Tuesday, November 29, 2016

மரணமில்லாமல்  வாழ  பசியை வெல்லும் கேசரி யோகம் !!!


**********************************************************

( மரணமில்லாமல் வாழ பசியை
வெல்லும்  கேசரி  யோகம்  அடங்கியுள்ள சூக்சும ரகசியங்களை 9000 வருடங்களுக்கு முன்னரே என் ஐயன் திருமூலன் சொல்லுகிறான் ..  கேட்பவர்கள் கேளுங்கள் .........)

முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த
#சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள்.

எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து
#காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்.

மேலும் #மரணத்தை_வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர்.

அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள்.

அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்.
அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும்.இதனை யோக நூல்கள்
#கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன.

உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பல ஆண்டுகள் அப்படியே இருக்கும். அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன.
உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.

சித்தர்கள் இந்த லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள்.பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.தான் நினைத்தபோது உடலை நீக்கி இறைநிலை அடைந்தார்கள்.

இனி லம்பிகா யோகம் பற்றி விரிவாக காண்போம்.

ராஜ நாகம் நல்ல பாம்பு இவ்விரண்டு வகைப் பாம்புகளும்
புற்றுக்குள் நுழையும்போது தலையை வெளியே நீட்டிக்கொண்டு வால் பகுதியை முதலில் நுழைத்து
தலைகீழாக புற்றுக்குள் செல்லும்.

இவ்வாறு புற்றுக்குள் சென்றவுடன் அவைகளின் இரட்டை நாக்குகளில் ஒன்றை உள்நாக்கு வழியாக மேலண்ணத்தில் நுழைத்து உச்சந்தலையில் வைத்துவிட பசி தாகம்,குளிர்,மழை போன்றவற்றால் பாதிக்கப்படாமல் வாழும்.

ஊர்வனவற்றில் பாம்பு, அரணை, உடும்பு இவற்றுக்கு இரட்டை நாக்குகள் உள்ளன.

சாதகமான பருவநிலைகளை தோலின் உணர்வுகள் மூலம் அறிந்துகொண்டு மற்றொரு நாக்கின் மூலம் தலைக்குள் செலுத்திய நாக்கை எடுத்துக் கொண்டு உடல் உணர்வு நிலையடைந்து வெளியே வரும்.

இதேபோல சித்தர்களும் தங்கள் நாக்கின் அடிப்பாகத்தை
அறுத்துக்கொண்டு நாக்கின் நீளத்தை கூட்டி மேலண்ணத்தின் வழியாக தலையின் மேல்பகுதியில் கொண்டுவந்து,இடை பிங்களை என்ற இரு நாசிகளின் மூச்சை நிறுத்தி,நடுநாடி என்று அழைக்கப்படும் சுஷும்னா நாடி வழியே நாக்கை செலுத்தி கபாலத் தேன் என்று அழைக்கப்படும் புருவ மத்தியில் உள்ள பினியல் சுரப்பியின் திரவத்தை கட்டுப்படுத்தினால் இவ்வுடல் மரணம் அடைவதில்லை மூப்பு அடைவதில்லை,என்றும் இளமையாக வாழலாம்.ஜீவசமாதிநிலை அடையலாம்.

"ஜீவன்" என்றால் உயிர். "சமாதி" என்றால் சமன் - ஆதி. ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.

சில யோகிகள் காடுகளுக்கு சென்று இலம்பிகா யோக நிலையில் அமர்ந்து விடுவார்கள்.அவர
்களது உடலில் கரையான்,மண் புற்றுகளால் மூடப்பட்டாலும் மரணமின்றி பல ஆண்டுகள் யோக நிலையில் அமர்ந்திருப்பார்கள்.

இந்த யோகத்தை தகுந்த குருவின் மூலம் தான் படிப்படியாக கற்க வேண்டும்.காரணம் நாகங்களில் இரட்டை நாக்கு இருப்பதால் மேலே சென்ற ஒரு நாக்கை
இன்னொரு நாக்கால் இழுத்து விட்டுக் கொள்ள முடியும்.

ஆனால் மனிதர்களால் உட்சென்ற நாக்கை குரு அல்லது இன்னொரு நபர் தலையில் ஓங்கி வேகமாக அடித்தால்தான் சாதாரன நிலைக்குவரமுடியு.

இந்த யோகத்துக்கு #சர்ப்ப_சாம்பவி_
மகா_உபதேசம் என்று நாகாலாந்து யோகிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

லம்பிகா யோகம் பற்றிய சித்தர் பாடல்களை கீழே படித்துப்பாருங்கள்.

#இடைக்காட்டு_சித்தர் பாடல் வரிகள்

"அண்ணாக்கை யூடே அமுதுண்ணேன்
மெய்ஞானம் ஒன்றன்றி வேறே ஒன்றை நண்ணேன்"-

இதன் பொருள்; நாக்கை நடு நாடியுள் செலுத்த கபாலத்தேன் சுரக்கும்.அதனைக் கட்டுப்படுத்தினால் மெய்ஞானம் பிறக்கும்.

சித்தர் #சிவவாக்கியர் பாடல் வரிகள்

"ஆக்கை மூப்பதில்லையே யாதிகார ணத்தினாலே
நாக்கை மூக்கை யுள் மடித்து நாத நாடி யூடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையு மிக்கழுத்த வல்லீரேல்
பார்க்கப் பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்ம மாகுமே"

இதன் பொருள்;
நாக்கை இழுத்து வெட்டிவிட்டுக் கொண்டு
மேலண்னத்தில் மூக்கிற்கு உள் உள்ள குருநாடியுள் செலுத்தி
இடை பிங்களையாகிய வலது இடது நாசி சுவாசத்தை நிறுத்தி
நடுநாடியாகிய பிரம்ம நாடியுள் சுரக்கும் திரவ சக்தியை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டால் இவ்வுடம்பு மூப்பு அடைவதில்லை. வயோதிகம் அடைவதில்லை.எங்கும் நிறைந்த இறைவனை பார்க்கும் இடங்களில் எல்லாம் உணர்ந்தறியலாம்.

அட்டாங்க யோகத்தில் எட்டு விதமான
யோகநிலைகளைக் கூறியபிறகு மேலும் சில
யோகவகைகளைத் திருமூலர் கூறியிருக்கிறார்்.

கேசரி என்பதற்கு சிங்கம்
என்றும் ஆகாயம் என்றும் பொருள்.

கேசரியோகமாவது சிங்கத்தைப் போல்
பார்வையை மேல்நோக்கிச் செலுத்தியிருப்ப
தாகும். இந்த யோகத்தால் சீவன் ஆகாயத்தில்
சஞ்சரிக்கும் ஆற்றலைப் பெறுவதால்
கேசரியோகம் என்று பெயர் பெற்றது.

கேசரியோகத்தை மூன்று விதமாகப் பயிலும்
முறையைத் திருமூலர் விளக்குகிறார். அது
அடயோகம், இலம்பிகாயோகம் மற்றும்
இராஜயோகம் என்ற மூன்று பிரிவில்
அடங்கும். உடலை வருத்திப் பிராணாயாமம்
பயிற்சி செய்து தேக சித்தி அடைந்து சமாதி
நிலையைப் பெறுதல் அடயோக முறையாகும்.

இலம்பிகா யோகப் பயிற்சியால் இலய யோக
முறையில் நாக்கை மடித்து உள்நாக்குப்
பிரதேசத்தில் உள்ள துவாரத்தை அடைத்துப்
பிராண செயம் பெற்றுச் சமாதி நிலையைப்
பெறுதல் இரண்டாவது வகையாகும்.

இனி மூன்றாவது முறை அறிவினால் அகண்டப்
பொருளைத் தியானம் செய்து கண்டப்
பொருளாகிய தேகத்தில் சக்தியை மாற்றி
விடுவதில் சமாதி நிலை அடைதல்
இராஜயோகம் ஆகும்.

ஆக, இம் மூன்று
வகையான பயிற்சியாலும் அடையும் பயன்
சமாதிநிலை என்ற ஒன்றேயாகும். இந்த முறை சாதகனின் தகுதியைப் பொறுத்து அமையும்.
இலம்பிகா யோகம் தான் கேசரி முத்திரை
யோகமாகச் சொல்லப் படுகிறது.

கேசரி முத்திரை யோகம் பயிற்சி.

சாதகர் ஆசனத்தில் அமர்ந்து நாவின் நுனியை
அண்ணாக்கின் மேல் வீசியிருக்க வேண்டும்.

இங்கு நாக்கை மடித்து அண்ணாக்கில் ஏற்றிச்
செய்யும் முறையான இலம்பிகா யோகத்தைத்
திருமூலர் சொல்லுகிறார்.

அவ்வாறு சாதனை செய்து வந்தால் பிராணன்
அண்ணாக்கின் வழியாக பிரம்மரந்திரம்
செல்லும். அதுவே சீவனும் சிவமும்
உறைகின்ற இடமாகும். அங்கே
பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும்
முப்பத்து முக்கோடி தேவரும் உள்ளனர்.

இந்த நிலையை அடைந்தவர்கள் மரணமில்லாப்
பெருவாழ்வு வாழ்வார்கள்.

நாவில் நுனியை நடுவே விசிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லைச் சதகோடி யூனே
-திருமந்திரம் 803.

இவ்வாறு நாவை மடித்து மேலே
ஏற்றியிருக்கும் போது பிராண அபானன்களாகிய
இரண்டும் அண்ணாக்கின் வழியாக மேலே
செல்லச் சுழுமுனை திறக்கும் என்று
திருமூலர் கூறுகிறார்.

அச்சாதகர் நரை
திரையின்றிப் பாலகனாகவே வாழ்வார்.

இம்முறையில் சிவனை முன்னிட்டுக் கொண்டு
நாவினை மேலேறும் படிச்செய்து அங்கே
நடுநாடியின் உச்சியில் சந்தித்திருப்பின்
அச்சாதகர் உலகம் முழுவதும் ஆள்வார்.

அவரது பிராணன் இலயமடைந்து உடலோடு
பொருந்தியிருக்கும் அறிவு விடுபட்டு
நிற்கும். நடு நாடியின் உச்சியில் பொருந்தி
உடலறிவு நீங்கி நிற்கும் சாதகரே
உண்மையான அக்கினிக் காரியம்
செய்தவராவார்.

"நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே"
-திருமந்திரம் 806

நாவினால் சாதனை செய்து இன்பத்தைக்
கண்டவர் நடுநாடியின் கோணலை நிமிர்ந்து
நிற்கச் செய்து இந்த ஊனுடலிலேயே
அமுதத்தைக் காண்பர்.

அவ்வழியாகச் சென்று அமுதத்தைப் பருகிச்
"சிவாயநம" எனச் சிந்தித்திருப்பார்க்கு கங்காப்
பிரவாகம் போன்ற ஒளி முகத்தின் முன்
பெருகும். அந்த ஆகாய கங்கையில் மூழ்கித்
திளைத்திருங்கள் என்கிறார் திருமூலர்.

ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுச்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும் வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும் வழி வாய்ந் தறிவீரே
-திருமந்திரம் 807

இந்த நிலை எய்தியவரது உடம்பே
சிவனுறையும் கோயிலாகும்.

"ஊனுடம்பு ஆலயம் உள்ளம் பெருங்கோயில் "
என்றும் திருமூலர் கூறுவதையும் தெரிந்து
மிக மகிழவும்.

எந்தையே யீசா உடலிடங் கொண்டாய்" என்ற
மாணிக்க வாசகரது வாக்காலும் இவ்வுடம்பு
சிவன் உறையும் கோயிலாகும் என்பது
புலனாகிறது.

ஆற்றலையுடைய சக்தியும்
சாதகருக்கு விளங்குவாள்.
அப்போது உண்மை ஞானம் விளங்கிச் சாதகர்
சிவசக்தியோடு பொருந்தியிருக்கும் நிலை
உண்டாகும்.

இச்சாதகருக்குப் பிராணன்
கண்டத்திலிருந்து உள்முகமாக மேல் நோக்கிச்
செல்லும். அவரது சிரசின் மேலுள்ள சகஸ்ர
தளம் விரிந்து விளங்கிப் பூமண்டலத்தில்
நீடூழி வாழ்வர்.

எவன் கேசரி முத்திரையால் அண்ணாக்கின்
அடியில் உள்ள துவாரத்தை அடைத்து
விடுகிறானோ அவனுக்கு அமுத வடிவான
வீரியமானது யோனி வடிவ அக்னியில்
வீழ்வதில்லை. பிராண அபானன்களாகிய
காற்றும் அலையாது நிலை பெறுகின்றது.
மற்றும் அவனுக்குப் பசி உண்டாவதில்லை.
அவன் மரிப்பதே இல்லை என்று அறிக. இந்தக்
கேசரி முத்திரையை குருவிடம் கேட்டு
அதன்படி நன்றாகப் பயின்று அதன்
உண்மையைத் தெரிந்து கொண்டவனுக்கே
இவ்விதப் பயன்கூடும.

★அங் முத்திரை விளையாட்டாக செய்தால்
தானாகவே நாக்கு உள்நோக்கி செல்லும். தவம்
செய்யும் போது அங் முத்திரை செய்து
பழகினால் இயல்பான நிலையில் தானாகவே
நாக்கு உள் நாக்கிற்கு மேலே தொடும். அங்
முத்திரை செய்வது மிகவும் எளிது . நாக்கை
மடித்து மேல் தொண்டையில் நாக்கின் நுனி
படுமாறு வைப்பதே அங் முத்திரை.
அந்த சமயத்தில் அமிழ்தம் சொட்டு சொட்டாக
சுரக்கும். அமிழ்தம் தேன் போல இனிக்கும்.
அந்த இனிப்பு சுவையே அமிர்தம்
என்கிறார்கள். இதையே பேரின்பம் என்று
கூறுகிறார்கள். அமிழ்தம் சுரந்துவிட்டால் பசி
எடுக்காது. 24 மணி நேரமும் அமிழ்தம்
அண்ணாக்கு மேலே சுரப்பதனால் பசியை
வெல்லும் தன்மை வரும். கேசரி யோகம் சித்தி
ஆகும். பசிக்கு உணவே கிடைக்கவில்லை
என்ன நிலை வரும்போது எவர் உதவியையும்
தேட வேண்டியதில்லை. ஒரு மண் புழு
தனக்கு தானே recycling செய்து கொள்வது
போல மனிதனும் தனக்கு தானே உயர் சக்தியை
recycling செய்து கொள்ளலாம்.

★அந்த சமயத்தில் மூச்சு காற்று மூக்கின்
வழியாக செல்லாது. அதற்கு பதிலாக
சுழுமுனை நாடி திறந்து முதுகுதண்டு
மூலமாக செல்லும். சுழுமுனை நாடி
திறந்துவிட்டால் மரணம் இல்லை. மரணத்தை
வென்ற மகான்கள் இந்த உலகில் இருக்க
விரும்ப மாட்டார்கள் . அவர்கள் உடம்பில்
இருந்து உயிரை பிரித்து சிவகலத்தில் ஐக்கியம்
ஆகிவிடுவார்கள். அதுவே முழுமையான
வீடுபேறு.

★யோகம் என்பதை விளையாட்டாக செய்ய
வேண்டியது தான். எதையும் serious ஆக
செய்தால் ஆபத்து. முனிவர்கள் , சித்தர்கள் அட
யோகம் செய்வார்கள். ஆனால் இல்லறத்தில்
இருப்பவர்கள் கடும் தவம் செய்ய வேண்டிய
தேவை இல்லை . எந்த செயலையும்
தியானமாக மாற்றலாம். நடக்கும் போது,
உண்ணும் போதும் , உறங்கும் போதும்
சிவலயத்தில் இருந்தால் அது 24 மணி
நேரமும் தவம் செய்ததற்கு சமம்.

★பதஞ்சலி மாமுனிவரைப்
போலவே திருமூலரும் அஷ்டாங்க
யோகத்தைப்
பற்றித் தனது திருமந்திரத்தில் பாடியிருக்கிறார்.
அவர் மேலும் நான்கு உன்னதமான
யோகங்களைப் பற்றியும் பாடியிருக்கிறார்.
அனேகமாக வேறு யாரும் அதற்கு முன்னால்
இவற்றைப் பற்றி சொல்லியிருப்பதாகத்
தெரியவில்லை. அதில் ஒன்று கேசரி யோகம்.

மற்றவை சந்திர யோகம், பரியங்க யோகம்,
அமுரி தாரணை என்பதாகும். அஷ்டாங்க
யோகத்தைப் பொறுத்தவரை பகீர்முகம்
எனப்படும் வெளிபமுகமான நான்குபடிகள்
இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் ஆகும்.
அந்தர் யோகமாக அதாவது உள்முகமான
படிகள்
பிரத்தியாகாரம், தாரணை, தியானம்,
சமாதி என்பவைகள் சொல்லப் பட்டுள்ளன.

★பொதுவாக இது இராஜயோகம்
என்று சொல்லப்பட்டுள்ளது என்றாலும் முதல்
நான்கு கிரியாயோகம், அடுத்த நான்கும்
இராஜயோகமாகும்.முதல் நான்கும்
உடலையும்
மனதையும் ஆரோக்யமாக வைக்க உதவும்.
முதல் நான்கையும் பயின்றவர்களுக்கு மட்டுமே அடுத்த நான்கு படிகளும் நலம் பயக்கும். அது போலவே திருமூலர்
தந்திருக்கின்ற உன்னதமான மற்ற
நான்கு யோகங்களை கைகொள்வதற்கு
முன்னும்
கிரியாயோகம் என்கிற முதல் நான்கு படிகளையும்
பயிற்சி மேற்கொள்வது கட்டாயப்
படுத்தப்பட்டுள்ளது.

கேசரி யோகம்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆

★கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத்
தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே.
திருமந்திரம் -779.

★அண்ணாக்கை ஊடே அடைத்து
அமுதுண்ணேன்
அந்தரத்தை அப்பொழுதே பண்ணேன். -இடைக்காடார்.

★சூல் கொண்ட மேகம் என
ஊமை நின்று சொறிவதைப்
பால் கொண்டு கொண்டனன் மேலே அமிர்தம்
பருகுவேனே. - தாயுமானவர்.

★கோஎன முழங்கு சங்கொலி விந்து நாதம்
கூடிய
முகப்பில் இந்துவான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடனப்பதம் காண என்று சேர்வேன் -
அருணகிரிநாதர்.

★மேலும் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்,
சித்தர் பெருமக்கள் பலரும் இந்த யோகத்தைப்
பற்றி பாடியுள்ளார்கள்.

★கேசரி யோகம் பயில ஆரம்பிப்பதற்கு முன்
கண்நரம்புகளை வலுப்படுத்தும்
பயிற்சி செய்திருப்பது அவசியம். மேலும்
நாவின் அடிப்பாகத்திலுள்ள தசையை
கொஞ்சம்
கொஞ்சமாக
அறுத்து புண்களை ஆற்றி பயிற்சி செய்து
வரவேண்டும்.
நாக்கை இழுத்து, நீட்டி மூக்குக்கு மேல்
நாக்கு ஒரு அங்குலம் நீளுமாறு பயிற்சி மேற்
கொள்ள வேண்டும்.

வஜ்ஜிராசனத்தில்
அமர்ந்து தினமும் அரைமணி நேரம்
பயிற்சி செய்துவர வேண்டும்.
பார்வையை புருவ மத்தியில் குவிக்க
வேண்டும். பெருவிரலை உட்பக்கமாக
வைத்து விரல்களை மடிக்கி தொடைமீது
கைகளை வைத்துக்
கொள்ள வேண்டும். நாக்கை உட்புறமாக
மடித்து நாக்கின் நுனி அண்ணாக்கில்
தொடும்படி வைத்துக்
கொண்டு சுழுமுனை தியானம்
செய்து வரவேண்டும்.

★நீண்ட நாள் பயிற்சிக்குப் பிறகு அமிர்தம்
சுரக்கும். அமிர்தம் உண்டால் ஞானம்
சித்திக்கும். தொலைவில் நடக்கும்
விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
வான சஞ்சாரம் செய்யலாம் என்று திருமூலர்
சொல்கிறார்.

★நாக்கு இயல்பாகவே அண்ணாக்குவரை
செல்லுமானால்
நாக்குக்கு கீழே உள்ள தசயை அறுக்க
வேண்டிய
அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு
அண்ணாக்கின் மேல் துவாரத்தில்
நாக்கை நுழைத்தவுடன் உடல்
மறதி ஏற்பட்டுவிடும்.
மூச்சு நின்று எத்தனை கோடி ஆண்டுகள்
ஆனாலும்
உடல் அழியாது, உயிரும் பிரியாது.
இயற்கை சீற்றங்களினால்
அல்லாது வேறெதினாலும் உடலை அழிக்க
முடியாது. நகமும், முடியும்
வளர்ந்து கொண்டே இருக்கும்.கண்களிலுள்ள
கருமணி தூய்மையாக இருக்கும். சித்தர்கள்
ஜீவசமாதியில்
இருப்பது இவ்வாறே என்று சொல்லப்
படுகிறது. தேரை, கருநாகம்,
நல்லபாம்பு போன்ற உயிரினங்களும்
உணவு கிடைக்காத போது இந்த
பயிற்சியை மேற்கொள்வதாக சொல்லப்
பட்டுள்ளது. இவைகளுக்கு கண், காது, உடல்
உணர்ச்சி இருக்கும் என்றும், உணவு
கிடைக்கும்
போது நாவை எடுத்து புசிக்கும் என்றும்
சொல்கிறார்கள்.

★அனுபவம் உள்ள சித்தர்கள்
தாமாகவே பயிற்சியிலிருந்து விடுபட்டுக்
கொள்வார்கள். அனுபவமில்லாதவர்கள் பிறர்
உதவியோடு மெதுவாக வாயைத்
திறந்து நாவை இழுத்து எடுத்துவிட்டு கை
கால்கள்
முடங்கி இருப்பதை மெதுவாகத்
தட்டி உணர்ச்சி உண்டாக்கினால் இயல்பான
மூச்சு போக்கு வரத்து உண்டாகிவிடும்.

சந்திர யோகம்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆

★காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் கால் வலத்திட்டு
பேணியே யிவ்வாறு பிழையாமல் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத்தாண்டே.
திருமந்திரம்- 866.

சந்திர கலையை ஒளிர வைத்து சந்திர
மண்ணடலத்தில் அமுதம் உண்ணும் யோகம்.

மூலத்தில் உள்ள
மூலாக்கினியை நாபிச்சக்கரத்தில் உள்ள
சூரியனோடு இணைத்து, அந்த
சூரியனை இடது மூளை பாகத்தில் ஒளிர
வைத்து, அந்த
ஒளியை வலது மூளை பாகத்தில் உள்ள
சந்திரன் மீது பட வைத்தால், சந்திரன் ஒளிரும்.
சூரியனும், அக்கினியும் உஷணமானவை.
சந்திர ஒளி குளுமை தரும். சந்திர மண்டலம்
குளிரும் போது அமுதம் சுரக்கும். அமுதம்
உண்டால் காலத்தை வெல்லலாம்,
சிவகதி அடையலாம். சந்திர
யோகத்தை பிழையில்லாமல் செய்தால்
ஆணியாகிய உடல் ஆயிரம் ஆண்டு கெடாமல்
விளங்கும்.

★சந்திர யோகி காமத்தை வெல்வார்.
அவரது விந்து விரையமாகாமல்
மூலாதாரத்தில் கட்டுப்பட்டு மூலாக்கினியால்
எரிக்கப்பட்டு மேலேறி சந்திரனில்
ஒளியேற்றும்.

