ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்!
ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் என்ற இயற்கை வேளாண் முறையை தமிழக விவசாயிகளுக்கு கற்றுத்தர சுபாஷ் பாலேக்கர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் வருகிறார்.
செலவில்லாமல் இயற்கை விவசாயம்
அதுமட்டுமல்லாமல், சுபாஷ் பாலேக்கர் கற்பிக்கும் இந்த இயற்கை வேளாண்முறை பொதுவாக தண்ணீர் குறைவான நீர்ப் பாசனத்தில் விவசாயம் செய்யும் உத்தியை கற்றுத்தருகிறது.
ஜீரோ பட்ஜெட்டில் இயற்கைவிவசாயம் செய்வது எப்படி? இயற்கை விவசாயத்தை முழுமையாகக் கடைபிடிக்க முடியுமா? இதுபோன்ற கேள்விகள் உங்கள்மனதில் தோன்றலாம்! உங்கள் சந்தேகங்களை எல்லாம் போக்கும் வகையிலும், இதன்நடைமுறை சாத்தியத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும், நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றுவருக்கும் கற்றுக்கொடுக்கும் வகையிலும் இந்தவகுப்பின் தன்மையானது அமையும். நிகழ்ச்சியின் 8 நாட்களும் முழுமையாகக் கலந்துகொள்பவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகளும் ஆதரவும் வழங்கப்படும். இதன்மூலம் இயற்கை விவசாயம் குறித்த தெளிவான பார்வையை நீங்கள் பெறுவது உறுதி.
பல்லடம் திருச்சி மெயின் ரோடு, ஸ்ரீ விக்னேஷ்மஹால் (இலட்சுமி மில்ஸ் பஸ் நிறுத்தம்)ல் 10.12.2015 முதல் 17.12.15 வரை, 8 நாட்கள் தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் இடம் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்! எட்டு நாட்களும் பயிற்சியில் கலந்துகொள்வது அவசியம்!
ஜீரோ பட்ஜெட் சேனாதிபதி (பயிற்றுநர்) சிறப்பு பயிற்சி வகுப்பு கற்றுக்கொள்ள அழைக்கிறது ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம்.
இந்தபயிற்சிக்கான விண்ணப்பத்தை www.projectgreenhands.org/ZBT என்றவலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் அனைத்து ஈஷா நர்சரிகளிலும் விண்ணப்பங்கள்கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு: 09442590068,
Friday, November 13, 2015
இயற்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment