Sunday, March 6, 2016

இந்த சித்தர் சரநூல் சாஸ்திரம் என்பது

இந்த சித்தர் சரநூல் சாஸ்திரம் என்பது
சிவன் பார்வதிக்குச் சொல்லி , பார்வதி நந்திதேவருக்குச் சொல்லி,
நந்திதேவர் அகஸ்தியருக்குச் சொல்லி,
அகஸ்தியர் பதிணென் சித்தர்களுக்கு சொல்லி, சித்தர் பரம்பரை வரும் அனைவருக்கும் இரகசியமாக
உபதேசிக்கப்பட்டு வருவது.
சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம்
என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின்
வடிவத்தை ஒத்திருப்பது
என்பதற்காகவும், அண்ட சராசரம்(அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.
1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு
21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600
மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120
ஆண்டுகளாகும்.
ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18
மூச்சும், ஒடும்போது 25 மூச்சும்,
தூங்கும் போது 32 மூச்சும,;
உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய
அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ
அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.
நாம் செய்யும் காரியங்களில்
வெற்றி பெறவும், காரியத்தடை நேராமல் தடுத்துக் கொள்ளவும்,
பலன்களைச் சொல்வதற்கும், கேள்வி கேட்கும் நபருக்கு காரியசித்தியாக்குதலையும்,
இன்னும் பல காரியங்களுக்கும் இந்த சரநூல் சாஸ்திரம் பயன்படுகிறது.
சரம் பார்க்கத் தெரிந்தவனே “பார்ப்பான்”
என்று அழைக்கப்படுகிறான். சரம் பார்க்கத் தெரிந்தவனிடம் எந்த மோதலையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே “சரம் பார்ப்பவனிடம் பரம் போகாதே” என்று வழக்குச் சொல்லில் கூறுவர். சரமே இறைவன், எனவே அகத்தியர் தனது சரநுநூல் சாஸ்திரத்தில், சரத்தை இறைவனுக்கு சமமாகவும் பஞ்சபூதங்களின் ஒடுக்க ஸ்தானமாகவும் கூறுகிறார். இந்த சரநூல் சாஸ்திரத்தின் விரிவைப்
பார்ப்போம்.
சூரிய கலை, சந்திர கலை அவற்றின் வேகம் மற்றும் எண்ணிக்கையைப் பற்றி பார்த்தோம். ஒரு நாளில் ஓடக்கூடிய
மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600
என்று பார்த்தோம் சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். 21,600 ஓடுகள் வேயப்பட்டுள்ளன. அவை ஒரு நாளில்
ஓடக்கூடிய மூச்சின் எண்ணிக்கையை குறிக்கும். 5
வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.
இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம்
ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும்.
எனவே விதி முடிவும் விலகியே போகும்.
நந்தனார் கீர்த்தனையில் எட்டும்
இரண்டறியாத மூடன் என்கிறார். 8
என்பது 'அ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இரண்டு என்பது 'உ' காரமாக தமிழ்
எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது.
இதையே அகார உகாரம் என்று கூறுகின்றார்கள். 8*2=16 அங்குலம் ஓடும் சந்திரகலையை குறிக்கிறது.
