மூச்சு விடுதலுக்கு எந்த முறையையும்
பயன் படுத்தாதே ...
மூச்சு விடுதல் இயல்பாக இயற்கையாக
இருக்கட்டும் ...
மூச்சு விடுதலை சாதாரணமாக ஒரு சாட்சியாக
இருந்து கவனி ...
உன்னுடைய பிராணன் அல்லது மூச்சு விடுதல்
மூலமாகத் தான் நீ ஆன்மாவோடு இணைக்கப்
பட்டு இருக்கிறாய் ...
மூச்சு விடுதல் மூலமாகத் தான் ஆன்மாவும்
உடலும் ஒன்றாக சேர்க்கப் பட்டுள்ளது ...
மூச்சு விடுதல் மூலமாகவே உடலில் இருந்து
உடல் அற்ற தன்மைக்கு செல்ல முடியும் ...
நீ மூச்சைக் கவனித்துக் கொண்டே இருக்கும்
போது உன்னுள் மாபெரும் அமைதி நிகழும் ...
உன்னுடைய விழிப்புணர்வு முழுமையாக
இருக்குமானால் மூச்சு விடுதலின் சிறிய
மாறுதல்கள் கூட கவனத்தில் கொள்ளப்படும் ...
ஓஷோ
No comments:
Post a Comment