20-01-2020
*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*
❓ *கேள்வி: சுவாமிஜி, அறிஞர்களின் சிந்தனைகள் அவர்கள் காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படாதது ஏன்?*
✅ *பதில்:* குழந்தைகளுக்கு உடை தைக்கும்போது அவர்களின் வளர்ச்சியை ஞாபகத்தில் கொண்டு தாராளமான அளவில் தைக்கிறோம். போகப் போக அதன் உபயோகம் நீண்ட காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும்.
இதுபோன்றே, ஞானிகள் உலக மக்களுக்குத் தரும் அறநெறி போதனைகளும், நல்வாழ்விற்கேற்ற திட்டங்களும் அவ்வக் காலத்திற்குச் சிறிது பொருத்தமில்லாமலும், அவசியமற்றவை போலும் சிலருக்குத் தோன்றலாம்.
முற்கால அனுபவம், தற்காலத் தேவை மற்றும் சூழ்நிலைகள், எதிர்கால விளைவுகள் மூன்றையும் இணைத்து யூகிக்கும் திறனான திரிகால ஞானம் என்ற அகன்ற நோக்கில் ஞானியர்களுடைய திட்டங்களும் போதனைகளும் உருவாவதால், அவற்றில் அடங்கியிருக்கும் நன்மைகளைக் குறுகிய நோக்கம் உள்ள மயக்கவாதிகளாலும், பாமரர்களாலும் உடனே எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அத்தகைய அறிஞர்கள் கருத்துக்களைச் சிறந்த சிந்தனையாளர்களும், நீண்ட எதிர்காலமுமே தெளிவாக விளக்கி வைக்கும்.
வாழ்க வளமுடன்!!
*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*
(நாளையும் தொடரும்)
K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam
No comments:
Post a Comment