'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்'
அகார(8), உகாரம்(2),யகாரம்(10).
தமிழ் எழுத்துக்களில் எண்ணாகவும் எழுத்தாகவும் திகழ்கின்றனவோ அவையே அகாரம் மதி,உகாரம் ரவி,சுடர் மகாரம்,இந்த மூன்றும் சேர்ந்ததே ஓம் என்னும் பிரணவம்.
ரவி, மதி,சுடர்,மூன்றிலும் இருப்பது சிகாரம் என்றழைக்கப்படும் நெருப்பு.
'நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும்'
“குழவியும் ஆணாம் வலத்தது
ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்ட கால்
ஒக்கிலே”   திருமந்திரம் 482
உடலுறவில் இணைகின்ற
ஆணுக்கு வலது நாசியில் சுவாசம்
நடந்தால் ஆண்குழந்தை தோன்றும். சுவாசம் இடது நாசியில் நடந்தால்
பெண் குழந்தை தோன்றும். சுவாசம் சுழுமுனையில் நடந்தால் தோன்றும் குழந்தை அலியாகும். வலது அல்லது இடது நாசியில் சுவாசம் நடந்து அப்போது அபானன் என்ற வாயு எதிர்க்குமானால் இரட்டைக் குழந்தை தோன்றும்.
பிறவியிலேயே கூன்,
குருடு, ஊமை போன்ற பல
குறைகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கு, காரணங்களை சித்தர்கள்
சரநூலில் பல இடங்களில்
கூறுகின்றனர். இதையே திருமந்திரத்தில
“மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாத உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை.
மாதாஉதரத்தில்வந்தகுழவிக்கே'   திருமந்திரம் 481
உடலுறவின் போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் தோன்றும் குழந்தைக்கு மூளை வேகமாக செயல்படாது மந்தமாக இருக்கும். பெண்ணின் வயிற்றில் சிறுநீர் மிகுந்து இருந்தால்
பிறக்கும் குழந்தை ஊமையாகும். மலம், சிறுநீர் இரண்டும் அதிகமாக
இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு
கண் குருடாகும் என்ற திருமூலர் திருமந்திரத்தில் கூறுகின்றார்.
“பாய்கின்ற வாயு குறையிற்
குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்.
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாத்ர்க்கில்லை பார்க்கிலே”   திருமந்திரம் 480
ஆணின் உடலிலிருந்து உயிரணுக்கள்
வெளியேறும் நேரம் இருவரின் சுவாசமும் சரியான அளவில் இருந்தால் எந்தக் குறைபாடும் இராது. ஆனால் ஆணின் சுவாசம் தேவையான அளவை விட குறைந்து வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். சுவாசம் திடமின்றி
வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை முடமாகும். சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும்
வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு கூன் விழும்.
'பாய்ந்த பின் அஞ்சோடிய ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடி பாரினில்
எண்பதாம்'   திருமந்திரம் 479
உயிரணுக்கள் வெளியேறும் நேரம் ஆணின் சுவாசம் ஐந்து மாத்திரை நேரம் பாய்ந்தால் பிறக்கும் குழந்தை நூறு வயது வரை வாழும். நான்கு மாத்திரை நேரம் ஓடினால் எண்பது வயதுவரை உயிர்வாழும். சுவாசம் வெளிப்படும் மாத்திரை குறைய குறைய ஆயுளும் குறையும்
'கொண்ட வாயு இருவருக்கும்
ஒத்தொழில்
கொண்ட குழவியும்
