வாழ்க வையகம் வாழ்க வளமுடன். ஜனவரி 15
நித்தியக்கடன் : அதிகாலை எழுந்திருந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்யவும், அந்த நாள் இனிய நாள்.
இன்றைய நல் சிந்தனை
இன்று சீவித்துவரும் ஒரு மனிதன் வாழ்க்கையில் காணும் சகல வசதிகளும், சென்றகாலத்தில் வாழ்ந்த முன்னோர்களின் செயல்களாலும், இக்காலத்திலும் வாழும் மக்களின் கூட்டுறவாலும் கிடைத்து வருகின்றன; இதுபோன்றே மனித சமுதாயத்தின் வாழ்வு நடந்து வருகிறது. இந்த ஞாபகம் உண்டானால், ஒவ்வொரு மனிதனுக்கும் தான் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கடமை தெரிந்துவிடும்.
இன்றைய சாதகம் : இன்று ஞாயிறு காலை துரியாதீதம். மாலை துரிய தவம்
இன்று அகத்தாய்வு :
நான் யார்
இன்றைய பண்புப் பயிற்சி
ஜனவரி 15
அனைத்திலும் நிறைவைக் காணும் பண்பை வளர்த்துக் கொள்வோம்.
இறைவன் படைப்பில் குறையே இல்லை என்பதுதான் உண்மை. மனம் நிறைந்து இருந்தால் அனைத்தும் நிறைவாக தெரியும். குறை தெரிந்தால் நம் மனத்தின் மாயை என உணர்ந்து கொள்வோம்.
- நாளை தொடரும்.
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும்
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment