Thursday, January 23, 2020

Maharishi thought Jan 19th

*வேதாத்திரிய இரகசியங்கள்: ஜனவரி 19*

*வைத்திய பிஷக்*

வைத்திய பூபதி கிருஷ்ணா ராவ் அவர்கள் போதனை செய்த ஆயுர்வேத பாடங்கள் இளம் வேதாத்திரியின் உள்ளத்தில் தெளிவாக இடம் பெற்றன. அக்காள் கணவர் ஆயுர்வேத சித்த மருந்துகளைக் கையாளும் மருத்துவராக இருந்ததால், நேர்முறையில் பலவகையான சூர்ணம், பஸ்பம், எண்ணெய், லேகியம் முதலியவற்றைச் செய்யும் திறனும் உண்டாயிற்று.

இவரது மருத்துவ திறமையில் மகிழ்ச்சி பெற்ற வைத்திய பூபதி, இவரை பட்டம் பெற்ற ஒரு மருத்துவராக்க விரும்பினார். அகில இந்திய ஆயுர்வேத மகா மண்டல் அண்ட் வித்யா பீடம் (All India Ayurvedic Maha Mandal and Vidya Peed) என்ற நிறுவனத்தின் கிளை சென்னையிலிருந்தது. ஆயுர்வேதக் கல்லூரிகள், நடத்தி, தேர்வுகள் மூலம் வெற்றி பெறுபவர்க்கு நற்சான்றிதழ் வழங்கினர். அந்த மருத்துவ சான்றுக்கு அக்காலத்தில் நல்லதோர் மதிப்பு இருந்தது.

வடமொழியில் எழுதுபவர்க்கு வைத்திய விசாரதா என்ற பட்டமும் இதர மொழிகளில் எழுதுபவர்களுக்கு வைத்திய பிஷக் என்ற பட்டமும் கொடுப்பர். வைத்திய பூபதி, வேதாத்திரியாரை அந்தப் பரீட்சையை எழுதும்படி தூண்டினார். மொத்தம் ஒன்பது பிரிவுகள். முதலாண்டில் ஆறு பிரிவுகளையும் நல்ல மார்க்குடனும் மறு ஆண்டு மூன்று பிரிவுகளை பாஸ் செய்தார். நான்கு ஆண்டுகள் அதெற்கென அமைந்த ஆயுர்வேதக் கல்லூரிகளில் படித்தவர்களால் தான் தேர்ச்சியடைய முடியும். நேர்முறை பயிற்சிகளுடன் கூடிய பாடப் பிரிவுகள் ஆகும். வேதாத்திரி மருத்துவத்தில் இந்திய அரசின் “வைத்திய பிஷக்” என்ற பட்டம் பெற வேதாத்திரியாரின் ஆர்வமும் வைத்திய பூபதியின் வழிகாட்டலும் தான் காரணம்.

*_அறப்பணியாம் நோய்தீர்க்கும் தொழிலை ஏற்று_*
*_அல்லும் பகலாய் உழைக்கும் மருத்துவர்காள்!_*
*_உறக்கம், ஊண்உடை, வாழ்க்கைத்துணை யாவர்க்கும்_*
*_உற்றகாலங்களிலே கிடைக்கா விட்டால்,_*
*_சிறப்பாக அமைந்திருக்கும் பருஉடற்கும்_*
*_சிந்தனைக்கும், என்னென்ன விளையும்? ஆராய்வீர்!_*
*_இறக்குமட்டும் வாழ்க்கைஇன்பம் அளவாய்த் துய்க்க_*
*_ஏற்றஒரு ஆட்சிமுறை வகுத்தேன் ஆய்வீர்!_*

ஞானக்களஞ்சியம் கவி: 964. சுகாதார நிபுணர்களே (1955)

நாளைய இரகசியம்: *எண்ணமே மூலம்*
------------------------------------------------------------------
K.Pudur MVKM Trust, Madurai - www.fb.com/vethathiri.gnanam
சென்னை மாநகர் அறிவுத்திருக்கோயில் - CALM TRUST

No comments:

Post a Comment