கோமளமாயிரும்
கொண்ட நல்வாயு இருவருக்கும்
குழறிடில்
கொண்டதும் இல்லை
கோல்வினையாட்கே.'  திருமந்திரம் 483
உடலுறவின் போது ஆண் பெண் இருவருக்கும் சுவாசம் சீராக ஒரே அளவாக ஓடினால் தோன்றும் குழந்தை மிக அழகாக பிறக்கும் . சுவாசம் தாறுமாறா
சந்திர கலை  சூரியகலை சூரி
யன் உதிக்கும் போது ஓட வேண்டிய திதிகள்
குறிப்பிட்டிருந்தோம்.சூரியன்
உதிக்கும்போது சூரியகலையில்
அதாவது வலது நாசியில் ஓட வேண்டிய திதிகளில் காலை 6
மணிக்கு ஓட ஆரம்பித்து ஒரு மணிநேரம் கழித்து சந்திர கலை ஓட ஆரம்பிக்கும். மீண்டும் ஒரு மணிநேரம் கழித்து சூரிய கலை ஓட ஆரம்பிக்கும். இதே போல்சூரியன் உதிக்கும் போது சந்திர கலையில்
ஓட வேண்டிய திதிகளில் சூரிய உதயத்தில் சந்திர கலையில் ஒரு மணிநேரம் மூச்சு ஓடி, பின் சூரிய கலையில் ஒரு மணி நேரம் மூச்சு ஓடி இப்படியே மாறி மாறி
மூச்சு ஓடிக்கொண்டிருக்கும்.
“நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம”
-அருணகிரிநாதர் திருப்புகழ்-
நாதத்திற்கும் (பெண்களிடமுள்ள  ஜீவசக்தி)  விந்துவிற்கும் (ஆண்களிடமுள்ள ஜீவசக்தி) முதல் வணக்கத்தைத் தெரிவித்த அருணகிரிநாதர் பின்னரே வேத மந்திர சொரூபனான
இறைவனுக்கே வணக்கம் தெரிவிக்கிறார்.இதையேதிருப்புகழில்
“அருகுநுனி பனியனைய சிறிய துளி
பெருகியொரு ஆகமாகிய பாலரூபமாய்”
என்று கூறுகிறார். ஒரு விந்துவில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள் ஒவ்வொன்றும் மானிடனாகி 120 வருடங்கள் வாழ வைக்கக்கூடிய உயிர்ச் சக்தியைப்
பெற்றிருக்கின்றன. எனவே “விந்து விட்டவன் நொந்து கெட்டான்” என்று சித்தர்கள் கூறுகின்றனர். நாம் அணியும் திருநீறு வெள்ளை நிறமாக இருந்து இந்த விந்தையே குறிக்கிறது. குங்குமம் சிவந்த நிறமான பெண்களின் நாதத்தைக் குறிக்கிறது.
இதையே உலக இயக்கம் என்பதால்
குங்குமமும். திருநீறும்
நெற்றியில் அணிகிறோம்.
எல்லோருமே நாத விந்து சொரூபர்களே.
ஆண், பெண்களின் சேர்க்கையே லிங்க சொரூபம். இடப் பாகம்
சக்தியென்பதால் லிங்கத்தின் இடது பாகம் நீர்த்தாரை வைக்கப்பட்டுள்ளது.
சிவலிங்கத்தின் அந்த இடப்பாகத்தையே
நோக்குவது போல இடதுபுறம் நந்தி சாய்த்துப் பார்க்கும் படி
அமைக்கப்பட்டுள்ளது. சக்தியான
சந்திரகலையை முதலில் குறைக்க வேண்டும் என்பதற்காகவே, இது கோயிலில் அமைப்பாக
காட்டப்பட்டுள்ளது.
(சீனத்து அக்கு பஞ்சர் முறை நமது போக முனிச் சித்தரால் கண்டுபிடிக்கப்பட்டு சீனத்தில் கையாளப்பட்டு வருகிறது அதில்
'யின்'(yin)என்றால் இடப்பக்கம் என்றும் பெண் தன்மை என்றும் ,யாங்(yang)
என்றால் வலப்பக்கம் என்றும் ஆண் தன்மை
என்றும் கூறப்பட்டுள்ளது.)
“மூலமான மூச்சதில் மூச்சறிந்து
விட்டபின்
நாலு நாலு முன்னிலொரு
நாட்டமாகி நாட்டில்
பாலனாகி நீடலாம் பரப்பிரம்மம்
ஆகலாம்.
ஆலமுண்ட கண்டராணை
அம்மையாணை உண்மையே”
“இருக்கலாம் இருக்கலாம்
அவனியிலே இருக்கலாம்
அரிக்குமால் பிரம்மனும் அகண்ட மேழ் அகற்றலாம்
கருக்கொளாத குழியிலே
காலிடாத கண்ணிலே
நெருப்பறை திறந்த பின்பு நீயும்
நானும் ”
“சிவ வாக்கியர்”
மேற்கண்ட பாடல்களில் மூலமான
மூச்சை  சரியான படி அறிந்து அளவிட்டு 4 அங்குலமட்டில் ஓட
விட்டால் பாலன் போன்ற தோற்றமும்,
பரப்பிரம்மான இறைவனுக்குச்
சமமாகவும் ஆகலாம் என்று சிவவாக்கியர் இறைவன், இறைவி
மீது ஆணையிட்டுக் கூறுகிறார்.
இந்த அவனியான பூமி இருக்கும் வரை, அரி, மால் பிரம்மன்.,
அண்டங்கள் இவற்றைக் கூட படைக்கலாம், அழிக்கலாம் காலிடாத
கண்ணிலே என்ற மூச்சுவிடாத (கால் என்றால் காற்று) நிலை அடைந்தால் நெற்றிக்கண்ணில் நெருப்பறை திறக்கும். “நெருப்பறை திறக்குமானால் , நீ நான் அனைவரும் ஈசனே.
உண்ணும் போது உயிரெழுத்தைஉயரேவாங்கு
உறங்குகின்ற போதெல்லா மதுவேயாகும்.
பெண்ணின் பாலிந்திரியம்
விடும்போ தெல்லாம்
பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு
தின்னுங் காயிலை மருந்தும் அதுவேயாகும்.
தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணு}ழி காலமட்டும் வாழ்வார் பாரு.
மரலிகையில் அகப்படவு மாட்டார்
தாமே.
அகத்தியர்தம் ஞானப்பாடலில் இவ்வாறு கூறுகிறார்.
எனக்கு சொந்த அனுபவத்தில் சில மருத்துவ கலைகளின் அறிவு உண்டு. ஆனால் சித்த மருத்துவக்
கலையில் எனது முன்னோர்கள்
பரம்பரையாகச் செய்து வந்திருக்கின்றனர். இவற்றில் முக்கியமான விஷயம், என்னை பிரமிக்க வைத்த விஷயம் ஒன்று உண்டு. எல்லா வைத்திய
முறைகளும் உடலில் ஏற்படுகின்றன
பிணிகளைப் போக்கிக் கொள்ளும்
முறைகளைப் பற்றிமட்டுமே கூறுகின்றன. அதிலும் சில நோய்கள் மனித குலத்திற்கும்,
விஞ்ஞானத்திற்கும் சவாலாகவே
அமைந்திருக்கின்றன.
ஆனால்சித்தர்களோஉடலில்
ஏற்படுகின்ற வியாதிகளின்
எண்ணிக்கை 4448 வியாதிகள் என்று குறிப்பிட்டுச் சொல்வதுடன்
அவற்றைப் போக்கும்
முறைகளையும் தெளிவுபட விளக்கியுள்ளனர்.
இதற்கு மேலும் ஒருபடி சென்று மரணம் என்பதும் ஒரு பிணி என்று கூறுவதுடன் மரணம் மாற்றம் முறைகளையும, மரணமிலாப் பெருவாழ்வு என்பதனையும் விளக்கிச் சொன்னதுடன்
கடைபிடித்து வெற்றியும்
கண்டுள்ளனர்.
குரு குல கல்வி முறையில் இவையெல்லாம் ஒரு காலத்தில் கற்பிக்கப்பட்டு வந்தன.இந்த மேம்பாடான் கல்விமுறை அழிந்து  தற்கால
சந்ததியினருக்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமே. தற்கால சந்ததியினர் மெக்காலே கல்வி முறை ஆங்கிலேயர் காலத்தில் குமாஸ்தாக்களை உருவாக்கவே ஏற்படுத்தப்பட்டது.
அந்தக் கல்வி முறை மூலம் உருவாகும் இவர்கள்,சுயம் என்பது போய் தன் காலில் நிற்கத்தெரியாதவர்களாகவும்,
அரசாங்க வேலையை எதிர்பார்த்து
,அதற்கு கையூட்டு கொடுப்பவர்களாகவும். கொடுத்த கையூட்டை, மறுபடி மக்களிடம் அதே கையூட்டின் மூலம் வசூலிக்கும் அக்கிரமக்காரர்களகவும் மாறி கடைசியில் நிம்மதி தொலைத்து,முறையற்ற வழியில் பணம் தேடும்பிசாசுகளாய்
வாழ்ந்து,முடிவில் இறந்தே போகுபவர்களாவே உள்ளனர்.
இந்த சரநூல் சாஸ்திரத்தைக் கொண்டு
நோய்களை போக்கிக் கொள்ளவும்,
நமக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொள்ளவும் சித்தர்களின் அருளாசியால்
“
சித்தர் சரநூல் கற்போம் சராசரம் வெல்வோம் ;!

