ஒரு சூஃபி மகானின் தாயார் மிகுந்த செல்வாக்கும் இறைவழிபாட்டிலும் பயபக்தியிலும் சிறந்து விளங்கினார்.
அவ்வூரில் உள்ளவர்கள் தங்கள் பொருட்களை அவரிடம் கொடுத்து விட்டு தேவையான போது வாங்கிக் கொள்வார்கள் அவரின் நேர்மை எல்லோரும் அறிந்தது.
ஒரு முறை இரண்டு நபர்கள் ஒரு பெட்டியை அவரிடம் கொடுத்து விட்டு சென்றார்கள். சில நாட்களுக்குப் பிறகு ஒரு நபர் வந்து பெட்டியை கேட்டார். அம்மையாரும் கொடுத்து விட்டார்.
மேலும் சில நாட்களுக்கு பிறகு இன்னொரு நபர் வந்து பெட்டியை கேட்டார் அம்மையார் அவர் நண்பரிடம் கொடுத்து விட்டதாக கூறினார்.
உடனே இந்த நபர் எப்படி அவரிடம்கொடுக்கலாம்? இரண்டு பேர் சேர்ந்து வந்து கேட்டால் தானே கொடுக்க வேண்டும் என்று கூச்சல் போட ஆரம்பித்து விட்டார். அம்மையார் பயந்து விட்டார்
உள்ளே இருந்த அவர் சூஃபி மகன், அவருக்கு இளம் வயது, அவரிடம் ஓடிச் சென்று அம்மையார் நடந்ததை கூறினார்.
பயப்படாதீர்கள் அம்மா. நான் பேசிக் கொள்கிறேன் என்று அந்த நபரிடம் இவ்வாறு கூறினார்:
நீங்கள் கொடுத்த பெட்டி எங்களிடம் தான் இருக்கிறது. உங்களுக்கு அந்த பெட்டி வேண்டுமென்றால் உங்களுடன் வந்த முதல் நபரையும் அழைத்து வாருங்கள். இருவரும் சேர்ந்து வந்தால் தான் பெட்டி தரப்படும்.
வந்தவர் என்ன செய்வதென்று அறியாமல் வாயடைத்துப் போய் விட்டார்.
எந்த இக்கட்டான சூழ்நிலையையும் நிதானமாக பதட்டப்படாமல் யோசித்தால் எளிதாக கையாளலாம்.
No comments:
Post a Comment