வேதாத்திரியன் வேதசுப்பையா
மனிதனுக்குத் தேவையான அனைத்தும்
கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அது உங்களிடமே இருக்கிறது.
கடவுளிடம் வேண்டிப் பெறவேண்டிய பொருள் ஏதும் இல்லை.
பொருளைப் பயன்படுத்தி துன்பத்தைப் போக்கி
இன்பமாக வாழ, நல்வினைகளை அறிந்து ,
நல்லதைச் செய்து மகிழ்ச்சியாக வாழலாம்.
மனிதன் ஆற்றவேண்டிய நல்வினைகளை அறிவதற்குத்தான்
கடவுளை அறிந்து, கடவுளை நினைந்து சிந்திக்க வேண்டும்.
அப்போது மனிதன் ஆற்றவேண்டிய நல்வினைகள் யாவும்
உள்ளுணர்வாக விளங்கிவிடும்
.
மனிதன் அறிந்து கொள்ளவேண்டிய நல்லறிவைத்தான்
"கடவுள் அருள்". என்று கூறப்படுகிறது.
கடவுள் அருளைப் பெறும் வழியைத்தான்
"அதுவானால் அதுவே சொல்லும்" என்று ஞானிகள் கூறுகின்றனர்.
கடவுளை அறிந்து வணங்கி முழுமையான அறநெறி அறிவை
கடவுளின் அருளாகப் பெற அறிவுத்திருக்கோயிலுக்கு வாரீர்.
வாழ்க வளமுடன்!!
No comments:
Post a Comment