21-01-2020
*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*
❓ *கேள்வி: ஐயா, மக்களுடைய பண்பாடு சிறக்க வழி என்ன?*
✅ *பதில்:* அறம், தத்துவஞானம் இவை எந்த அளவுக்கு ஓங்குகின்றனவோ, அந்த அளவே சமுதாயம் பண்பாட்டில் உயரும். மக்கள் சீரும் சிறப்பும் பெற்று இனிது வாழ்வார்கள்.
❓ *கேள்வி: சுவாமிஜி, மனிதன் துன்பத்துக்கு அவன் மட்டும் தான் காரணமா?*
✅ *பதில்:* பொதுவாக அப்படித்தான். எனினும், மனிதனிடம் மூன்று வகையான வினை விளைவுகள் செயல்புரிகின்றன.
1. அவன் ஆற்றும் வினை. இத்தோடு கருத்தொடராக வந்த வினையும் சேர்ந்து கொள்ளும்.
2. சமுதாயத்திலிருந்து வரும் வினைகள்.
3. பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளான பரிணாமம், இயல்பூக்கம் என்ற தொடரில் இயற்கையின் முதல் நிலையான இறைவெளியும் விண் துகள்களில் எழும் அலைகளும் கூடிப் பேரியக்க மண்டலம் முழுவதும் காந்தக் களமாகி, ஒவ்வொரு பொருளிலும் அதன் அணுக்கூட்டுத் திணிவு நிலைக்கேற்ப ஊறு, ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் என்பனவாகத் தன்மாற்றம் பெற்று இயங்கிப் பல்வேறு விளைவுகளைத் தொடராகக் கொடுத்து கொண்டிருக்கும் அருட்பேராற்றலின் திருவிளையாட்டுத் தொடர் விளைவுகள்.
ஆக முன்று வகைச் செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் உட்பட உயிரியக்க நிலையமே மனிதன்.
வாழ்க வளமுடன்!!
*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*
(நாளையும் தொடரும்)
K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam
No comments:
Post a Comment