Thursday, January 23, 2020

Maharishi questions answered _2

19-01-2020

*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*

❓ *கேள்வி: சுவாமிஜி, தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்ற சொற்களுக்கு விளக்கம் என்ன?*

✅ *பதில்:* இவ்வார்த்தைகள் ஆன்மீகப் பயிற்சியிலுள்ளோருக்கு மிக உயர்ந்த சில கருத்துக்களை விளக்குகின்றன.

எந்த வெளிப்பொருளையும் நிகழ்ச்சியையும் அறிவு நாடாமல் உன்னையே நோக்கி அது நிற்க வேண்டும் என்ற குறிப்பு “தனித்திரு” என்பது. உன் மூலம் நாடி அறிவு நிற்பது, உன்னில் ஒடுங்கி நிற்பது; எங்கும் நிறைந்த பூரணமான அரூப நிலையில் நிற்பது என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உன் மகத்துவத்தை அறிந்து கொள்வதில் வேட்கை கொண்டிரு என்பதே “பசித்திரு” என்பதாகும். “நான் யார்? அறிவா? உயிரா? உடலா? இம்மூன்றும் வேறு வேறா? ஒன்றா? இவற்றிற்கு மூலமும் முடிவும் யாது?” என்பது போன்ற விளக்கங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வத்தோடு இரு என்பதை பசித்திரு என்னும் வார்த்தை உணர்த்துகிறது.

பழைய ஞாபகங்களும், பிறர் விருப்பங்களும் உன் அறிவில் அடிக்கடி பிரதிபலிப்பதால் உன் சிந்தனை அடிக்கடி திசை மாற்றம் அடையக்கூடும். அதனால் ஆன்மீகத் துறைக்கு முரணாக நீ செயலில் ஈடுபட நேரிடக் கூடும். ஆகையால் நீ மிகவும் உஷாராக, உன் நிலையில் மாறுபாடு அடையாமல், விழிப்பாயிரு என்று வலியுறுத்திக் கூறுவதே “விழித்திரு” என்ற வார்த்தையாகும்.

வாழ்க வளமுடன்!!

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

(நாளையும் தொடரும்)
K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

No comments:

Post a Comment