!
ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. கோபம் வரும்போது அவன் கத்தி தீர்த்து விடுவான்,
மேலும் அவன் இயல்பு தன்மைக்கு மாறாக நடந்து கொள்வான்.
ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.
”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.
முதல்நாள் 10 ஆணி, மறுநாள் 7, பின்பு 5, 2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.
ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.
இனி கோபம் வராது, என அவன் அப்பாவிடம் கூறினான்.
இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.
45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.
உடனே அப்பா சொன்னார், ஆணிகளை பிடுங்கிவிட்டாய், சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்?
உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா?
அந்த இளைஞன் வெட்கித் தலை குனிந்தான்.
பிறரை காயப்படுத்துவதை நிறுத்தினால் வாழ்க்கை புதிய அத்தியாயம் பெறும்.
யாராயினும் நா காக்க..
No comments:
Post a Comment