Saturday, March 4, 2017

வெற்றி தரும் கால ஓரைகள்


=====================
ஓரையைப்பிடித்தால் ஹீரோ

சூரிய ஓரை

வேலைக்கு விண்ணப்பம் போட, முயற்சி செய்ய , இண்டர்வ்யூ செல்ல, பெரிய மனிதர்கள் ஆதரவு பெற, பதவி ஏற்க்க, அரசாங்க உதவி பெற,மருந்து  உண்ண,
பேட்டி காண,யாத்திரை செய்ய உகந்தது.

சந்திர ஓரை

பெண் பார்க்க, ஆபரணங்க்கள் பூண,பிரயாண அலுவல்களை கவனிக்க,
விசா, பாஸ்‌போர்ட் மனு செய்ய, வாங்க, சங்கீத கல்விபுகட்ட,  பசு ,கன்று வாங்க,வியாபாரம் செய்ய உகந்தது.

செவ்வாய் ஓரை

கடன் தீர்க்க,சூலைக்கு தீ மூட்ட, பூமி பேரம் பேச, வழக்காட,வழக்கிற்கு மனுகொடுக்க,போர்தொடங்க,ஆயுதம் தயாரிக்க,அடுப்பு கட்டஉகந்தது. மற்ற சுபகர்மங்கள் தவிர்ககவும்.

புதன் ஓரை

பாடம் படிக்க, பரிட்சைக்கு படிக்க, பணம் கட்ட, பொன் உருக்க, ஜோதிட ஆராய்ச்சி,பத்திரிக்கைத்தொழில் செய்ய, எழுத்து வேலை,கணக்கு, ஏஜென்சி கமிஷன் வியாபாரம் தொடங்க உகந்தது.

குரு ஓரை

உபதேசம் பெற, மந்திரங்கள் படிக்க, கற்க,வ்ங்கி கணக்கு ஆரம்பிக்க,கடன் தீர்க்க,முதலீடுசெய்ய,ஆலயகாரியங்கள் செய்ய,பொதுவான எல்லா சுபநிகழ்சிக்களுக்கும் உகந்தது.

சுக்கிர ஓரை

பெண் பார்க்க, விவாகம் பற்றி பேச,பெண்கள் நட்பு பெற, பட்டு, விலை உயர்ந்த நகைகள் வாங்க, வாசனை திரவியங்கள் வாங்க,சமாதானம் செய்விக்க, விருந்து,கேளிக்கை இவற்றுக்கு உகந்தது.

சனி ஓரை

நிலக்குத்தகை, சொத்து விவகாரங்கள் பற்றிய நடவடிக்கை எடுக்க, ஆயுதம் பழக, ஏற்றது. சனி ஓரை சுப காரியங்களுக்கு உகந்தது அல்ல.

No comments:

Post a Comment