Tuesday, November 29, 2016

Vaasi yogam

இடகலை நாடி இடது பக்க மூளையோடும்,
பிங்கலை நாடி வலது பக்க மூளையோடும்,
அக்னிகலை நாடி சிறுமூளையோடும் தொடர்பு உடையன. இந்த மூளைகளின் இடையே தான் மனோன்மணி,சிரேண்மணி,
கவுணமணி என்னும் யோகபீடங்கள் உள்ளன.
  இடகலை நாடி வலதுகாலில் தொடங்குகிறது
பிங்கலை நாடி இடதுகாலில் தொடங்குகிறது.
இந்த இரு நாடிகளும்  சேர்ந்தால் தான் உடல்
இயக்கம்,உயிர் இயக்கம் சீராகும். இடகலை
நாடியில் காற்றின் இயக்கமும், பிங்கலை நாடியில் காற்றோடு கலந்த வெப்பத்தின்
இயக்கமும் நடைபெற்று கொண்டிருக்கும்.
இவை இரண்டும் சேர்ந்தே இயங்க வேண்டும்,சேர்ந்தே இருக்க வேண்டும். இவை
பிரிந்தால் உடல் தளரும்,மயக்கம் உண்டாகும்.
   இடகலை நாடி காற்றும், பிங்கலை நாடியில்
உள்ள வெப்பம் ஒன்றை ஒன்று கலக்கும் பொழுது வெப்பத்தின் ஆற்றலால் காற்றின்
அடர்த்தி குறைந்து விடும்.அடர்த்தி குறைந்த
காற்று மேல் எழுந்து குறிப்பிட்ட யோகபீடங்களை இலகுவாக அடையும்.

No comments:

Post a Comment