Saturday, March 5, 2016

ஓஷோ

ஓஷோ இந்திய நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்ற குரு அல்ல.  உண்மையில் பாலுறவுக் கட்டுப்பாடுகள் எதுவுமேயில்லாத அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளே கூட அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாமல் அவரை விரட்டியடித்து விட்டனர் என நண்பர் ஒருவர் வாதிட்டார்.

ஆம் என்று தலையாட்டி வைத்தேன்.

பிறகு இவரொடு வேறென்ன வாதம் செய்வது?

அவர் ஒரு செக்ஸ் சாமியார் என்பது இந்தியர்களின் தவறான புரிதல்.

(உண்மையில் ஓஷோ செக்சுக்கு எதிரானவர்)

ஆகையால் அமெரிக்காவிலிருந்து அவர் விரட்டப்பட்டதற்கு அவர் செக்ஸைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார் என்பது காரணமல்ல. 

மனம் முழுக்க வக்கிரக் காம எண்ணங்கள் உடைய ஒருவன், தன் குட்டு வெளிப்பட்டுவிடுவோமோ என பயந்து அதை மறைக்கப் போராடும் முயற்சியே ஒஷோ போன்றோரின் வெளிப்படையான பேச்சை எதிர்த்தல்.

பாலுறவு குறித்த கட்டுப்பாடுகள் எதுவும் அற்ற நாடுகளில் ஓஷோ செக்ஸைப் பற்றி வெளிப்படையாய் பேசியதெல்லாம் பெரிய பிரச்சனையேயல்ல.

பிறகு ஏன் அவர்கள் ஓஷோவை எதிர்த்தனர்?

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முட்டாள் மதக்கொள்கைகளின் ஆணி வேரையே அசைத்துப் பார்த்தவர் ஓஷோ.

போப் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரத்தையே உலுக்கிப்பார்த்தவரை எப்படி அவர்களால் கொண்டாட முடியும்.

சிகரெட், மது தயாரிப்பாளர்களுக்கு, மது விலக்கு பற்றிப் பேசுபவனை எப்படிப் பிடிக்கும்?  அதுபோலத்தான்.

Osho is a dangerous rebellion ever lived on the earth in the past 25 centuries.

உண்மையை எதிர்கொள்ளத் துணிவில்லாதவர்களுக்கு வெகு நிச்சயமாய் ஓஷோவைப் பிடிக்காது.

உதாரணமாய்.....

மனைவியோடு வெளியே செல்லும் போது எதிரே வரும் அழகான ஒரு பெண்ணை கணவன் ரசிப்பது என்பது இயல்பு.

நீ இப்படி ரசிக்கிறாய்.  அதில் தவறேதுமில்லை.  அது இயற்கையானதே.  அது குறித்து குற்றமனப்பான்மை கொள்ள ஏதுமில்லை.  ஆகவே அதை ஒத்துக்கொள் என்று நம் போலி முகத்திரையைக் கிழித்து உண்மையை ஏற்றுக்கொள்ளச் செய்பவரே ஓஷோ.

ஆனால் அப்படி ஏற்றுக்கொள்ள ஒரு அசாத்தியத் துணிச்சல் தேவை.

சமுதாயத்தின் மதிப்பு, மரியாதை, நற்பெயர், கௌரவம் இவற்றைத் தூக்கிக் கடாசும் தைரியம் தேவை.

இப்படி தன் முகமூடியை கிழிப்பவரை பொதுவாக நாம் வெறுப்பது இயல்புதான். ஏனெனில் உண்மையை எதிர்கொள்ளும் துணிவற்றவர்கள் நாம்.

"10 வருடங்களாகக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட மனைவியை வைத்துக்கொண்டு இன்னொரு பெண்ணை ரசிப்பதா?  No.  Never.  நான் ஏகபத்தினி விரதனாக்கும்.  இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்"

என ஒழுக்க வசனம் பேசுபவர்களால் ஓஷோவை நிச்சயமாய்க் கொண்டாட முடியாது. 

அவர்கள் தன் முகத்திரை கிழிந்து தன் உண்மை முகத்தை தரிசிக்க அஞ்சும் கோழைகள்.  தந்திரம் செய்து செய்தே தன் வாழ்க்கையை கழித்து மடிந்து போகும் "தேடிச் சோறு நிதம் தின்று" வகை மனிதர்கள்.

ஆகவே உண்மையை உண்மையாய் தரிசிக்க விரும்புவர்கள் இதுபோன்ற நபர்களிடம் வாதம் செய்து தங்கள் ஆற்றலையும் நேரத்தையும் வீணடித்துக்கொள்ள வேண்டாம்.

RAJAJI JS (05032016)

Wednesday, March 2, 2016

தியானம் செய்யச் செய்ய

தியானம் செய்யச் செய்ய...

அதிசயம் என்னவென்றால் தியானம் செய்யச்செய்ய,

உங்கள் வெளிப்பெருமை, அகங்காரம் முதலியவற்றை விட்டுவிட்டு,

உங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்!”’

அப்பொழுது அன்பு தன்னால் ஏற்படும்.

எந்த முயற்சியும் தேவையில்லை.

அன்பு ஏற்பட நல்ல சூழ்நிலை தியானத்தைத் தவிர வேறில்லை.

தியானம் செய்யச்செய்ய அன்பு செலுத்துதல் என்பது உங்களின் இயற்கைத் தன்மையாகிவிடும்.

அப்பொழுது, நீங்கள் உங்களை மாத்திரமின்றி, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் நேசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.!

---ஓஷோ..ogthoughts

Eye brows. Threading. Dangerous

புருவ முடி திருத்துதல் (THREADING) செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்!

இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக்கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.
இப்போது பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இன்னோர் பழக்கத்தையும் இங்கே விளக்கவே இந்தப் பதிவு!!!!

புருவமுடிகளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்)(THREADING)என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள். புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் பொழுது புருவமுடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும். உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன.

இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது ( த்ரெட்டிங்)(THREADING), கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் (பொட்டுவர்மம் (அல்)சுடரொளியின் காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன.

இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.
இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது. விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர்.

இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன.
வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது.மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன, எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும்.

இறைவன் உறையும் இடம் இதுவே!!!! இதை உணர்ந்து நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான விளக் கெண்ணையை கண் புருவங்களில் தீட்டுவ தானாலும், கண்ணில்இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து, நீட்டித்து, நல்ல பிராணனும், நீண்ட ஆயுள், நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால் இதே போல நற்குழந்தைகளையும் பெற்று நல் ஆரோக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள் .

அனைவரும் அறிய இந்தப் பதிவை பகிரவும்

இலுப்பை எண்ணெய்

இலுப்பை எண்ணெய்

இடுப்பு வலியைப் போக்குவதில் இலுப்பையின் பங்கு மிக அதிகம். இடுப்பில் வலியுள்ள பகுதியில் உளுந்த மாவினால் வரம்பு கட்டி வெதுவெதுப்பாக இலுப்பை எண்ணெய்யை ஊற்றி அரை, முக்கால் மணிநேரம் ஊற வைத்து வர, இடுப்பிலுள்ள வலி குறைந்து அப்பகுதியிலுள்ள இடுப்பு எலும்பு மற்றும் வெளிப்புறம் பிதுங்கியுள்ள வில்லைப் பகுதி மறுபடியும் தன்னிடத்திற்குத் திரும்ப வாய்ப்பிருக்கிறது. இதனால் அதற்கான அறுவைச் சிகிச்சையைக் கூட நம்மால் தவிர்க்க இயலும். இலுப்பை எண்ணெய்யை மூலிகை இலைகளுடன் காய்ச்சி தண்டுவடத்தில் வெதுவெதுப்பாக ஒத்தடமிட்டுத் தேய்த்து வந்தோமேயானால் உடல் பாரத்தினால் ஏற்படும் எலும்புத் தேய்வு குறைந்து முதுகுவலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகளும் தீருமென்கிறது ஓர் ஆயுர்வேதக் குறிப்பு. www.mooligaikadai.com

