Wednesday, November 23, 2016

திருமூலர்- திருமந்திரத்தில் கூறுகிறார்,

*என்ன நடக்கிறது...?*
*நம் வாழ்க்கையில்...*

திருமூலர்- திருமந்திரத்தில் கூறுகிறார்,

*“தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்*
*முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பார்கள்*
*பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்*
*சென்னியில் வைத்த சிவனரு ளாலே”*

அதாவது, நம் வாழ்க்கை மூன்று நிலைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது...

ஒன்று :-
*நினைத்தது நடக்கும்*

இரண்டு :-
*நினைத்தது நடக்காது*

மூன்று :-
*நினைக்காதது நடக்கும்*

அதாவது,
முதல் நிலை 'நினைத்தது நடக்கும்' என்பதற்கு உதாரணமாக...

ஒருவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்...

அதற்கான வாய்ப்புகள் அமைந்து...
மருத்துவம் படித்து மருத்துவராகி விடுகிறார்.

இது நினைத்தது நடப்பது...

இரண்டாவது நிலை 'நினைத்தது நடக்காது' என்பதற்கு உதாரணமாக...

அவர் அயல்நாடு சென்று மருத்துவ பணி புரிய ஆசைப்படுகிறார்...

அதற்காக முயற்சிகள் செய்கிறார்.

ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை...

இது நினைத்தது நடக்காதது.

மூன்றாவது நிலை 'நினைக்காதது நடப்பது'

ஒருவருக்கு ஏதோ ஒரு போட்டியில்...
குலுக்கல் முறையில் மிகப் பெரிய பரிசு கிடைக்கிறது...

அல்லது...

ஒருவர் சாலை விதிகளை கடை பிடித்து, நிதானமாக, கவனமாக வாகனத்தில் செல்லும் போது, எதிர்பாராத  விபத்துக்குள்ளாகிவிடுகிறார்.

இது தான் நினைக்காதது நடப்பது.

நம் அனைவரது வாழ்க்கையும் இந்த மூன்றுக்குள் தான் நடந்து கொண்டிருக்கிறது...

நினைத்தது நடந்தால்...
அது என் முயற்சியால், கடின உழைப்பால் கிடைத்தது என்றும்...

அதற்கு,
*முயற்சி* என்று பெயரிடுகிறோம்.

நினைத்தது நடக்க வில்லை எனில்...

'எவ்வளவு முயற்சி செய்தேன்...
எவ்வளவு கஷ்டப் பட்டு உழைத்தேன்...
நான் விருப்பப்பட்டது கிடைக்கவில்லையே...
எல்லாம் என் தலைவிதி...' என்றும்,

நினைத்தது நடக்காததை
*விதி* என்று பெயரிட்டு அழைக்கிறோம்.

இதுவே, நினைக்காதது நடந்தால்...

அது நல்லதாக இருந்தால்...
*அதிர்ஷ்டம்* என்றும்,

அது கெட்டதாக இருந்தால்...
*துரதிர்ஷ்டம்* என்றும் கூறுகிறோம்.

இவ்வாறு, வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை மூன்று வெவ்வேறு பெயர்களில்...

*முயற்சி*
*விதி*
*அதிர்ஷ்டம்* அல்லது *துரதிர்ஷ்டம்*

என கூறி சந்தோஷப்பட்டு அல்லது
துக்கப்பட்டுக் கொள்கிறோம் .

ஆனாலும்,
நடக்க வேண்டியது
நடக்க வேண்டிய காலத்தில்
நடந்து கொண்டே தான் இருக்கிறது.

அதை நாம் தான் பல்வேறு கோணங்களில் பார்க்கிறோம்...

இதற்கெல்லாம் காரணமான,

பிரபஞ்ச ரகசியத்தை...
மறைபொருளின் சூட்சுமத்தை...
கர்மவினையின் தாக்கத்தை...
வாழ்க்கையின் தத்துவத்தை...
புரிந்து கொண்டால்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
நிகழ்வுகளையும் புரிந்து கொள்ள முடியும்.

"நாம் நினைத்தது நடக்கிறது..." என்றால்
நாம் நினைத்த அனைத்தும் நடந்திருக்க வேண்டும்...

"நாம் நினைத்தது நடக்க வில்லை...' என்றால்
நாம் நினைத்த அனைத்தும் நடக்காது இருந்திருக்க வேண்டும்...

"நாம் நினைக்காதது நடந்தது...' என்றால்
தொடர்ந்து அதிர்ஷ்டமோ அல்லது துரதிர்ஷ்டமோ அல்லவா இருக்க வேண்டும்.

ஆகவே,
இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

*ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது...*
அதை நாம் புரிந்து கொள்ளாமல் தான்
நாம் வாழ்க்கையில் தடுமாறுகிறோம்...
தள்ளாடுகிறோம்...

அந்த ஒன்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால்...
*மனம் தெளிவு பெற வேண்டும்.*

மனம் தெளிவு பெற வேண்டுமெனில்...
*பிரபஞ்ச உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.*

பிறப்பு - இறப்பு சுழற்சி என்பது
கர்ம வினையின் அழுத்தத்தை பொறுத்தது.