★ ஸ்தூல உடலில் இடை, பிங்கலை என்னும்
இருநாடி வழியாக பிராணன் இயங்குவது
போல,
சூக்குமத்தில் இடநாடி வழியாக பிராணன்
இயங்கிக் கொண்டிருக்கும்.
அதுவே சந்திரயோகம்.சந்திர
யோகியர்களுக்கு மரணமே இல்லை என்று
திருமூலர்
சொல்லுகிறார். உலகில் ஞானமார்க்கத்தில்
ஈடுபட்ட பெரியோர்கள் பெரும்பாலும் சந்திர
யோகத்தில் திளைத்தவர்கள்தான்.
விஸ்வாமித்திரர் சூரிய கலையையும்,
வசிஷ்டர் சந்திரகலையையும்
பயன்படுத்தியதாகச் சொல்வார்கள்.

★சந்திர யோகத்தில் அமரும் விதம்.
வலது காலை அடியில் வைத்து,
இடது காலை மேலே வைத்து முதுகுத்தண்டு
நேரே இருக்கும்படியாக
அமர்ந்து கொள்ள வேண்டும்.இப்படி அமரும்
போது சுவாசம் இடது பக்கமாக ஓட
ஆரம்பிக்கும். கண்கள் மூக்கு நுனியை
பார்த்துக்
கொண்டிருக்க வேண்டும். உடல்
குளிர்வது போலத் தோன்றினால் ஐந்து நிமிடம்
சூரியகலை போட்டு அமர வேண்டும். சூரிய
கலையில் அமர்வது எப்படி என்றால்,
வலது காலை மேலே வைத்து,
இடது காலை கீழே வைத்து பருவ
மத்தியை பார்த்தபடி அமர வேண்டியது.
வலது மூக்கில் சுவாசம் வரும்
வரை இடது மூக்கை பிடித்துக் கொள்ள
வேண்டும். சுவாசம் வந்து ஐந்து நிமிட நேரம்
ஆன பிறகு சந்திர கலைக்கு மாறிக்
கொள்ளலாம.

★ பயிற்சியின் ஆரம்பத்தில் உடலில் பல
மாற்றங்கள் ஏற்படும். குரு அருகில்
இல்லை என்றால் மரணம் கூட ஏற்படக்கூடும்
எனச் சொல்லப் பட்டுள்ளது .சந்திர
கலை பயிற்சியை யார் வேண்டுமானாலும்
தினமும்இருவேளை அதாவது சுமார்
ஒருமணிநேரம் செய்யலாம். சித்தராகவோ,
ஞானியாகவோ விரும்புபவர்கள் 24
மணி நேரமும் சந்திர கலையில் இயங்கிக்
கொண்டிருக்க வேண்டும். சந்திர யோகம்
எனப்படும் சந்திர கலையைப்பற்றி விளக்க மிக
நீண்ட பதிவு தேவைப்படும்,
எனவே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.

★ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்
நாழிகை ஆக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல்லார் இச் சசிவன்னராமே.
திருமந்திரம் -874.

சந்திர யோகியாகிய சசிவன்னர் பல ஊழிகள்
மரணமில்லா பெருவாழ்வு வாழ்வர். இவர்கள்
ஊழி முதலான சிவனாகவே மாறிடுவர்.-திரு
மூலர். திருமந்திரம் 851-883 வரை சந்திர
யோகம் பற்றி விளக்குகிறது.
படித்து உணர்ந்து பயனடையுங்கள்.

★குடும்ப வாழ்வில்
இருந்து கொண்டே விந்து விரையமாகாமல்
சிவநிலை அடைய பரியங்க யோகம் உதவும்.
இல்வாழ்வையும், யோகவாழ்வையும்
இணைக்கும் அற்புதமான யோகம் பரியங்க
யோகம். யோகம் என்றால் ஐக்கியம் என்பர்.

ஆத்மா சிவனோடு ஐக்கியமாவது போல,
ஆணும் பெண்ணும் விந்து விரையமாகாமல்
ஐக்கியமாவதே பரியங்க யோகம்.
இதைக்குறித்து திருமந்திரம் - 825- 844
வரையுள்ள மந்திரங்கள் விளக்குகின்றன.

★அமுரி தாரணை என்றால்சிறுநீர் வைத்தியம்
என்றும், சுக்கில
சுரோணிதத்தை மூலாதாரத்திலிரு
ந்து சகஸ்ராரத்திற்கு ஏற்றும் பயிற்சி என்றும்
இருவேறு கருத்துக்கள் உண்டு.
பெண்களுக்கும்
யோகமார்க்கம் சித்திக்கும்
என்பதை தெளிவு படுத்தவே சுரோணிதமும்
சொல்லப் பட்டுள்ளது. திருமந்திரம் -845-850
வரை இதைக்குறித்த விளக்கங்களைக்
காணலாம்.

முத்திரைகளின் அரசன் என்று கேசரி
முத்திரையைச் சொல்வார்கள். அதைப்போல
ராஜயோகத்தில் யோகத்தின் யோகம் என்று
குண்டலினி யோகத்தைக் கூறுவார்கள். நம்
மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும்
உயிர்சக்தியே குண்டலினி ஆகும்.

★அதாவது ஒவ்வொரு மனிதனிடமும்
இருக்கும் பேரண்ட சக்தியே குண்டலினி.
குண்டலம் போல வளைந்திருப்பதால் இந்தப்
பெயர் வந்தது என்ற கருத்தும் உண்டு.
குண்டலினிக்கு சித்தர்களும், ஞானிகளும் பல
பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.
பாம்பாட்டி சித்தர் அதைப் பாம்பு என்பார்.
மேலும் குடிலாங்கி, புஜங்கி, சக்தி, ஈஸ்வரி,
வாலை, அருந்ததி, வாமி, காமி, துரைப் பெண்,
ஆத்தாள், ஞானம்மா, கண்ணம்மா, பத்து, கன்னி,
மௌனி, வன்னி, பரப்பிரம்மம், காற்றறியாத்
தீபம், சிவ சொரூபம், சஞ்சஞார சமாதி, மூல
அங்கி, தணல், மூலக்குடி வன்னித் தேவர்
என்று இன்னும் பல பெயர்கள் குண்டலினிக்கு
உண்டு.

★குண்டலினிச் சக்தியை மூலாதாரச்
சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை கொண்டு
செல்வதையே குண்டலினியை எழுப்புதல்
என்பர். பொதுவாக யோக சாதனம் என்றாலே
உள்ளூர இருக்கும் வெப்பத்தைத் தூண்டுவதே
ஆகும். தபஸ் என்றால் வெப்பம் என்று ஒரு
பொருள் உண்டு. அதாவது வெப்பத்தை
எழுப்புவதற்கான முயற்சியே தவம். அப்படி
வெப்பத்தால் தூண்டப்பட்ட குண்டலினி
ஒவ்வொரு சக்கரங்களையும் கடந்து
சகஸ்ராரத்தை அடையும். நமது உடலில்
விளங்கும் குண்டலினி சக்தியானவள்
சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே
சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே
மோட்சம், இதுவே முக்தி. இதையே
ஞானமடைதல் என்கிறோம். பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும்,
நோக்கமும் சாதகருக்கு புரியும்.

★ஞானவாசல் திறந்தது என்று சொல்வது
இதைத்தான். கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல்
திறக்கும். இதையே திருமூலர், மூலாதாரத்
துவாரத்தையும், கபலத்தில் உள்ள மேலைத்
துவாரத்தையும் திறக்க வல்லவர் களுக்கு,
காலனைக் குறித்த கவலையில்லை, பயமும்
இல்லை என்கிறார்.

மூலாதாரத்தில் இருந்து
குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது
ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும்
அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை
வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன.
சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம்,
சங்கு, கண்டாமணி, காகனம் போன்ற
ஓசைகளைச் சாதகர்கள் கேட்பார்கள். கிண்கிணி,
வேணி, வீணை, தந்திரி, வண்டு போன்றவற்றின்
இனிய ரீங்காரமும் கேட்கும்.

★மேலும் ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும்
போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும்.
அதனால் ஏற்படும் சக்திதான் சித்தி எனப்படும்.
மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை
பயனப்படும் குண்டலினியை
அக்கினிகுண்டலினி என்பர். அனாகதம்
தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது
சூரிய குண்டலினி என்பார்கள். அதையும்
தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும்
போது சந்திர குண்டலினி என்பார்கள்.
முடிவில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போது
துரிய குண்டலினி என்பார்கள்.
மேலும் குண்டலினியானது தோற்றம், நிலைபேறு, அழிவு என்கிற மூன்று நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும் மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி மேலே செல்கிறது. அவை மூலாதாரத்தில் உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ முடிச்சு என்பனவாம்.

★யோகத்தின் குறிக்கோள் இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச் செய்வதே ஆகும். அங்ஙனம் நிலைபெற்று, ஒடுங்கி சிவனோடு இணையும் போதுதான் சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால், காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச் சாறு, கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம், செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால் போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப் பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான்.
★பேரின்பத்தில் திளைக்கிறான். இதையே உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள். இந்த அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும் சுழுமுனை வழியாக மூலாதாரத்தை அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள் என்று சொல்லப்பட்டுள்ள
து. அவளோடு அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால் உடம்பு கொழுந்து போன்று என்றும் பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர் சொல்கிறார். முதல் ஆறு சக்கரங்களையும் யோகா, தியானம், பக்தி, மந்திர உச்சாடனம் போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து செய்துவர தாண்டிவிடலாம், ஆனால் ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல.

★அதற்கு நீண்ட பயிற்சியும், பக்குவமும் தேவை. ஒரு சிறந்த குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சக்கரங்களின் வாசல் எளிதில் திறக்காது. விடாமுயற்சியும், வைராக்கியம், இந்திரிய ஒழுக்கமும் அவசியம். இவையெல்லாம் கூடுமானால் மெல்ல மெல்லத் திறக்கும்.
நண்பர்களே! லம்பிகா யோகத்தில் சிறப்பாகக் குறிப்பிடப்படும் மூன்றாவது கண்" என்ற ஆங்ஞா சக்கரம் [பினியல் சுரப்பி(pineal gland)]பற்றி கீழே படித்துப்பாருங்கள். " #மூன்றாவது_கண் " நம் ஹிந்து மதத்தில் சிவ பெருமானுக்கு புருவ மத்தியில் மூன்றாவது கண் உள்ளது.
உண்மையில் நம் அனைவருக்குமே மூன்றாவது கண் உள்ளது. அது புருவ மத்தியில் மூளையில் கண் போன்ற அமைப்பு உள்ளது.
அதுவே # பினியல்_சுரப்பி (pineal gland). இச்சுரப்பியின் செயல்பாடுகள் மருத்துவ ஆய்வுக்கே புலனாகாத புதிர்களாக உள்ளது.ஆய்வுக்காக எலியின் பினியல் சுரப்பியை நீக்கி பார்த்த போது அவை வழி தெரியாமல் குழம்பியது கண்டு பிடிக்கப்பட்டது . நம் யோகக்கலையில் குறிப்பிடப்பட்ட ஏழு சக்தி மையங்களில் மிக முக்கியமானது புருவ மத்தியில் உள்ள"
# ஆங்ஞா_சக்கரம் .
முக்காலமும் உணரும் ஆற்றலான சூட்சும ஞான திருஷ்டி என்னும் # CLAIVOYANCE -ஆங்ஞா சக்கரம் தூண்டப்படுவதால் கிடைப்பதாக இந்து தத்துவங்கள் கூறுகிறது. அதை தூண்டுவதற்க்காகவே புருவ மத்தியில் பொட்டு வைக்க அறிவுறுத்தப் படுகிறது. மேலும் ஆங்ஞா சக்கரத்தைப் பற்றி யோக நூல்களில் கூறியுள்ளது கீழே தரப்பட்டுள்ளது. இது இரு புருவங்களுக்கு இடையே நெற்றிப் பகுதியில் அமைந்துள்ளது.
இதை நெற்றிக்கண் சக்கரா என்று அழைக்கிறார்கள். இது கருநீல நிறத்தில் இரு இதழ் தாமரையாக உருவகப்படுத்தப்
பட்டுள்ளது. இது ஓம் என்ற சப்தத்தால் தூண்டப் படுகிறது.
அகப்பார்வை, ஆழ்மன சக்திகள் ,தெய்வீக ஞானம் இந்த சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து உள்ளது.
# அறிவியல்_ஆய்வுகள் பினியல் சுரப்பியை பற்றி கூறுவது கீழே தரப்பட்டுள்ளது இச் சுரப்பி மெலட்டோனை சுரக்கிறது. மேலும் இச்சுரப்பு சோடியம்,பொட்டாச ியம்,ஆகிய உப்புகளின் அளவை சீராக வைக்கிறது.
இதனால் நம் உடலில் விழிப்பு,துயில் சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது. அறிவு,நற்குணம்,தன்னம்பிக்கை. மனஉறுதி ஆகியவற்றை தீர்மானிக்கிறது. இச் சுரப்பி நன்கு வேலை செய்யும்போது மனித மூளையின் ஆற்றலும் செயல்திறனும் பல மடங்கு அதிகரித்து ஜீனியசாக( # genius ) மாறுகிறான்.

★ இறுதியாக #பகவத்_கீதை ஸ்லோகம் கூறி இந்த பதிவை நிறைவு செய்வோம்.
"எவனொருவன் இறக்கும் நேரத்தில் தன் யோக சக்தியால் உயிர் மூச்சை புருவ மத்தியில் நிறுத்தி உடலை விடுகிறானோ அவன் இறைவனின் புனிதமான ஆன்மீக உலகை அடைகிறான்" -அத்தியாயம்8 ,ஸ்லோகம் 10.
நன்றி:-

-சித்தர்களின் குரல் shiva shangar

1 comment:

  1. Dr.M.Kumaresan MS
    PUBERPHONIA. Puberty time for boys voice break to get male, low pitch voice. We correct it at any age. Siva ENT Hospital 159 Lloyds Road, Royapettai. Chennai 14.No appointment needed for this treatment because it is my special interest.5 days treatment .Rs.10 thousand or as you like.974 cases of puberphonia treated. Whatever you can afford, we still be able to provide the complete treatment. This service,we provide as an individual basis as a social cause.
    98410 55774
    - Dr. M. Kumaresan MS ENT
    -

    ReplyDelete