Wednesday, March 29, 2017

*கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்

.*

என் பெயர் பாலகிருஷ்ணன்.
ஒரு காலத்தில் சென்னை மற்றும் வேலூரில் என் பெயர் தெரியாத அரசு அதிகாரிகளே கிடையாது.

இன்று நான் முகவரி கூட இல்லாமல் வாழ்கிறேன்.

கோயம்பத்தூரில் ஓரு கிராமத்தில் ஓரு ஓட்டு வீட்டில் நானும் என் மனைவியும் அனாதைகளாக..

நான் என் வாழ்வில் உணர்ந்த விசயத்தை உங்களிடம் பரிமாற்றம் செய்கிறேன்.

நான் அரசு பணியில் பல துறையில் பணியாற்றி உள்ளேன். சம்பளத்தை விட கிம்பளம் (லஞ்சம்) நிறையவே பெற்று சந்தோஷமாக இருந்தேன்.

ஆண்டவன் நம்மை நல்லா வச்சிருக்கான் என்று சந்தோஷமாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரம் செய்து வந்தேன்.

எனக்கு ஓரே மகன். நல்லா எம்.பி.ஏ. வரை படிக்க வச்சேன்.
ஒரு கிரவுன்ட் இடம் வாங்கி கார் பார்கிங், வீடு, கார், தோட்டம் என நாங்கள் சந்தோஷமாக இருந்தோம்.

நானும் ஓய்வு பெற்றேன்.
என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சென்னையில் ரூ.40,00,000-தில் பிளாட் வாங்கி குடியேறினேன்.

மருமகளும் கர்ப்பமாக இருந்தாள்.
7ம் மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு போன் வந்து என்னை தூக்கி போட்டது. போனில், அவர் சொன்ன விசயம்...

"உங்கள் மகன் பைக் விபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ளார் வந்து பாருங்க..." என்று.

விழுந்தடித்து சென்று பார்த்தேன்.
என் மகன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டான்.
என் மருமகளுக்கு ஆண் பிள்ளை பிறந்தது. ஆனால் என் மகன் இரண்டு மாதத்தில் உயிர் பிரிந்து விட்டான்.

என் மருமகள் அவர்கள் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டாள். பின்னர் அவளுக்கு *ஜீவனாம்சம்* மற்றும் பேரன் வாழ்க்கை செலவு என வழக்கு தொடர்ந்து எங்கள் சொத்துக்களை எல்லாம் வாங்கி கொண்டாள்.

இப்போது எனக்கு கிடைக்கும் பென்சனை வச்சுத்தான் காலம் போகுது. சாப்பாடு செலவுகள், வீட்டுக்கு வாடகை போக முட்டி வலி, சர்க்கரை போன்ற நோய்கள் பற்றிக்கொண்டதால் மருந்து செலவு வேறு...

அப்போது தான் யோசித்தேன், 'ஏன் நம் வாழ்க்கை இப்படி ஆனது என்று...'

என் மனம் சொன்னது, 'நீ வாங்கிய லஞ்சம் தான் உன் வாழ்வை சீர்ழித்தது...' என்று.

'சரி... லஞ்சம் வாங்காமல், என்னுடன் சம காலத்தில் பணிபுரிந்த என் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன்.'

அவர் என் நிலை கண்டு மனம் சங்கடப்பட்டார்.

'சரிப்பா நீ எப்படி இருக்க..?' என கேட்டேன்.

அவர் சொன்னார், "நிம்மதியாக இருக்கேன்... உண்ண உணவு, உடுக்க உடை, பேரன் பேத்தி, ஓய்வு பணத்தில் சிறியதாக ஒரு வீடு, பையன், பொண்ணு தனியார் கம்பெனி வேலை...

நானும் என் மனைவியும் நிம்மதியாக  இருக்கோம்.." என்று சொன்னார்.

என்னை யாரோ செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன்.

நானும் கோவிலுக்கு போனேன் விபூதி குங்குமம் வைத்தேன். அபிஷேகம் எல்லாம் செஞ்சேனே. எனக்கு மட்டும் ஏன் இப்படி..?

அப்போது தான் என் காதில் *அபிராமி அந்தாதி* எங்கோ பாடியது என் காதில் விழுந்தது.

