பரிபாஷை விளக்கம்
திரிதோடம்-வாதம்,பித்தம்,சிலேத்துமம்
திரிகடுகு-சுக்கு, மிளகு, திப்பிலி
திரிபலை-கடுக்காய், தான்றிக்காய், நெல்லிவற்றல்
திரிகடி-மூவிரல் கூட்டி அள்ளுவது
முக்கூட்டு நெய்-ஆவின்நெய்,நல்லெண்ணெய், விளக்கெண்ணை
வெருகடி-ஐந்து விரலில் எடுக்கும் அளவு
பஞ்சகவ்யம்-பசுவின்பால்,தயிர், வெண்ணெய், சாணம்,கோமயம்
பஞ்சசூதம்-இரசம்,இலிங்கம், இயசசெந்தூரம், வீரம்,பூரம்
பரிமளவர்க்கம்-சாதிக்காய்,சாதிப்பத்திரி,இலவங்கம்,இலவங்கப்பட்டை, ஏலம்
பஞ்சபூதம்-நிலம்,நீர்,நெருப்பு,காற்று, ஆகாயம்
ஐங்காயம்-கடுகு ,வெந்தயம், ஓமம்,பெருங்காயம், வெள்ளுள்ளி
ஐந்தெண்ணை-நல்லெண்ணெய், வேப்பெண்ணை, விளக்கெண்ணை,இலுப்பையெண்ணை,புங்கெண்ணை
அறுசுவை-உப்பு,புளி,காரம்,இனிப்பு, துவர்ப்பு, கசப்பு
அஷ்டகாயம்-சுக்கு,மிளகு, திப்பிலி, ஓமம்,பெருங்காயம், கருஞ்சீரகம், நற்சீரகம்,இந்துப்பு
நவலோகம்-தங்கம், வெள்ளி, செம்பு,வெள்வங்கம்,இரும்பு,பித்தளை, நாகம், வெண்கலம், கருவங்கம்
நவவுப்பு-சோற்றுப்பு,இந்துப்பு,வெடியுப்பு,கல்லுப்பு,பாறையுப்பு,மூங்கிலுப்பு,வளையலுப்பு,அமுரியுப்பு,பூநீருப்பு
நவரத்தினம்-வைரம்,வைடூரியம், மாணிக்கம், மரகதம், முத்து, பவளம், நீலம், கோமேதகம், புட்பராகம்
தசமூலம்-வில்வம், முன்னை,ஈசுரமூலி,பாதிரி, கண்டங்கத்திரி, பெருமரம்,நெருஞ்சில், ஈரிலைத்தாமரை,மூவிலைத்தாமரை,தழுதாலை ஆகியவற்றின் வேர்கள்
சமூலம்-ஒரு செடியின் வேர் முதல் வித்து வரை உள்ள சகல பகுதிகளின் மொத்த தொகையாகும்
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755
No comments:
Post a Comment