத்துக்கொண்டு இன்னொரு பெண்ணை ரசிப்பதா?  No.  Never.  நான் ஏகபத்தினி விரதனாக்கும்.  இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்"

என ஒழுக்க வசனம் பேசுபவர்களால் ஓஷோவை நிச்சயமாய்க் கொண்டாட முடியாது. 

அவர்கள் தன் முகத்திரை கிழிந்து தன் உண்மை முகத்தை தரிசிக்க அஞ்சும் கோழைகள்.  தந்திரம் செய்து செய்தே தன் வாழ்க்கையை கழித்து மடிந்து போகும் "தேடிச் சோறு நிதம் தின்று" வகை மனிதர்கள்.

ஆகவே உண்மையை உண்மையாய் தரிசிக்க விரும்புவர்கள் இதுபோன்ற நபர்களிடம் வாதம் செய்து தங்கள் ஆற்றலையும் நேரத்தையும் வீணடித்துக்கொள்ள வேண்டாம்.

RAJAJI JS (05032016)

No comments:

Post a Comment