====
பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வாழ வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு என்றென்றும் நிலையானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை நாள்தோறும் அலைக்கழிக்கின்றன. இதையே சைவ சித்தாந்தம் ஆணவம், கன்மம், மாயை என்று குறிப்பிடுகிறது. இந்த மும்மலங்களையும் போக்கி நமக்கு ஞானத்தை உண்டாக்குவதே பூஜை.
No comments:
Post a Comment