*"தனம் தரும், கல்வி தரும்...*
*ஒரு நாளும் தளர் வறியா மனம் தரும்...*
*தெய்வ வடிவும் தரும்...*
*நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்* *அன்பர் என்பருக்கே...*
*கனம் தரும் அபிராமி கடைகண்களே."*

உணர்ந்தேன் நாமும் கோவிலுக்கு போனது பத்துல ஒண்ணா போச்சே.
நல்லா இருக்கும் போது உண்மையை உணரவில்லையே.

உயிரற்ற பொருள் வாங்கி குவித்தேன்.
என் உயிர் உள்ளே உள்ள பொருளை இழந்தேன்.

இன்று...
வாழ்க்கையை இழந்து நிற்கிறேன்.

*அரசன் அன்று கொல்வான்...*
*தெய்வம் நின்று கொல்லும்...*

*மக்களுக்கு செய்யும் சேவையே...*
*மகேசனுக்கு செய்யும் சேவை...*

- ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரியின் ஒப்புதல் புலம்பல் இது. லஞ்சம் வாங்கும் அனைவருக்கும் நல்ல பாடம்...

*லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!*

Monday, March 27, 2017

உயிர் எழுத்துகளும் உண்மை கோள்களும

நமது உடலில்  "வீணா  தண்டு " என்னும்  முதுகு  தண்டில் நாம் சுவாசிக்கும் மூச்சானது  மூன்று  பிரிவாக (channels) பிரிந்து (இடகலை , பிங்கலை, சுழி) உச்சி முதல் குதம் வரை சென்று 32 அடிப்படையான  உறுப்புகளுக்கு சக்தி பரிமாற்றம் செய்கின்றன. இவை ஒரு நாளைக்கு 21,600 மூச்சாக பெரியோர்கள் கணக்கீடு செய்துள்ளனர்.இந்த மூச்சானது முதுகு தண்டின் வழியாக செல்லும் போது ஏழு இடங்களில் சுழித்து ( முடிச்சு போன்றது ) செல்கின்றன. இவற்றை "கிரந்தி" (முடிச்சு) என்பர். நவீன அறிவியலார் இவற்றை நாளமில்லா சுரப்பிகள்  என்கின்றனர் (Endo glands ). யோக நூல்கள்  "ஆதாரம் " என்றும், குண்டலி சக்தி பாயும் "சக்தி பீடங்கள்" என்றும்   எடுத்துரைகின்றது. இவ்வாறு இந்த மூச்சு சுழித்து பரவும் போது ஏற்படுத்துகின்ற  ஓசைக்கு "நாதாந்தம்" என்று பெயர். இந்த நாதாந்தம் ஏழு நிலைகளில் ஏற்படுத்தும் ஓசைக்கு ஏற்ப வடிவம் கொடுத்தனர். இவையே எழுத்து என்று பெயர் பெற்று வழங்கி வருகிறது. (ஏழு + அத்துக்கள் ) அத்து என்றால் முடிச்சு என்று பொருள். இவை "ஏழு சுரங்களாக " சங்கீதத்தில் சொல்லபடுகிறது. இவற்றை வகை படுத்தி "இராகங்கள்" என்று பாடி வருகின்றனர். இதையே
"ஏழிசையாய் இசைப் பயனாய்"
"ஏழு சுரங்களுக்குள் எத்தனை ராகம் "
என்கின்றனர்.
மேற்படி எழுத்துக்கள் என்பன தமிழில் "உயிர் எழுத்துக்கள் " என்று போற்றப்படுகின்றன. அவைகள் முறையே  அ , இ ,உ எ, ஐ,ஒ  ஓள, என்பன.
இவைகள் ஐம்பத்தொன்று அச்சரமாக விரியும். இதை "சிதம்பர ரகசியம்" என்பர். ( இவற்றை சற்குருநாதர் தாள் பணிந்து பெறுக ). சுவாசம் ஆனது இந்த ஏழு ஆதார மையங்களில் செல்லும் போது எப்படி ஓசை உண்டாகின்றதோ அது போன்றே ஒளியும் அவ்விடங்களில் உண்டாகிறது. இதையே " ஓசை ஒளியெல்லாம் நீனே  ஆனாய்" என்பது. இது அகத்தில் நடப்பது. இந்த ஒளியை "கோள்கள்" என்று பெரியோர்கள் குறித்தனர். கோ என்றால்  ஒளி ஆகும். கோயில் என்றால் ஒளி உள்ள இடம் என்று பொருள்.மேற்படி கோள்கள் மூலம் மனிதருக்கு "மனம்" என்ற அலையும் காற்று உண்டாகிறது. இவற்றை கோள்கள் மூலம் எடுத்துரைத்தனர். இதனால் ஏற்படும் (வாயு சுழலுவதால் ) உச்ச, நீச்ச, ஆட்சி  படி  ஒரு  கோள் என்றனர்.

பிங்கலை - சூரியன்  (மனம்)
இடகலை - சந்திரன் (புத்தி )
சூரியனாகிய மனம் சந்திரனாகிய புத்தியை உச்ச பலத்தால். கூடும் போது "துணிவு" என்னும்  "செவ்வாய்"தோன்றுகிறது (பிங்கலை) .
சந்திரன் என்னும் புத்தி உச்ச பலத்தால் சூரியனை கூடும் போது "நுட்பம்" என்னும் "புதன்" தோன்றும் (இடகலை).

சூரியன் என்னும் மனம் நீச்சம் என்னும் குறை பெறும் போது "மறதி" என்னும் "சனி " தோன்றுகிறது (பிங்கலை).
சந்திரன் என்னும் புத்தி நீச்சம் பெறும் போது "மயக்கம்" என்னும் "இராகு" தோன்றுகிறது (இடகலை).

மறதி என்னும் சனியும் மயக்கம் என்னும் இராகுவும் உச்சத்தில் கூடினால் "நூதனம்"  என்னும் "குரு " தோன்றுகிறது.
மறதி என்னும் சனியும் மயக்கம் என்னும் இராகுவும் நீச்சம் பெறும் போது "களிப்பு" என்னும் "சுக்கிரன்"  தோன்றும்.
இவை அல்லாமல்  நாடியானது "சுழியில்" ஓடும் போது "அறிவு " என்னும் "கேது" உண்டாகிறது.

இதை கொண்டு தான்   அறிவு என்பதை கேதுவுக்கு கொடுத்தனர். கேதுவை அறிவுக் கடவுளாக "கணபதி"  என்றனர்.
சித்தர்களும் இந்த அறிவு என்னும் "சுழியை" போற்றி வணங்கினர். இதனாலே தான் சித்தர்களுக்கு கோள்களின் பாதிப்பு இல்லை என்பர்

அதிபயங்கரமான  சடங்குகள் , அகோரிகள்  யார்

?
***************************************************

{ அகோரிகள் என்றாலே நம்மில் பலருக்கு பலவகையான கருத்து உண்டு.புத்தகங்கள் ,  ஊடகங்கள் ,இணையம் ,செவிவழி செய்தி என பலவாறாக அவர்களை பற்றி அறிந்திருப்போம்.சில நேரங்களில் அவர்களை பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளும் வருவதுண்டு. உண்மையில் அகோரிகள் என்பவர் யார் ?அவர்களை பற்றி நான் அறிந்த தகவல். }

உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட முடியுடன்.முகத்திலும மார்ப்பிலும் முடிகள்
இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள்.

தலை பகுதிகள் தவிர பிற
இடங்களில் இவர்களுக்கு முடிகள்
இருக்காது. இவர்கள்
உலகை வெறுத்து தனியாக
வாழ்பவர்கள் கிடையாது.

சிறு சிறு குழுக்களாகவும்
தலைமை யோகியின் பின்னால்
இவர்கள் இருப்பார்கள்.
தங்களை விளம்பரபடுத்திகொள்ளவோ,
தங்களுக்கு இருக்கும் அமானுஷ
ஆற்றலை வெளிகாண்பிக்கவோ மாட்டார்கள் .

உடல் முழுவதும் சாம்பல்
அல்லது மண்கொண்டு பூசியிருப்பார்கள் .மத
பொருட்கள் எதையும் கைகளில்
வைத்திருக்க மாட்டார்கள்.

அகோரிகள் குழுக்களாக
இருக்கும் சூழலில் யார்
தலைமை யோகி அல்லது குரு என
கண்டறிவது சிரமம்.அனைவரும் ஒரே போல இருப்பார்கள். ஆண் மற்றும் பெண் அகோரிகள் இருவரும் இருப்பர்கள்.நிர்வாணமாக இருந்தாலும்
பெண்யோகிகளை கண்டறிவது கடினம்.

இவர்களின் தலைமுடி வயதானாலும்
வெள்ளை ஆகாது. உடல்
பயில்வானை போல
இல்லாமல்,உடல் சீரான நிலையில்
இருக்கும்.ரிஷிகேசம் அல்லது இமாலய.மலையின் வனங்களில் இருப்பார்கள். பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை
கும்பமேளாவிற்கு வந்து கூடுவார்கள்.

இமாலயவனத்திலிருந்து நடந்தே அலாகாபாத் எனும் இடத்திற்கு வருவார்கள்,மீண்டும்
நடந்தே சென்றுவிடுவார்கள்.
வாகனத்தை பயன்படுத்த
மாட்டார்கள்.வாகனத்தில் சென்றால் குறைந்த
பட்சம் பன்னிரெண்டு மணி நேர பயணம்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்
பொழுது கட்டுகோப்பாக
வரிசையில் செல்வார்கள். வரிசையின்.முன்னாலும் ,பின்னாலும் இருக்கும் அகோரிகள்
பாதுகாப்பு அரணாக
இருப்பார்கள். நீண்ட முடியும்,
மண் அல்லது சுடுகாட்டு சாம்பலை பூசி.இருந்தாலும்
அவர்கள் மேல் எந்த விதமான
வாசனையும் இருக்காது. நறுமணமும்
இருக்காது,நாற்றமும் இருக்கது.

முக்கியமாக இவர்கள் பிறருடன்
பேசுவது குறைவு.தங்களுக்குள்
பேசிக்கொள்ளவே மாட்டார்கள்.
குழுவாக வட்டவடிவில்
உற்கார்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள்.இம்மூலிகை கஞ்சா என பிறர்
எண்ணுகிறார்கள். கும்ப
மேளாவில் கஞ்சா எல்லாஇடத்திலும்
கிடைக்கும், சிலர் இலவசமாக
பிறருக்கு வழங்குவார்கள்.
ஆனால் இவர்களிடம் யாரும்
கொடுக்க மாட்டார்கள், இவர்களும்
வாங்க மாட்டார்கள். தாங்கள்
இருக்கும் வனத்திலிருந்து சில
மூலிகைகளை கொண்டுவருவார்கள்.

வட்டமாக உட்கார்ந்திருக்கும்
இவர்கள் வட்டத்தின் மையத்தில் அந்த மூலிகையை வைத்து ப்ரார்த்தனை செய்த பின்
புகைப்பார்கள். மூலிகை குழாயில்
வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள்.பிறகு அடுத்தவருக்கு கொடுப்பார்கள்.
இப்படியாக வட்டம் முழுவதும்
புகைகுழாய் வட்டமடிக்கும்.

ரிஷிகேசத்திலும்,கும்ப மேளாவிலும் 1 டிகிரி செண்டிகிரேட் குளிராக
இருந்தாலும் நிர்வாணமாக
உற்கார்ந்து தியானம்
செய்வார்கள்.இப்படி பட்ட
யோகிகளை புரிந்து கொள்வது கடினம்.

இமாலய மலை பகுதிகளில்
( யமுனோத்தரி,கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின்
முக்கிய இடமாக இருக்கிறது.

கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை.
குழுவிலிருந்து தனியே சில
பணிகளுக்காக செல்லும் அகோரிகள் தங்கும்
இடம் மயானம்.

எந்த ஊருக்கு சென்றாலும் நாம்
ஹோட்டலை தேடுவது போல
இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள்.

அகோரிகளுக்கு தங்கள்
உடலின் சக்தி நிலை மிகவும்
முக்கியமானது. இங்கே உடல் சக்தி என குறிப்பிடுவது பூஸ்ட்,காம்ளாண்.குடித்து வருவதில்லை. யோக சக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும்
இழக்க அவர்கள் தயாரக இருக்க
மாட்டார்கள்.

இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது எனபது இவர்களுக்கு அத்துப்படி.மயானம்,
ஆறு மற்றும் வனங்களில் தங்கள்
உடல்சக்தியை மேம்படுத்துவார்கள்.

தங்கள் யோக சக்தியை பிறருக்கு
அநாவசியமாக காட்ட மாட்டார்கள். சமூகத்தில் தர்மம் தடுமாறும்
பொழுது சூட்சமமாக செயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள்.

கும்பமேளா என்பது ஒரு சிறப்பு மிக்க.நிகழ்வு.பூமியில் வேறு எந்த
பகுதியிலும் நிகழாதவண்ணம்
அதிக மக்கள் கூடும் ஒரே விழா கும்பமேளா.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற
கும்பமேளாவில் ஒரு கோடிக்கும் மேலாக மக்கள் கலந்து கொண்டார்களாம்.

அழைப்பிதல் இல்லை, அமைப்பாளர்கள் இல்லை,
தொண்டர்படை.ஒருங்கினைப்பில்லை அப்படி
இருக்க ,இந்த விழா எப்படி சிறப்பாக நடைபெறுகிறது?

ஏதோ ஒரு சூட்சுமசக்தி அனைவரையும் வரவழைக்கிறது. பல லட்சம் மக்கள் இணையும் இடத்தில் உணவுக்கோ,
தண்ணீருக்கோ பஞ்சம் இல்லை.
உயிர்சேதம் இல்லை.

யாரோ ஒருவர் பெரிய லாரியில்
கம்பளிகளை கொண்டுவந்து அனைவருக்கும் இலவசமாக தானம் செய்கிறார்.
மற்றொருவரோ அனைவருக்கும்
உணவுபொட்டலங்களை வினியோகம் செய்கிறார்.இவர்களை தூண்டியது எந்த சக்தி?
தங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் இவர்கள் செய்யும் தியாகமும்,வைராக்கியமும்
அலாதியானது. தங்கள்
குழுக்களில் பிறரை சுலபமாக சேர்க்க மாட்டார்கள்.அகோரிகளின் ராணுவ அமைப்பின் தலைவர் பதவியை ஏற்கும்.முறை விசித்திரமானது. புதிய
தலைவரை வணங்கிவிட்டு , பழைய தலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்…!

காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டர்களின்.சரணாலயம். ஊருக்கு ஒரு மயானம் இருப்பது
போல உலகிற்கே ஒரு மயானம்
என்றால் அது காசி என
சொல்லலாம். தினமும் சராசரியாக
எழுநூறு முதல் ஆயிரம்
பிணங்கள் எரிக்கப்படுகிறது.

சன்யாசிகள், யோகிகள்,
தாந்திரீகர்கள், மாந்திரீகம் செய்பவர்கள் என
அங்கே கூட்டம் அதிகம்.
காக்கி சட்டையில் வரும்
ஒருவர் வாட்சுமேனா அல்லது போலீஸா என தெரியாமல் முழிப்பவர்கள் போல,
மக்கள் அகோரிகளுக்கும்
மாந்திரீகர்களுக்கும்
வித்தியாசம் தெரியாமல் அனைவரையும் ஒரே
தலைப்பில்
அடைத்துவிடுவார்கள்.

மேலைநாட்டுகாரர்களுக்கு இந்தியாவில் நரமாமிசம்
சாப்பிடும் மாந்திரீகர்களை படம்
பிடித்து அவர்களை நாக
சன்யாசிகள், அகோரிகள் என
கூறிவது வருந் ததக்கது
அகோரிகள் மயானத்தில் தியானம்
செய்வார்கள், எரியும் உடல் மேல்
அமர்ந்து தியானிப்பார்கள்.
ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள்.

உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை
என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள்.
உடலில் எந்த ஒரு மத
சின்னங்களோ அடையாளமோ இருக்காது.

ருத்திராட்சம் , சங்கு மற்றும்
ஆயுதம் இவற்றில்
ஏதாவது ஒன்று கைகளில்
வைத்திருப்பார்கள்.ஆபரணம், மோதிரம் அணியமாட்டார்கள்.

தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும்,மார்ப்பிலும் முடி இருக்காது.கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள்.

உடை உடுத்துவது இவர்கள்
மரபு அல்ல . (நிர்வாணத்திற்கான காரணம்.ஆசை ,பாசம் ,பொருள்
ஆடை என்று எல்லாவற்றையும்
கடந்து பிறவிச்சுழற்சியிலிரு­
யந்து விடுதலை அடைந்து முற்றும்.துறந்த நிலை என்று கூறலாம்.)
.சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர
பிற நாட்களில் / இடங்களில் பூச
மாட்டார்கள

இந்தியா என்பது எப்போதுமே முனிவர்கள், சாதுக்கள் மற்றும் ஆத்மா பலம் நிறைந்த பூமியாக விளங்குகிறது. சாதுக்கள் என்று எடுத்துக் கொண்டால், அவர்கள் அனைவரும் பல வகையான சாதுக்களை சேர்ந்தவர்களாக விளங்குவார்கள்.

சிலர் காவி நிற ஆடையணிவார்கள், சிலர் கருப்பு நிற ஆடையணிவார்கள். இன்னும் சிலரோ ஆடையே அணியாத நிர்வாண நிலையில் இருப்பார்கள்.
சாது என்றால் யார் என்ற கேள்வி வரும் போது, உலக சந்தோஷங்களை துறந்து மோட்சம் அடைவதற்கு தங்கள் வாழ்க்கையை கடவுளுக்கு அர்பணித்தவர்கள் என்று தான் நாம் கூறுவோம்.

கடவுளை அடைய சில சாதுக்கள் வழக்கத்திற்கு மாறான சில பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரமான இடமாக பிறரால் பார்க்கப்படுகிற இடங்களிலே இவர்கள் வாழ்வார்கள். அதில் ஒன்று தான் மயான பூமி. இவ்வகையான சாதுக்கள் பிணங்களின் சாம்பலை தங்கள் உடல் முழுவதும் பூசிக்கொண்டு, மனித மண்டை ஓட்டில் பானம் பருகி, மனித தசைகளை உட்கொண்டு வருவார்கள்.

தன்னின மாமிச உண்ணும் பழக்கங்கள், விலங்குகளை பலி கொடுப்பது மற்றும் இதர விந்தையான சடங்குகளை செய்வதற்கு பெயர் பெற்றவர்கள் அகோரிகள். பைரவ வடிவில் இருக்கும் சிவபெருமானின் தீவிர பக்தர்கள் இவர்கள்.

மறுபிறப்பில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அடையும் நோக்கில் மற்றும் தன் சுய அடையாளத்தை புரிந்து கொள்ளும் நோக்கில் தான் அவர்கள் வாழ்க்கை பயணிக்கிறது. மாறுபட்ட நிலையிலான மன உணர்வில் வாழ்பவர்கள் இவர்கள். சமுதாயத் தீய பழக்கங்களை வேரறுத்து, இருமை இயல்பற்றதை (அத்வைதா) உணர்வதே அவர்களின் உச்சகட்ட குறிக்கோளாகும்.

இருப்பினும், அகோரிகள் என்பவர்கள் சிவநேத்ராக்களை விட மாறுபட்டவர்கள். சிவநேத்ராக்கள் தீவிர டமாஸிக் பழக்க வழக்கங்களில் ஈடுபடாதவர்கள்.
சிவநேத்ராக்களும் சிவபெருமானை தான் வழிபடுவார்கள், ஆனால் சட்விக் வடிவத்தில். அகோரி என்ற வார்த்தை அகோர் என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து எடுக்கப் பட்டவையாகும். அதற்கு இருளற்றது என்பதே பொருளாகும்.
இயற்கை நிலையிலான உணர்வை உட்குறிப்பவர்களே அகோரிகள்.

அந்த உணர்வில் பயமோ வெறுப்புணர்ச்சியோ துளியும் இருப்பதில்லை. அதனால் பயம் இல்லாமலும் பாரபட்சம் பார்க்காமலும் இருப்பவரே அகோரி. ADVERTISEMENT அகோரி சாதுக்களைப் பற்றி, அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் நம்பிக்கை ஆகியவைகளை பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக பார்க்கலாமா?

வழக்கத்திற்கு மாறான, அதிபயங்கரமான சடங்குகள் உலகத்தில் எதுவுமே அசுத்தமில்லை எமனது அகோரிகளின் நம்பிக்கையாகும். சிவபெருமானிடம் இருந்து வந்த அனைத்தும் அவரிடமே செல்கிறது.
அதனால் உலகத்தில் உள்ள அனைத்தும் தூய்மையானதே. அழிக்கும் கடவுளான சிவபெருமான் மயான பூமியல் தான் வாழ்கிறார் என நம்பப்படுகிறது. அதனால் தான் மயான பூமிக்கு அருகில் வாழ்கின்றனர் அகோரிகள். எரித்த சடலத்தின் சாம்பல் தான் உலகத்திலேயே தூய்மையானது என அவர்கள் கருதுவதால் அதனை உடல் முழுவதும் பூசிக் கொள்வார்கள் அவர்கள்.

உலகத்தில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதையும், வாழ்க்கை முடிந்தவுடன் அனைத்துமே சாம்பலாகி விடும் என்பதையும் குறிக்கிறது இந்த சாம்பல்.

வழக்கத்திற்கு மாறான, அதிபயங்கரமான சடங்குகள்
இறந்த மனிதர்களின் எலும்புகள் மற்றும் மண்டை ஓட்டை அகோரிகள்பயன்படுத்தி வருகிறார்கள் அகோரிகள். அதனை அணி கலன்களாகவும் கிண்ணமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். மோட்சத்திற்காக கங்கையில் வீசப்படும் எஞ்சியிருக்கும் மனித சடலத்தின் எலும்புகளை சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.

புனித நபர்கள், கர்ப்பிணி பெண்கள், பாம்பினால் கடிபட்டவர்கள்,.பிறக்காத சிசுக்கள் போன்றவர்களின் சடலங்களை எரிக்க கூடாது என்பது இந்து மதத்தில் பின்பற்றப்படும் வழக்கமாகும். அவர்களை கங்கையின் புனித நீரில் மூழ்கடித்து விட வேண்டும். இந்த சடலங்களை பலிபீடமாக பயன்படுத்தி கொள்வார்கள் அகோரிகள். ஏன், இறப்பை நினைவூட்டும் விதமாக அதனை உண்ணவும் செய்வார்கள்.

*சிவபெருமான் :*
******************

உச்ச சக்தி பைரவ வடிவில் இருக்கும் சிவபெருமானை உச்ச சக்தியாக நம்புகின்றனர் அகோரிகள். நடக்கும் அனைத்திற்கும் சிவபெருமானே பொறுப்பு, நிபந்தைகள், விளைவுகள் மற்றும் தாக்கங்கள். உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவும் சிவபெருமான் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்த ஆத்மா அனைத்தும் உலகளாவிய 8 பிணைப்புகளால் (அஷ்டம ஹாபாஷா) மூடப் பட்டிருக்கிறது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

சிற்றின்பம், கோபம், பேராசை, மன உறுத்தல், பயம் மற்றும் வெறுப்பே அந்த எட்டு பிணைப்புகலாகும். இந்த பிணைப்புகளை நீக்கும் திசையில் தான் அனைத்து அகோரிகளும் தங்களின் வழக்கங்களை மேற்கொண்டுள்ளனர்.

*நம்பிக்கைகள்*
******************

சிவபெருமானை மனிதர்கள் உணர்ந்து கொள்ள தடையாக இருக்கும் இந்த 8 பிணைப்புகளையும் நீக்கும் திசையில் தான் அகோரிகளின் அனைத்து வழக்கங்கள் அமைந்திருக்கும். மயான பூமியில் செய்யப்படும் சடங்குகள் மனிதர்களின் மிகப்பெரிய பயமான மரண பயத்தை அளித்திடும்.

பாலியல் சம்பந்தப்பட்ட சடங்குகள் ஒருவரை சிற்றின்ப எண்ணங்களை நீக்கும். நிர்வாணமாக இருப்பது வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுடன் கூடிய அன்பு மற்றும் மன உறுத்தல்களை அழிக்கும். இந்த 8 பிணைப்புகளும் ஆன்மாவை விட்டு நீங்கினால், அவன் சதாசிவாவுடன் சேர்ந்து மோட்சத்தை பெறுவான் என அகோரிகள் நம்புகின்றனர்.

மாய வித்தை நம்பிக்கை
அகோரிகளின் விந்தையான குணாதிசயங்களை பார்த்து, அதனை மாய வித்தையுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர் மக்கள். ஆனால் அது உண்மையல்ல.

மாய வித்தை நம்பிக்கை
அகோரிகளின் விந்தையான குணாதிசயங்களை பார்த்து, அதனை மாய வித்தையுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர் மக்கள். ஆனால் அது உண்மையல்ல.

அவர்களிடம் அளவுக்கு அதிகமான இயற்கைக்கு மாறான சக்திகள் உள்ளது. அதற்கு காரணம் நீண்ட காலமாக அவர்கள் செய்து வரும் யோகாசனங்கள். ஆனால் அவர்கள் எந்த ஒரு மாய வித்தைகளையும் செய்வதில்லை.

அவர்களின் சடங்குகளும், பழக்க வழக்கங்களும், மோட்சத்தை அடைவதிலும், சிவபெருமானின் உண்மையான இயல்பை உணர்வதிலுமே அடங்கியிருக்கும்.

*யாரை வழிப்படுவார்கள் அகோரிகள்?*
************************************

சிவபெருமானையும், காளி தேவியையும் வணங்குவார்கள் அகோரிகள். காளி தேவி அல்லது தாரா என்பவர் 10 மகாவித்யாக்களில் (அறிவை கொடுக்கும் கடவுள்கள்) ஒருவராகும். இக்கடவுள் இயற்கைக்கு மாறாக அதீத சக்திகள் கொண்டுள்ள அகோரிகளை மட்டுமே ஆசீர்வதிப்பார்கள். துமாவதி, பகளமுகி மற்றும் பைரவி வடிவில் இருக்கும் இக்கடவுளை இவர்கள் வணங்குகிறார்கள். மஹாகல், பைரவா மற்றும் வீரபத்ரா போன்ற மிகவும் கடுஞ்சினத்துடன் கூடிய வடிவத்தில் இருக்கும் சிவபெருமானையும் வணங்குவார்கள். அகோரிகளின் காப்பாளர் கடவுளாக விளங்குவது ஹிங்க்லஜ் மாதா.

*எளிய தத்துவம்*
*******************

அகோரிகளின் தத்துவப்படி, அவர்களுக்குள் தான் இந்த அண்டம் குடி கொண்டுள்ளது.
நிர்வாணமாக இருப்பதால் அவர்களே உண்மையான மனித வடிவின் பிரதிநிதித்துவம். நாம் இந்த கோலத்தில் தான் இந்த உலகத்திற்குள் நுழைகிறோம்.
அதே போல் இந்த கோலத்தில் தான் இந்த உலகத்தை விட்டு வெளியேறுகிறோம். அதனால் நிர்வாணமாக இருப்பதற்கு அவர்கள் வெட்கப் படுவதில்லை.
காதல், வெறுப்பு, பொறாமை மற்றும் தற்பெருமை போன்ற உணர்சிகளுக்கு அப்பர்ப்பட்டவர்கள் அவர்கள். அனைத்திலும், ஏன் தூய்மையில்லாத மற்றும் சுத்தமில்லாதவற்றிலும் கூட கடவுள் இருக்கிறார் என்பதே அவர்களின் நம்பிக்கையாகும்.

தவறாக புரிந்து கொள்ளப்பட்டது
அகோரிகள் என்பவர்கள் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள். அவர்களை பெரும்பாலும் மாய வித்தைகளுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள் மக்கள். அதற்கு காரணம் அவர்கள் இறந்த சடலங்களுடன் சேர்ந்து வாழ்வதால். ஆனால் அவர்களோ கடவுளை தேடும் காரணத்தினால் தீவிரமான வழிமுறைகளை பின்பற்றி வாழும் புனிதமான எளிய மனிதர்களாகும். குணமாக்கும் சக்தியையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

நோயாளிகளின் உடலில் இருந்து மாசுக்களை நீக்கி மீண்டும் பழைய ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வரும் “உருமாற்றும் குணமாக்கல்” சக்தியை அகோரிகள் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது. இதற்கும் மாய வித்தைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.
அகோரிகளின் உயரிய நிலையிலான உடல் மற்றும் மனதே, அவர்களுக்கு இவ்வளவு சக்தியை அளித்துள்ளது..

- சித்தர்களின் குரல் shiva shangar

ஷிவோகம்