Maharishi thought
*வேதாத்திரிய மெய்விளக்கம் 23-01-2020 உலக அமைதி நாள் 23-01-0035*
*அறிவாட்சித்தரம் (Personality)*
அன்பர்களே! நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள், கொஞ்ச நேரம்
*கண்ணை மூடிக் கொண்டிருந்தால் எத்தனை எண்ணங்கள் வருகின்றன?*
*எங்கிருந்து வருகின்றன? அவ்வளவும் எங்கே அடங்கியிருக்கின்றன? எப்படி வருகின்றன?*
மூன்று வயது முதல் இன்று வரையில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும் ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்து கொண்டே இருக்கும். நாம் செய்வது எல்லாவற்றையும், *இறைநிலை (Static State, Unified Force, The Source of all the Forces) கருமையத்தில் பதிய வைக்கிறது.*
மனம் என்பது அலை. இறையாற்றல் என்பது நிலை. நிலை அசையும்போது படர்க்கை நிலையிலே மனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
*நமக்குள்ளாக நாம் என்னென்ன செய்கிறோமோ, அவற்றை இறைநிலை கருமையத்தில் இருப்புக் கட்டி வைக்கிறது. கருமையம் (Genetic Center) என்பது - இறைநிலை, வித்துக்குழம்பு, உயிர்ச்சக்தி என்ற மூன்றும் சேர்ந்து எந்த உயிருக்கும் அதன் உடலின் மையத்திலே ஓர் இடத்தை எடுத்துக்கொண்டு அங்கே இயங்கிக் கொண்டிருப்பது.*
எந்தப் பொருள் சுழன்றாலும் மையத்தில் அழுத்தமான இடம் ஏற்படும்.
உடலில் ஜீவகாந்த சக்தி சுழலும் போது மையம் கொண்டு விடுகிறது. உயிர்களின் மையத்தில் அழுத்தம் உண்டாகிறது. அதைதான் கருமையம் என்று சொல்கிறோம்.
*அந்த மையத்தில், நாம் பார்ப்பது, கேட்பது எல்லாவற்றையும் இறைநிலை இறுக்கி, சுருக்கி, இருப்புக் கட்டிக் கொள்கிறது.* மீண்டும் அந்தந்த
மன அலைச்சுழல் (mind frequency) வருகிற போது, இருப்பில் இருக்கக்கூடியதை மூளையின் செல்கள் விரித்துக் காட்டுகின்றன. *அதுதான் எண்ணம்.*
சுருங்கியது விரிந்து எண்ணமாக உண்டானது. எண்ணம் உண்டானதால் உடலில் உள்ள எல்லாச் செல்களும் சேர்ந்து, அந்த எண்ணத்தைப் பூர்த்தி செய்வதற்கு, செயலும் உண்டாகிறது.
*செயலினால் இன்பமோ, துன்பமோ, அமைதியோ, பேரின்பமோ உண்டாகிறது. எண்ணம், செயல், விளைவு, இன்ப துன்ப உணர்வுகள் அத்தனையும் மீண்டும் நமக்குள்ளாக, நமது தன்மைகளாகப் பதிவாகின்றன.* இப்படியே பதிந்து, பதிந்து, எத்தனையோ கோடிப் பதிவுகளை நாம் வைத்திருக்கிறோம்.
*அத்தனையும் சேர்ந்து நம் அறிவாட்சித்தரமாக (Personality) உள்ளது.*
*அறிவறியும் தவம்*
இரு விழிகள் மூக்கு முனை குறிப்பாய்நிற்க,
எண்ணத்தைப் புருவங்கள் இடை நிறுத்தி,
ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது,
உள்ளொளியே பூரித்து மூல மான
கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்;
கருத்துக்கு இந் நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்றும்;
அருவ நிலையாம் ஆதி உருவாய் வந்த,
அத்துவித ரகசியமும் விளக்க மாகும்.
(ஞானக்களஞ்சியம் கவி: 1466)
*காந்த ஆற்றலின் பெருமை*
அறிவே தான் 'நான்' என்று ஐயமின்றி தேர்ந்தால்
அதுவேதான் படர்க்கையிலே அலைமனம் என்றறிவோம்!
அறிவதனின் இருப்பிடமோ, அடுத்த மறை பொருளாம்
அதிநுண்ணிய பரம அணு., அதன் மையம் ஆகும்.
அறிவுக்கு மூலநிலை அகன்ற இறைவெளியே
அதனை வான் காந்த மென்றும், அப்பாலுக்காப்பால்
அறிவே தான் தெய்வமென்ற அகன்ற பரம்பொருளாம்.,
அறிவறிந்தால் அனைத்தறிவோம் அகம்தெய்வம் தானாம்.
(ஞானக்களஞ்சியம் கவி: 1225)
*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.*
*தத்துவஞானி வேதாத்திரி மகரிசி*
No comments:
Post a Comment