*கர்மவினை இல்லை என்றால் பிறப்பு இறப்பு இல்லை.*

*கர்மவினை இருக்கும் வரைக்கும் பிறப்பு இறப்பு இருக்கும்...*

அந்த கர்மவினையை...

*சஞ்சித கர்மம்,*
*பிராரப்த கர்மம்,*
*ஆகாம்ய கர்மம்,*

என மூன்றாக பிரிப்பார்கள்.

*சஞ்சித கர்மம்:-*

பிறப்பதற்கு முன் செய்த வினை சஞ்சித கர்மம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

இது ஈரறிவு உயிர் முதல் பிறப்பதற்கு முன் வரை நீண்ட காலம் கருத்தொடராக பல பிறவிகளில் பெற்ற வினைப் பதிவுகள் 'சஞ்சித கர்மம்' என்று அழைக்கப்படுகிறது .

*பிராரப்த கர்மம்:-*

நாம் பிறந்தது முதல் இன்று வரை செய்த கர்ம வினைகள் 'பிராரப்த கர்மம்' என்று அழைக்கப்படுகிறது.

அதாவது,
நாம் வாழும் காலத்தில் செய்யும்
செயல்களின் வினை பதிவு, அனுபவம் ஆகியவை நம் ஆன்மாவில் பதிந்து...
அதுவே செயலாக மாற்றமடைகிறது...
இதனை, பிராரப்த கர்மம் என்று கூறுகிறோம்.

*ஆகாம்ய கர்மம்:-*

*ஆ* என்றால் *ஆன்மா* என்று பொருள்.

*காம்யம்* என்றால் *இச்சை* என்று பொருள்.

ஆன்மாவுக்கு இச்சையை ஊட்டி செயலைச் செய்ய வைப்பது
ஆகாம்ய கர்மம் எனப்படும்.

சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம் ஆகிய
இரண்டு வினைகளிலிருந்து வரக்கூடிய செயல்களின் பதிவுகளால்
'இனி என்ன செய்ய வேண்டும்...' என்று
துாண்டப்படும் எண்ணங்களும், செயல்களும் தான் 'ஆகாம்ய கர்மம்' எனப்படுகிறது.

ஆக,
சஞ்சித கர்மம்,
பிராரப்த கர்மம்,
ஆகாம்ய கர்மம்
இந்த மூன்றும் சேர்ந்த கர்மவினையே...

நம் பிறப்பு - இறப்பு சுழற்சியை உண்டு பண்ணுகிறது.

இந்த கர்ம வினையை கழித்து...
பிறப்பு - இறப்பு சுழற்சியை அறுத்தால்...
இறைவனுடன் (இயற்கையுடன்) இரண்டறக் கலந்து விடலாம்.

மூன்று கர்மங்களில்...
முன்வினை என்று சொல்லப்படக்கூடிய சஞ்சித கர்மம் தான் தொடர்ச்சியாக பிறவிப் பெருங்கடல் நீள்வதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

ஆகவே, முதலில் சஞ்சித கர்மத்தை கழித்து...
பின்னர், இப்போது செய்து கொண்டிருக்கும் பிராரப்த மற்றும் ஆகாம்ய கர்மத்தை சரியாக செய்து வந்தால்...

பிறப்பு இறப்பு சுழற்சி தானாக அறுபட்டு விடும்.

இறைவனுடன் இரண்டறக் கலந்து விடலாம்...

நம் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் உண்மையின் சூட்சுமத்தை புரிந்து கொண்டால் தான்...

*நடக்கும் நிகழ்வுகளுக்கு அர்த்தம் தெரியும்...*

நிகழ்வுகளுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமானால்...

*பிரபஞ்ச உண்மையை உணர வேண்டும்...*

பிரபஞ்ச உண்மையை உணர வேண்டுமானால்...

*நாம் உண்மையாக இருக்க வேண்டும்...*

நாம் உண்மையாக இருக்கும் போது தான்...

*பிரபஞ்ச ரகசியம் உணர முடியும்...*

*இறைவனுடன் (இயற்கை) இரண்டற கலக்க முடியும்...*

என்கிறார் *திருமூலர்*🙏🏻

மேலும்,

*அன்பே சிவம்*

*ஒன்றே குலம்... ஒருவனே தேவன்...*

*யான் பெற்ற இன்பம்... பெறுக இவ்வையகம்...*

என்றுரைத்து...
நமது நல்வாழ்வுக்கு...
நல்வழி காட்டினார் திருமூலர்...

மேலும் இவ்வுலகில்...
வெவ்வேறு இடங்களில்,
வெவ்வேறு காலகட்டத்தில்
அவதரித்து...
நமக்கு நல்வழி காட்டிய...

முதன்மை சித்தர்களாகிய...
முருகர், இயேசு, முகம்மது நபி, புத்தர் போன்றோர்களின் வழி நடந்து...🙏🏻

இனி வரும் நாட்கள் அனைத்தும்...
இனிய நாளாக அமைத்து கொள்வோம்...

*வாழ்வோம் நலமுடன், வளமாக...💐*

No comments:

Post a Comment