*வேதாத்திரிய இரகசியங்கள்: ஜனவரி 17*
*முதல் வேலை*
பதினெட்டு வயது முடிவில், மகரிஷி சென்னை மயிலாப்பூரில் வசித்த கற்பகம் அக்காள் வீட்டில் வந்து தங்கினார். அக்காள் கணவர் திரு. சண்முக முதலியார். மைத்துனருக்கு வேலை வாங்கிக் கொடுக்க தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லிவைத்தார். சென்னையில் பலநூறு குதிரைப் பந்தய கிளப்புகள் இருந்தன. மவுண்ட்ரோட்டில் “ராயல் ரேஸிங் கிளப்” என்ற நிறுவனத்தில் டிக்கட் கொடுக்கும் வேலையில் சேர்ந்தார். சம்பளம் ரூ.50/-, வாரத்திற்கு இரண்டு ரேஸ்கள் வீதம் புதன்கிழமையும், சனிக்கிழமையும் நடக்கும்.
குதிரைப் பந்தய தினத்தின் முதல் நாள் மாலை மூன்று மணி முதல் ஏழு மணி வரையிலும் பந்தய நாளன்று காலை எட்டு மணி முதல் இரண்டு மணி வரையிலும் வேலை செய்ய வேண்டும். வேலை செய்யும் நாட்களில் முழு நாளுக்கு 1½ ரூபாயும் அரை நாளுக்கு ஒரு ரூபாயும், சிற்றுண்டி அலவன்ஸ் என்று கொஞ்சம் காசும் கொடுப்பார்கள். மாதம் ரூ. 75/-க்குக் குறையாமல் கிடைத்தது. ரூ. 10/- பெற்றோருக்கும், ரூ. 10/- சீட்டு சேமிப்பதற்கும் போக மிகுதியை அக்காள் கணவரிடம் கொடுத்துவிடுவார்.
சமுதாயத்தைக் கெடுக்கக் கூடிய சூது விளையாட்டுதான் குதிரை ரேஸ், மனிதர்களின் உடலை, மனதை கெடுப்பது மட்டுமல்லாமல், வாயில்லா ஜீவனாகிய குதிரையும் துன்புறக் கூடிய தொழில் ஆகும். அதனால் தான் “என் வினையைக் கழித்துக் கொள்ளக் கொஞ்ச நாள் அங்கு வேலை செய்ய வேண்டியிருந்தது” என்று பிற்காலங்களில் கூறியுள்ளார்.
நாளைய இரகசியம்: *முதல் குரு*
------------------------------------------------------------------
K.Pudur MVKM Trust, Madurai - www.fb.com/vethathiri.gnanam
சென்னை மாநகர் அறிவுத்திருக்கோயில் - CALM TRUST
No comments:
Post a Comment