===========================
"ஆக்கினை" என்றால் "ஆளுமை" என்று பொருள். ஆக்கினை என்ற புருவமத்தியில் தவமியற்றுகிறபோது,
அதற்கு உட்புறமாக அமைந்திருக்கிற நாளமில்லாச் சுரப்பியான 'பிட்யூட்டரி' சுரப்பி நன்கு ஊக்குவிக்கப் படுகிறது. 'பிட்யூட்டரி'என்பது நமது உடலில் உள்ள ஏனைய சுரப்பிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் தலைமைச் சுரப்பி. அதன்மீது மனம் வைத்துத் தவமியற்றுவதால், ஆக்கினை தவம் ஆன்மீகத்திற்கேற்ற உடலியக்கத்தை ஏற்படுத்தித் தருகிறது. எனவே ,ஆக்கினை தவம் "ஆன்மீக வாழ்க்கையின் நுழைவாயில் " என்று அழைக்கப்படுகிறது.
ஆக்கினை என்ற புருவ மத்தியை, நெற்றிக்கண், ஞானக்கண்,மூன்றாவது கண், முச்சந்தி வீடு என்றெல்லாம் குறிப்பிடுவார்கள்.
நாம் செய்யும் தவறுகளை "குற்றம், குற்றமே"என்று இடித்துரைக்கும் "நெற்றிக் கண்ணே" ஆக்கினை.
மேலும்,ஆக்கினை தவத்தால் இன்னொரு முக்கியமான நன்மையும் உண்டு.நாம் எதைச் செய்தால், பின்னாளில் தீங்கு வருமோ,அதைச் செய்யவிடாமல் தடுத்து நிறுத்துகிறது. அதைத்தான் "ஆகாம்ய" கர்மம் நீங்கும் என்கிறார்கள்.அதாவது ஆ+காம்யம்=ஆன்மாவிற்கு இச்சையூட்டக் கூடிய வினைகள்.
தியானம் என்பது,ஆயிரம் நல்ல நண்பர்கள் கிடைத்ததற்குச் சமம்,அதன் முதல் படியே "ஆக்கினை".
காசி-வாரணாசி. வாரன் என்றால் புருவம்.நாசி என்றால் மூக்கு இரண்டுக்கும் இடையில் உள்ளது ஆக்கினை. புருவ மத்தியில் உயிர் ஆற்றலை மனம் கவனிப்பதே ஆக்கினை எனப்படுகிறது.
வாழ்க வளமுடன்
வளர்க வோதாத்திரியம்.
No comments:
Post a Comment