Saturday, November 14, 2015

தவம்

நினைப்பது நடக்கும் :
விழிப்பு நிலையிலேயே இருக்க பழகி கொண்டால்,
மற்றவைகளுடைய எண்ண அலைகள் நமக்கு தீமை விளைவிப்பனவாக இருந்தாலும்,
உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பனவாக இருந்தாலும். அவை நம்மை பாதிக்காது.
உதாரணமாக ரேடியோவில் எத்தனையோ அலைவரிசைகள் உண்டு என்றாலும் எதை நாம் தேர்ந்து எடுக்கின்றோமோ அவை மட்டுமே நமக்கு கேட்கும்.
மற்ற அலைவரிசைகள் வந்து மோதும் , ஆனால் நமக்கு கேட்காது அது போல நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நினைப்போம்.
நாம் எங்கு போனாலும் நமக்காக மற்றவர் தானாக அந்த அலைவரிசையில் கட்டுப் பட்டு நம் மதிப்பை உணர்ந்து அவர்கள் செயல்படுவார்கள்.எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.
அப்படி எங்கேயாவது தடை ஏற்பட்டாலும் அது நமக்கு கெடுதல் இல்லை நம்மை திருப்பி விடுவதனால் தேவையில்லாதவற்றை தள்ளி விடுகிறது.
எந்த நேரத்தில் , எந்த காலத்தில், எந்த சூழ்நிலையில் நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்து விடும்.
உலகில் எந்த இடத்திலாவது நம் எண்ணிய எண்ணத்திற்குரிய காலமும் நேரமும் வரும் அது தானாக நடந்து விடும்.
எனவே நல்ல சிந்தனைகளையே மனதில் வளர்த்துக் கொள்வோம். நல்லதே நடக்கும் . நாம் நினைப்பது தான் நடக்கும்.
---வேதாத்திரி மகரிஷி
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment