Saturday, January 25, 2020

NEW GENERIC MEDICAL SHOP in Madurai.

Now we open a NEW GENERIC MEDICAL SHOP in Madurai.

எல்லா மருந்துகளும் அதன் GENERIC பெயரில் கிடைக்கும்..

🚑மதுரையில் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டு
விற்பனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது🚑
மருந்தகம் நேரம்
காலை:10-00 முதல் 2-00
மாலை:04-30 முதல் 10-00
19, மஞ்சணக்காரத்தெரு,
(பழைய சகுந்தலா கல்யாண மண்டபம் கட்டிடம்) மதுரை -  625001

இங்கு மருந்து *70%* தள்ளுபடி விலையில் கிடைக்கும் இது ஒரு மத்திய அரசாங்க நிறுவனம்..

300 மதிப்புள்ள மருந்து 79 ரூபாய் மட்டுமே அனைவரும் பயன் பெறுங்கள்...

மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்..

மக்கள் மருந்தகம்

இங்கு தரமான ஆங்கில மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கும்.

(எ.கா) மற்ற மருந்தகங்களில்
ரூ. *1500* க்கு கிடைக்கும் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் ரூ.300 மட்டுமே..

சர்க்கரை, இரத்தஅழுத்தம்,
இருதயம்,
கொழுப்பு,
அலர்ஜி, போன்ற
நோய்களுக்கு அதிக அளவில் மருந்துகள் உள்ளன..

தொடர்புக்கு:
மக்கள் மருந்தகம், Mobile : ♥97886 33053 & 98948 37452♥

மக்களை அழிக்கும் பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றது.

ஆனால் உயிரை காக்கும் மருந்துகள் விலை அதிகமாக உள்ளது.
இதை மாற்றவே
மக்கள் மருந்தகங்கள்.

அனைவருக்கும் பயன்படுமாறு இப்பதிவை மற்ற நண்பர்களுக்கும்
SHARE பகிர்ந்து அனைத்து தரப்பினர்க்கும் சென்றடைய உதவுங்கள் 🙏
Address
19,மஞ்சணக்கார தெரு,
தெற்குமாசி வீதி சமீபம்,மதுரை-1
மக்கள் மருந்தகம்,

மதுரை மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன்
JAN AUSHADHI MEDICAL STORE  Generic Medical Shop துவங்கியுள்ளோம். இதை மதுரை மக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்   அணைத்து வகையான ஆங்கில  மருந்துகளும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் .

உதாரணமாக :
இதய நோயாளிகளுக்கு :
மாதம் : ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு
நம் மத்திய அரசு மருந்தகத்தில்
ரூ:150 மட்டுமே ஆகும்..

மருந்தகம் தொடர்பு:
97886 33053,98948 37452

மிகவும் முக்கியம்......

அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.
பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.........

(1) "1MG Health App For India" என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்.

(2) மருந்து பெயரை தேடவும்...........

(3) பயன்படுத்தும் மருந்து தேடவும்.

(உதாரணம்...லிரிகா 75 மில்லி கிராம்) (பிபிசர் கம்பெனி).......

(4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை,கலந்துள்ள வேதிப் பொருட்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.

(5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்.......

(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.....

(உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது.

ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே......
EX
1 GLYCOMET GP 1. - 10 மாத்திரை  விலை ₹7
2 GLYCOMET GP 2  -10 மாத்திரை  விலை  ₹12
3 GEMER  2       - 10 மாத்திரை  விலை  ₹12
4 ATORVA 10.    -10 மாத்திரை  விலை ₹5
5 ATORVA 20.    - 10 மாத்திரை  விலை ₹10
6 GLYCINORM M80- 15மாத்திரை  விலை ₹32
7 GULCORED FORT -10 மாத்திரை  விலை ₹11
8 PAN D     -10 மாத்திரை  விலை ₹19
9 SHELCAL- 10 மாத்திரை  விலை₹12
10 ATORLIP F- 15மாத்திரை  விலை₹30
11

இதை DELETE செய்யாமல் FORWARD செய்யவும்... அனைவரும் பயன் பெறுங்கள்...

சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது.........

உயிர் காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செய்வதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.

ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது......

அன்புக்கு விலை இல்லை.....மற்ற குருப்பில் பதிவிடவும்.....
மற்றவர்க்கு உதவுங்கள்..

*அன்புடன்* 💐💐💐
🙏உங்கள் நலம் விரும்பும் நண்பன்🙏

Thursday, January 23, 2020

Maharishi biography Jan 16th

*வேதாத்திரிய இரகசியங்கள்: ஜனவரி 16*

*ஞானக்குழந்தை*

பெற்றோர்களுடன் 18 வயது வரை இருந்த வேதாதிரியார் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருப்பார். அவர்கள் கூறும் பதில் ஒப்புக் கொள்ளத்தக்கதாக இல்லையெனில், காரணத்தோடு விளக்கத்தை எடுத்துக் கூறுவார். விளக்கத்தைக் கேட்டு பூரித்து போவார்கள். இதனால் தங்களது ஏழ்மை, வறுமை, துன்பம் ஆகியவை மறந்து போவதாக கூறுவார்கள்.

உணவு ஊட்டும்போது கஜேந்திர மோட்சம் கதையை அன்னை கூறுவார்.
ஏழு வயதானபோது அக்கதையில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. கூடுவாஞ்சேரியில் ஒருவரின் 10-ஆவது நாள் மரணச் சடங்கினை மோட்ச தீபம் என்றனர். மோட்சம் என்றால் என்ன என்று அன்னையிடம் கேட்டார். இறந்து விடுவதை மோட்சம் என்கிறார்கள் என்றார். முக்தி, மோட்சம் எல்லாம் ஒன்றுதான் என்றார். அப்படியானால் கஜேந்திர மோட்சத்தில் ஆதிமூலம் முதலைக்கு முக்தி, யானைக்கு மோட்சம் கொடுத்தார் என்று நீங்கள் சொன்னது, இரண்டுமே செத்துப்போய்விட்டது என்றுதானே அர்த்தமாகிறது என்றார்.

கூர்ந்த அறிவுடைய மகனின் மனநிலையை அன்னை புரிந்து கொண்டு, பெரியவர்கள் எனக்குச் சொன்ன கதையை நான் அப்படியே உனக்குச் சொன்னேன் என்றார் அன்னை. வீட்டிற்கு வந்ததும் இதே கேள்வியைக் கேட்டார் அன்னையைப் போலவே தந்தையும் பதில் கூறினார். பிறகு மகன் விளக்கமாகக் கூறியதைக் கேட்டதும் மனம் பூரித்து குழந்தை வயதிலேயே பிரணவத்திற்கு அப்பனையே விளக்கம் கேட்டு, பின் தானே விளக்கிய முருகன், சிவனையே வியப்பில் ஆழ்த்தினான். அதுபோலத் தானிருக்கிறது இவன் நமக்கு விளக்குவது என்று தந்தை அன்னையிடம் கூறி மகிழ்ந்தார்.

*_அறிவு அறிவுக்கு அடிமையாவதே பக்தி,_*
*_அறிவை அறிவால் அறியப்பழகுதல் யோகம்,_*
*_அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி,_*
*_அறிவை யறிந்தோர் அன்பின் அறமே ஞானம்._*

மாக்கோலம் கவி: “யோகம் – முக்தி – ஞானம் 23-12-56”

நாளைய இரகசியம்: *முதல் வேலை*
------------------------------------------------------------------
K.Pudur MVKM Trust, Madurai - www.fb.com/vethathiri.gnanam
சென்னை மாநகர் அறிவுத்திருக்கோயில் - CALM TRUST

Maharishi thought Jan 17th

*வேதாத்திரிய இரகசியங்கள்: ஜனவரி 17*

*முதல் வேலை*

பதினெட்டு வயது முடிவில், மகரிஷி சென்னை மயிலாப்பூரில் வசித்த கற்பகம் அக்காள் வீட்டில் வந்து தங்கினார். அக்காள் கணவர் திரு. சண்முக முதலியார். மைத்துனருக்கு வேலை வாங்கிக் கொடுக்க தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லிவைத்தார். சென்னையில் பலநூறு குதிரைப் பந்தய கிளப்புகள் இருந்தன. மவுண்ட்ரோட்டில் “ராயல் ரேஸிங் கிளப்” என்ற நிறுவனத்தில் டிக்கட் கொடுக்கும் வேலையில் சேர்ந்தார். சம்பளம் ரூ.50/-, வாரத்திற்கு இரண்டு ரேஸ்கள் வீதம் புதன்கிழமையும், சனிக்கிழமையும் நடக்கும்.

குதிரைப் பந்தய தினத்தின் முதல் நாள் மாலை மூன்று மணி முதல் ஏழு மணி வரையிலும் பந்தய நாளன்று காலை எட்டு மணி முதல் இரண்டு மணி வரையிலும் வேலை செய்ய வேண்டும். வேலை செய்யும் நாட்களில் முழு நாளுக்கு 1½ ரூபாயும் அரை நாளுக்கு ஒரு ரூபாயும், சிற்றுண்டி அலவன்ஸ் என்று கொஞ்சம் காசும் கொடுப்பார்கள். மாதம் ரூ. 75/-க்குக் குறையாமல் கிடைத்தது. ரூ. 10/- பெற்றோருக்கும், ரூ. 10/- சீட்டு சேமிப்பதற்கும் போக மிகுதியை அக்காள் கணவரிடம் கொடுத்துவிடுவார்.

சமுதாயத்தைக் கெடுக்கக் கூடிய சூது விளையாட்டுதான் குதிரை ரேஸ், மனிதர்களின் உடலை, மனதை கெடுப்பது மட்டுமல்லாமல், வாயில்லா ஜீவனாகிய குதிரையும் துன்புறக் கூடிய தொழில் ஆகும். அதனால் தான் “என் வினையைக் கழித்துக் கொள்ளக் கொஞ்ச நாள் அங்கு வேலை செய்ய வேண்டியிருந்தது” என்று பிற்காலங்களில் கூறியுள்ளார்.

நாளைய இரகசியம்: *முதல் குரு*
------------------------------------------------------------------
K.Pudur MVKM Trust, Madurai - www.fb.com/vethathiri.gnanam
சென்னை மாநகர் அறிவுத்திருக்கோயில் - CALM TRUST

Maharishi thought Jan 18

*வேதாத்திரிய இரகசியங்கள்: ஜனவரி 18*

*முதல் குரு*

சென்னை மயிலாப்பூர் நடுத்தெருவிலும், பிறகு ரொட்டிக்காரத் தெரு நாச்சிமுத்து அருணாசலம் தெருவிலும் குடியிருந்த வைத்திய பூபதி
எஸ். கிருஷ்ணா ராவ் ஆயுர்வேத, சித்தா, யுனானி மருத்துவம் மூன்றிலும் சிறந்த நிபுணர். அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மகான். அவர் மந்தைவெளி பிராடிஸ்ரோட்டில் மருந்தகம் ஒன்று வைத்திருந்தார். மாலை வேளைகளில் மட்டும் மருந்தகத்திலிருப்பார்.

ஒருநாள் அவ்வழியே சென்ற வேதாத்திரியார் வைத்திய பூபதி, தத்துவ ஞானத்தைப் பற்றி மற்றொருவருடன் உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, கடை ஓரத்தில் நின்று அவர்கள் பேசுவதைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். வைத்தியபூபதி இவரைப் பார்த்து “யாரப்பா நீ? ஏன் இங்கே நிற்கிறாய்?” என்று கேட்டார். தான் கூடுவாஞ்சேரியிலிருந்து வந்து அக்காள் கணவர் சண்முகமுதலியார் வீட்டில் தங்கி ரேஸ் கிளப்பில் வேலை செய்வதைக் கூறி, தாங்கள் பேசும் விஷயங்களைக் கேட்கக் கேட்க விருப்பமாகிறது என்றார். நீ விரும்பினால் ஓய்வான நேரங்களில் வந்து செல்லலாம் என்று கூறினார்.

பிறகு வாரத்தில் நான்கு நாள் அவரை சந்தித்தார். அறுபத்து ஐந்து வயதான வைத்தியபூபதி, எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் சொந்த மகனாகவே பாவித்து ஆயுர்வேத மருத்துவத்தை முழுமையாகவும் இடையிடையே சித்த மருத்துவமும் சொல்லிக் கொடுத்தார். புருவத்திடையே தியானம் செய்யும் யோக முறையும் போதித்தார்.

சரசம்ஹிதை, சுச்ருத சம்ஹிதை, மாதவநிதானம், அஷ்டாங்கஹிருதயம், ரசரத்ன சமுச்சயம் முதலிய சம்ஸ்கிருத நூல்களை மொழி பெயர்த்து தத்துவ விளக்கம் நன்கு போதித்தார். இரண்டு ஆண்டுகளில் மருத்துவத்தில் தேர்ந்த அறிவையும், தத்துவ அறிவில் தெளிவையும் பெற்றார். தியானத்திலும் நல்ல பற்று உண்டாகுமளவிற்கு ஓர் சிறந்த மனிதனாக உயர்த்தினார். வேதாத்திரியார் மகானாக உயர்ந்த பிறகும், பிற்காலங்களில் தன்னை உயர்த்திய மகானை அடிக்கடி நினைவு கூர்ந்து போற்றி வணங்குவார்.

*_தந்தைதாய் ஈருயுரும் ஒன்று சேர்ந்து_*
*_தழைதொரு உடலாகி உலகில் வந்தேன்_*
*_அந்த ஈருயிர் வினைகள் அறமோமற்றோ_*
*_அளித்த பதிவுகள் எல்லாம்என் சொத்தாச்சு_*
*_இந்தஅரும் பிறவியில்முன் வினை அறுத்து_*
*_எல்லையில்லா மெய்ப் பொருளை அடைவதற்கு_*
*_வந்தஒரு உதவி குருஉயிரின் சேர்க்கை_*
*_வணங்கிகுரு திருவடியை வாழ்த்தி வாழ்வோம்._*

ஞானக்களஞ்சியம் கவி: 11. குருவின் உதவி

நாளைய இரகசியம்: *வைத்திய பிஷக்*
------------------------------------------------------------------
K.Pudur MVKM Trust, Madurai - www.fb.com/vethathiri.gnanam
சென்னை மாநகர் அறிவுத்திருக்கோயில் - CALM TRUST

Maharishi thought Jan 18th

*வேதாத்திரிய இரகசியங்கள்: ஜனவரி 18*

*முதல் குரு*

சென்னை மயிலாப்பூர் நடுத்தெருவிலும், பிறகு ரொட்டிக்காரத் தெரு நாச்சிமுத்து அருணாசலம் தெருவிலும் குடியிருந்த வைத்திய பூபதி
எஸ். கிருஷ்ணா ராவ் ஆயுர்வேத, சித்தா, யுனானி மருத்துவம் மூன்றிலும் சிறந்த நிபுணர். அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மகான். அவர் மந்தைவெளி பிராடிஸ்ரோட்டில் மருந்தகம் ஒன்று வைத்திருந்தார். மாலை வேளைகளில் மட்டும் மருந்தகத்திலிருப்பார்.

ஒருநாள் அவ்வழியே சென்ற வேதாத்திரியார் வைத்திய பூபதி, தத்துவ ஞானத்தைப் பற்றி மற்றொருவருடன் உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, கடை ஓரத்தில் நின்று அவர்கள் பேசுவதைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். வைத்தியபூபதி இவரைப் பார்த்து “யாரப்பா நீ? ஏன் இங்கே நிற்கிறாய்?” என்று கேட்டார். தான் கூடுவாஞ்சேரியிலிருந்து வந்து அக்காள் கணவர் சண்முகமுதலியார் வீட்டில் தங்கி ரேஸ் கிளப்பில் வேலை செய்வதைக் கூறி, தாங்கள் பேசும் விஷயங்களைக் கேட்கக் கேட்க விருப்பமாகிறது என்றார். நீ விரும்பினால் ஓய்வான நேரங்களில் வந்து செல்லலாம் என்று கூறினார்.

பிறகு வாரத்தில் நான்கு நாள் அவரை சந்தித்தார். அறுபத்து ஐந்து வயதான வைத்தியபூபதி, எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் சொந்த மகனாகவே பாவித்து ஆயுர்வேத மருத்துவத்தை முழுமையாகவும் இடையிடையே சித்த மருத்துவமும் சொல்லிக் கொடுத்தார். புருவத்திடையே தியானம் செய்யும் யோக முறையும் போதித்தார்.

சரசம்ஹிதை, சுச்ருத சம்ஹிதை, மாதவநிதானம், அஷ்டாங்கஹிருதயம், ரசரத்ன சமுச்சயம் முதலிய சம்ஸ்கிருத நூல்களை மொழி பெயர்த்து தத்துவ விளக்கம் நன்கு போதித்தார். இரண்டு ஆண்டுகளில் மருத்துவத்தில் தேர்ந்த அறிவையும், தத்துவ அறிவில் தெளிவையும் பெற்றார். தியானத்திலும் நல்ல பற்று உண்டாகுமளவிற்கு ஓர் சிறந்த மனிதனாக உயர்த்தினார். வேதாத்திரியார் மகானாக உயர்ந்த பிறகும், பிற்காலங்களில் தன்னை உயர்த்திய மகானை அடிக்கடி நினைவு கூர்ந்து போற்றி வணங்குவார்.

*_தந்தைதாய் ஈருயுரும் ஒன்று சேர்ந்து_*
*_தழைதொரு உடலாகி உலகில் வந்தேன்_*
*_அந்த ஈருயிர் வினைகள் அறமோமற்றோ_*
*_அளித்த பதிவுகள் எல்லாம்என் சொத்தாச்சு_*
*_இந்தஅரும் பிறவியில்முன் வினை அறுத்து_*
*_எல்லையில்லா மெய்ப் பொருளை அடைவதற்கு_*
*_வந்தஒரு உதவி குருஉயிரின் சேர்க்கை_*
*_வணங்கிகுரு திருவடியை வாழ்த்தி வாழ்வோம்._*

ஞானக்களஞ்சியம் கவி: 11. குருவின் உதவி

நாளைய இரகசியம்: *வைத்திய பிஷக்*
------------------------------------------------------------------
K.Pudur MVKM Trust, Madurai - www.fb.com/vethathiri.gnanam
சென்னை மாநகர் அறிவுத்திருக்கோயில் - CALM TRUST

Maharishi questions answered _2

19-01-2020

*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*

❓ *கேள்வி: சுவாமிஜி, தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்ற சொற்களுக்கு விளக்கம் என்ன?*

✅ *பதில்:* இவ்வார்த்தைகள் ஆன்மீகப் பயிற்சியிலுள்ளோருக்கு மிக உயர்ந்த சில கருத்துக்களை விளக்குகின்றன.

எந்த வெளிப்பொருளையும் நிகழ்ச்சியையும் அறிவு நாடாமல் உன்னையே நோக்கி அது நிற்க வேண்டும் என்ற குறிப்பு “தனித்திரு” என்பது. உன் மூலம் நாடி அறிவு நிற்பது, உன்னில் ஒடுங்கி நிற்பது; எங்கும் நிறைந்த பூரணமான அரூப நிலையில் நிற்பது என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உன் மகத்துவத்தை அறிந்து கொள்வதில் வேட்கை கொண்டிரு என்பதே “பசித்திரு” என்பதாகும். “நான் யார்? அறிவா? உயிரா? உடலா? இம்மூன்றும் வேறு வேறா? ஒன்றா? இவற்றிற்கு மூலமும் முடிவும் யாது?” என்பது போன்ற விளக்கங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வத்தோடு இரு என்பதை பசித்திரு என்னும் வார்த்தை உணர்த்துகிறது.

பழைய ஞாபகங்களும், பிறர் விருப்பங்களும் உன் அறிவில் அடிக்கடி பிரதிபலிப்பதால் உன் சிந்தனை அடிக்கடி திசை மாற்றம் அடையக்கூடும். அதனால் ஆன்மீகத் துறைக்கு முரணாக நீ செயலில் ஈடுபட நேரிடக் கூடும். ஆகையால் நீ மிகவும் உஷாராக, உன் நிலையில் மாறுபாடு அடையாமல், விழிப்பாயிரு என்று வலியுறுத்திக் கூறுவதே “விழித்திரு” என்ற வார்த்தையாகும்.

வாழ்க வளமுடன்!!

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

(நாளையும் தொடரும்)
K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

Maharishi thought Jan 19th

*வேதாத்திரிய இரகசியங்கள்: ஜனவரி 19*

*வைத்திய பிஷக்*

வைத்திய பூபதி கிருஷ்ணா ராவ் அவர்கள் போதனை செய்த ஆயுர்வேத பாடங்கள் இளம் வேதாத்திரியின் உள்ளத்தில் தெளிவாக இடம் பெற்றன. அக்காள் கணவர் ஆயுர்வேத சித்த மருந்துகளைக் கையாளும் மருத்துவராக இருந்ததால், நேர்முறையில் பலவகையான சூர்ணம், பஸ்பம், எண்ணெய், லேகியம் முதலியவற்றைச் செய்யும் திறனும் உண்டாயிற்று.

இவரது மருத்துவ திறமையில் மகிழ்ச்சி பெற்ற வைத்திய பூபதி, இவரை பட்டம் பெற்ற ஒரு மருத்துவராக்க விரும்பினார். அகில இந்திய ஆயுர்வேத மகா மண்டல் அண்ட் வித்யா பீடம் (All India Ayurvedic Maha Mandal and Vidya Peed) என்ற நிறுவனத்தின் கிளை சென்னையிலிருந்தது. ஆயுர்வேதக் கல்லூரிகள், நடத்தி, தேர்வுகள் மூலம் வெற்றி பெறுபவர்க்கு நற்சான்றிதழ் வழங்கினர். அந்த மருத்துவ சான்றுக்கு அக்காலத்தில் நல்லதோர் மதிப்பு இருந்தது.

வடமொழியில் எழுதுபவர்க்கு வைத்திய விசாரதா என்ற பட்டமும் இதர மொழிகளில் எழுதுபவர்களுக்கு வைத்திய பிஷக் என்ற பட்டமும் கொடுப்பர். வைத்திய பூபதி, வேதாத்திரியாரை அந்தப் பரீட்சையை எழுதும்படி தூண்டினார். மொத்தம் ஒன்பது பிரிவுகள். முதலாண்டில் ஆறு பிரிவுகளையும் நல்ல மார்க்குடனும் மறு ஆண்டு மூன்று பிரிவுகளை பாஸ் செய்தார். நான்கு ஆண்டுகள் அதெற்கென அமைந்த ஆயுர்வேதக் கல்லூரிகளில் படித்தவர்களால் தான் தேர்ச்சியடைய முடியும். நேர்முறை பயிற்சிகளுடன் கூடிய பாடப் பிரிவுகள் ஆகும். வேதாத்திரி மருத்துவத்தில் இந்திய அரசின் “வைத்திய பிஷக்” என்ற பட்டம் பெற வேதாத்திரியாரின் ஆர்வமும் வைத்திய பூபதியின் வழிகாட்டலும் தான் காரணம்.

*_அறப்பணியாம் நோய்தீர்க்கும் தொழிலை ஏற்று_*
*_அல்லும் பகலாய் உழைக்கும் மருத்துவர்காள்!_*
*_உறக்கம், ஊண்உடை, வாழ்க்கைத்துணை யாவர்க்கும்_*
*_உற்றகாலங்களிலே கிடைக்கா விட்டால்,_*
*_சிறப்பாக அமைந்திருக்கும் பருஉடற்கும்_*
*_சிந்தனைக்கும், என்னென்ன விளையும்? ஆராய்வீர்!_*
*_இறக்குமட்டும் வாழ்க்கைஇன்பம் அளவாய்த் துய்க்க_*
*_ஏற்றஒரு ஆட்சிமுறை வகுத்தேன் ஆய்வீர்!_*

ஞானக்களஞ்சியம் கவி: 964. சுகாதார நிபுணர்களே (1955)

நாளைய இரகசியம்: *எண்ணமே மூலம்*
------------------------------------------------------------------
K.Pudur MVKM Trust, Madurai - www.fb.com/vethathiri.gnanam
சென்னை மாநகர் அறிவுத்திருக்கோயில் - CALM TRUST

Maharishi thought Jan 20

*வாழ்க்கை மலர்கள்: ஜனவரி 20*

*மனிதன்*

“அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது” என்பது ஆன்றோர் வாக்கு. ஏன் அவ்வாறு கூறுகின்றனர்? மனிதன் ஒருவனால் தான் பிறவற்றைக் கண்டு நலன் உணர்ந்து அவைகளைப் போன்று போலி (Imitate) செய்து வாழ முடிகிறது. இயற்கைகளை மாற்றித் தன் வாழ்வின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது. தன் மூலத்தை உணர்ந்து தன்னைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பிற எவருக்கும், எந்த ஒன்றுக்கும் இன்னல் பயவா இன்ப வாழ்வு வாழ முடிகிறது. இவ்வாறு வாழ்வது தான் மனிதனின் இயற்கை.

எனவே தான், மனிதன் என்ற பெயரைப் பெற்றான். அதாவது எவன் ஒருவன் மனத்தை இதமாக வைத்துக் கொள்கிறானோ அவன் தான் மனிதன் என்ற பொருளில் இச்சொல் ஏற்பட்டுள்ளது. மனம் என்ற சொல்லைப் பார்த்தால் அதுவும் இதே பொருளைத்தான் அழுத்தமாக உணர்த்துகிறது. “மனம்” என்ற சொல் “மன்” என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்தது. “மன்” என்றால் நிலையானது. அழியாமை என்ற பொருள். ஆனால், நாமோ மனத்தைப் பேயாக, குரங்காக இருப்பதை உணர்கிறோம்.

ஆனால், அதே மனத்தைத் தவத்தால், தற்சோதனையால், புறத்தே குதிக்காமல் அகத்தே ஆழ்ந்து ஆழ்ந்து தன்னையுணர்கின்ற மெய்யுணர்வு தோன்றுகிறது. அப்போதுதானே எல்லாவற்றுள்ளும், எல்லாமும் தன்னுள்ளும் இருப்பது உணரப்படுகின்றது. அந்த நிலையில் மனம் இதமாகிறது. இதனைத்தான் மனிதன் பெற வேண்டும்.

மனம் படைத்த மனிதன் [ மன் + இதன் ] நிலைப்பேறான மெய்ப்பொருள் உணர்வு பெற்ற வாழ்வு வாழ வேண்டுமானால் மனம், மொழி, செயல் மூன்றிலும் இனிமை தோன்ற வாழ வேண்டும். இத்தகையவர்களைத் தான் வள்ளுவர் செம்பொருள் கண்டவர்கள் என்கிறார். மனத்தைத் தெளிந்து, மனம் நிலைத்து மக்களுக்கும் பிற உயிர் இனங்களுக்கும் மன இதமாய்த் தொண்டாற்றுகின்ற பெருமக்களே நிறை மனிதர்கள்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

Maharishi questions and answers

20-01-2020

*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*

❓ *கேள்வி: சுவாமிஜி, அறிஞர்களின் சிந்தனைகள் அவர்கள் காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படாதது ஏன்?*

✅ *பதில்:* குழந்தைகளுக்கு உடை தைக்கும்போது அவர்களின் வளர்ச்சியை ஞாபகத்தில் கொண்டு தாராளமான அளவில் தைக்கிறோம். போகப் போக அதன் உபயோகம் நீண்ட காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும்.