இலுப்பை எண்ணெய்யைக் கொண்டு எண்ணெய்க் குளியல் செய்து வர நாடி நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியம் பெருகும், மேனி மிருதுவாகும். மனத்தெளிவும், சுறுசுறுப்பும் ஏற்படும். ஆனால் கரப்பான், சொறி, தலை முடி கொட்டுதல் இருப்பவர்களுக்கு ஏற்றதல்ல. சேற்றுப் புண்ணுக்குத் தடவினால் குணமடையும். இதன் எண்ணெய்யை உட்கொள்ளும்போது குடல் வறட்சி நீங்கி மிருதுவாகும். இதனால் ஜீரணக்கோளாறு, புளித்த ஏப்பம், வயிற்றெரிச்சல் போன்றவை கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும், இது மலத்தை இளக்கி வெளியேற்றும். இலுப்பை தாதுக்களை விருத்திபடுத்தும். காசநோய்க்கு நல்ல மருந்தாகவும் பயன்படும். www.mooligaikadai.com

வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில் (வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும். கோடை காலத்தில் வேம்புகளில் பூக்கும் பூக்களிலிருந்து காய்கள்உருவாகி, பழங்களாக பழுக்கும். உதிர்ந்த பழங்களை பொறுக்கி எடுத்து வெயிலில் உலர்த்தி அதன் விதையை எடுப்பர். அவ்விதைகளை அரைக்க எண்ணெய் கிடைக்கும். ஒரு மணமும், கசப்புத்தன்மையும் உடைய இந்த எண்ணெய் மருத்துவக் குணமுடையது. விதைகளை அரைத்த பின் கிடைக்கும் சக்கை வேப்பம் புண்ணாக்கு எனப்படும் இது ஒரு சிறந்த மண்ணுக்கான உரமாகவும் பூச்சிக்கொல்லியா கவும் பயன்படுகிறது.
www.mooligaikadai.com

வேப்பெண்ணெய் பொதுவாக குருதியைப் போன்று சிவப்பு நிறமுடையது. நிலக்கடலை, பூண்டு ஆகியவை இணைந்த ஒரு மணத்தை ஒத்தது. இது பெரும்பாலும் டிரைகிளிசரைடுகள், மற்றும் டிரிட்டர்பெனாய்டு ஆகியவற்றின் சேர்வைகளைக் கொண்டது. இவையே இதன் கசப்புத் தன்மைக்குக் காரணமாகும்.

      கூந்தலின் அழகைக் கெடுப்பதில் பொடுகு மற்றும் பேன்களுக்கு பெரும்பங்கு உண்டு. பேன் ஒருவகையான புற ஒட்டுண்ணி. நமது ரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்ளும் இந்த பேன்கள் மிகவேகமாக இனப்பெருக்கம் செய்து கூந்தலியே www.mooligaikadai.com முட்டையிடுகின்றன. இதனால் அரிப்பும், கூந்தலுக்கு அழகின்மையும் ஏற்படுகின்றன. பேன்களை அழிக்க இயற்கை முறையிலேயே சில மருந்துகளை உள்ளன.

         வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லை குறையும்.

        வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

        வேப்ப எண்ணெய் முகப்பரு குறைக்கிறது

     கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.

கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு வேப்ப எண்ணெய் சிறந்த மருந்து. www.mooligaikadai.com

கருணைக் கிழங்கு

கருணைக் கிழங்கு

    கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள்.www.mooligaikadai.com

         மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும். இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்ளல், அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல், உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மூல நோயில் கருணை காட்டுவதில் கருணைக் கிழங்கு மிகவும் சிறந்தது. ஆசன வாயில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும்.www.mooligaikadai.com

      உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வரவேண்டும்