*வேதாத்திரிய இரகசியங்கள்: ஜனவரி 16*
*ஞானக்குழந்தை*
பெற்றோர்களுடன் 18 வயது வரை இருந்த வேதாதிரியார் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருப்பார். அவர்கள் கூறும் பதில் ஒப்புக் கொள்ளத்தக்கதாக இல்லையெனில், காரணத்தோடு விளக்கத்தை எடுத்துக் கூறுவார். விளக்கத்தைக் கேட்டு பூரித்து போவார்கள். இதனால் தங்களது ஏழ்மை, வறுமை, துன்பம் ஆகியவை மறந்து போவதாக கூறுவார்கள்.
உணவு ஊட்டும்போது கஜேந்திர மோட்சம் கதையை அன்னை கூறுவார்.
ஏழு வயதானபோது அக்கதையில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. கூடுவாஞ்சேரியில் ஒருவரின் 10-ஆவது நாள் மரணச் சடங்கினை மோட்ச தீபம் என்றனர். மோட்சம் என்றால் என்ன என்று அன்னையிடம் கேட்டார். இறந்து விடுவதை மோட்சம் என்கிறார்கள் என்றார். முக்தி, மோட்சம் எல்லாம் ஒன்றுதான் என்றார். அப்படியானால் கஜேந்திர மோட்சத்தில் ஆதிமூலம் முதலைக்கு முக்தி, யானைக்கு மோட்சம் கொடுத்தார் என்று நீங்கள் சொன்னது, இரண்டுமே செத்துப்போய்விட்டது என்றுதானே அர்த்தமாகிறது என்றார்.
கூர்ந்த அறிவுடைய மகனின் மனநிலையை அன்னை புரிந்து கொண்டு, பெரியவர்கள் எனக்குச் சொன்ன கதையை நான் அப்படியே உனக்குச் சொன்னேன் என்றார் அன்னை. வீட்டிற்கு வந்ததும் இதே கேள்வியைக் கேட்டார் அன்னையைப் போலவே தந்தையும் பதில் கூறினார். பிறகு மகன் விளக்கமாகக் கூறியதைக் கேட்டதும் மனம் பூரித்து குழந்தை வயதிலேயே பிரணவத்திற்கு அப்பனையே விளக்கம் கேட்டு, பின் தானே விளக்கிய முருகன், சிவனையே வியப்பில் ஆழ்த்தினான். அதுபோலத் தானிருக்கிறது இவன் நமக்கு விளக்குவது என்று தந்தை அன்னையிடம் கூறி மகிழ்ந்தார்.
*_அறிவு அறிவுக்கு அடிமையாவதே பக்தி,_*
*_அறிவை அறிவால் அறியப்பழகுதல் யோகம்,_*
*_அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி,_*
*_அறிவை யறிந்தோர் அன்பின் அறமே ஞானம்._*
மாக்கோலம் கவி: “யோகம் – முக்தி – ஞானம் 23-12-56”
நாளைய இரகசியம்: *முதல் வேலை*
------------------------------------------------------------------
K.Pudur MVKM Trust, Madurai - www.fb.com/vethathiri.gnanam
சென்னை மாநகர் அறிவுத்திருக்கோயில் - CALM TRUST
No comments:
Post a Comment