இதுபோன்றே, ஞானிகள் உலக மக்களுக்குத் தரும் அறநெறி போதனைகளும், நல்வாழ்விற்கேற்ற திட்டங்களும் அவ்வக் காலத்திற்குச் சிறிது பொருத்தமில்லாமலும், அவசியமற்றவை போலும் சிலருக்குத் தோன்றலாம்.

முற்கால அனுபவம், தற்காலத் தேவை மற்றும் சூழ்நிலைகள், எதிர்கால விளைவுகள் மூன்றையும் இணைத்து யூகிக்கும் திறனான திரிகால ஞானம் என்ற அகன்ற நோக்கில் ஞானியர்களுடைய திட்டங்களும் போதனைகளும் உருவாவதால், அவற்றில் அடங்கியிருக்கும் நன்மைகளைக் குறுகிய நோக்கம் உள்ள மயக்கவாதிகளாலும், பாமரர்களாலும் உடனே எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அத்தகைய அறிஞர்கள் கருத்துக்களைச் சிறந்த சிந்தனையாளர்களும், நீண்ட எதிர்காலமுமே தெளிவாக விளக்கி வைக்கும்.

வாழ்க வளமுடன்!!

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

(நாளையும் தொடரும்)
K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

Maharishi thought Jan 21st

Maharishi thought Jan 21st
*வாழ்க்கை மலர்கள்: ஜனவரி 21*

*வாழ்க்கைத் தத்துவம்*

வாழ்க்கையை விளங்கிக் கொண்டு, காரணத்தையும் உணர்ந்து கொண்டு நடத்தினால் அது வெள்ளத்தில் படகு விடுவதை ஒக்கும். மாறாக அவ்விளக்கம் இல்லாமல் நடத்தினால் அது வெள்ளத்தில் அகப்பட்ட துரும்பின் நிலையேயாகும்.

வாழ்க்கையோ, இயற்கை, சமுதாயம், தான் என்ற மூன்றின் இணைப்பில் நடைபெறுகிறது. இவற்றில் சமுதாயம் என்ற தத்துவத்தை ஆராய்வதே நாம் இப்போது எடுத்துக் கொண்டுள்ள வாழ்க்கைத் தத்துவ ஆராய்ச்சியாகும்.

வாழ்க்கை வெற்றிமிக்கதாக அமைய வேண்டுமாயின், நாம் இயற்கையையும், சமுதாயத்தையும் உணர்ந்து, மதித்து வாழ வேண்டும். அதோடு எந்தக் காரியத்துக்காக இந்தப் பிறவியை எடுத்து வந்தோமோ, அந்த நோக்கத்திற்கு ஒத்ததாக அதாவது பிறவித் தொடரை முடித்துக் கொண்டு வீடுபேறு எய்த வேண்டும் என்ற அந்த உயரிய நோக்கத்திற்கு ஒத்ததாக வாழும்முறை அமைய வேண்டும். அப்போது தான் துன்பத்தைத் தோற்றுவித்துக் கொள்ளாமலும் வாழலாம். தவறுதலாக நாம் தோற்றுவித்துக் கொள்ளும் துன்பங்களிலிருந்தும் மீண்டு கொள்ளலாம். பிறரால் தோன்றக்கூடிய துன்பங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம். எனவே, வாழ்க்கையின் தத்துவத்தைப் பற்றிய தெளிவான விளக்கம் பெற்று அதன்படியே வாழ்ந்து வரவேண்டும்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam