Wednesday, November 18, 2015

மின் கட்டணம்

TNEB spills its own billing secrets! 

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !! 

வீட்டு இணைப்புகளுக்கானது:- 

முதல் நிலை:- 

1-100 யூனிட் வரை ரூபாய் 1.00 நிலைக்கட்டணம் இல்லை. 
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் 
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக 
எந்த கட்டணமும் இல்லை.) 

இரண்டாம் நிலை:- 

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50. நிலைக்கட்டணம் ரூபாய் 20.00. (நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் 
சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். 
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான 
தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம் 
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.) 

மூன்றாம் நிலை:- 

1-200 யூனிட் வரை ரூபாய் 2.00. 
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00. 
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00. (நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம் ரூபாய் 460.00 
செலுத்தவேண்டும்.) 

நான்காம் நிலை:- 

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00. 
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00. 
500 க்கு மேல் ரூபாய் 5.75 
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00 

(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் 
இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10 
யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள் 
செலுத்தவேண்டும்) 

அனைவரும் அறிய பகிருங்கள் நண்பர்களே..BY TNEB

No comments:

Post a Comment