தவம் – 31
இலட்ச தீப விளக்கோ, சஷ்டியப்த பூர்த்தி விளக்கோ மனதிற்கு கிளர்ச்சியாக இருந்தாலும் ஜீவகாந்தச் செலவு தான்.
ஆகவே விளக்கிற்கு மேல் வைக்காதீர்கள். பெரிய திரியாக போட்டு ‘ஜிகு ஜிகு’ என்று
எத்தனை முறை விளக்கு பார்ப்பது, கண் புதைப்பது, விளக்கு பார்ப்பது, கண் புதைப்பது என்றால் மூன்று முறை.
ஆமாம் அதற்கு மேல் போக வேண்டாம். இன்று ஞாயிற்றுக்கிழமை. வேறு வேலை இல்லை. எனவே ஒரு பதினைந்து முறை செய்து கொள்கிறேன் என்கிறீர்களா? மூன்று முறை என்பதை வேண்டுமானால் ஐந்து முறை என்று வைத்துக் கொள்ளலாம்.
அதற்கு மேல் செய்யாதீர்கள் என்றால் ஜீவகாந்தம் பெருகுவது என்பது ஒரு ‘Saturation Point’-ல் வந்து நின்று போய்விடும். அதற்குப் பின் வெளிச்சத்தை, நெருப்புத் துணுக்கைப் பார்த்து, பார்த்து கண்ணைக் கெடுத்து விடுவீர்கள்.
எவ்வளவு நேரம் விளக்கைப் பார்ப்பது என்றால் ஒவ்வொரு முறையும் ஒரு நிமிடம் பார்ப்பது என்று கணக்கு வைத்திருக்கிறார்கள். ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டிருக்கும்போது கண் எரிச்சல் ஏற்பட்டு விட்டது என்றால் கண் புதைத்துக் கொள்ளலாம்.
சுலபமாகச் சொல்கிறேன். மிரட்டுகிறேன் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த இரண்டு பயிற்சிக்கும் மிரட்டுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் மிரளாதீர்கள் என்று சொல்கிறேன். அதிகமாக கவனித்தீர்கள் என்றால் ‘கேட்ராக்ட்’ வரும். கண்ணில் புரை வரும் அதிகமாகப் போனால்.
’அதிகமாக’ என்றால் அது எவ்வளவு? ஒரு நிமிடத்திற்கு மேல் பார்த்தால் அதிகம். 3 முறைக்கு மேல் பார்த்தால் அதிகம். குளிக்கப் போய் சேறு பூசிக் கொண்ட கதையாகி விடும். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் “அளவில்”.
ஒரு தவறான கருத்து ஒன்று இருக்கிறது. எப்பொழுதும் உண்மைக்கு பலம் குறைவு. ஆனால் பொய் வேகமாகப் பரவும். சீக்கிரமாக தீமை செத்துப் போகும். உண்மை ‘சாசுவதம்’. உண்மையே வெல்லும் என்று சொல்கிறார்கள் நம் நாட்டில்.
ஜீவகாந்தம் விளக்கில் இருந்து ‘ஜிவு ஜிவு’ என்று வருகிறது. பாருங்கள். விளக்கில் இருந்து என்ன வருகிறது. வெளிச்சம் தான் வருகிறது. அப்புறம் ஜீவகாந்தம் எங்கிருந்து வருகிறது? அது தெரியாததால் பல தவறான தகவல்கள் சொல்கிறார்கள். இது வரைக்கும் நாம் விளக்கையே உற்றுப் பார்த்ததில்லை.
விளக்கை பார்க்கும் பொழுது பல வண்ணங்கள், பல ஒளிக்கற்றைகள் சிதறி வருவதைப் பார்த்து ஆஹா… விளக்கிற்குள் ஜீவகாந்தம் பதுங்கி இருக்கிறது. அது நமக்கு வருகிறது என்ற கருத்து ஒன்று இருக்கிறது.
இதை பரப்புகிறவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
வான் காந்தத்தில் இருந்து ஜீவகாந்தம் வருகிறது. எப்படி என்றால் ஒரு இலட்ச தீபம் ஏற்றி வைத்து பார்த்துக் கொண்டு இருக்கலாமே நிறைய வருமே வான்காந்தம்.
சரவிளக்கு என்று வைத்திருக்கிறார்கள் பாருங்கள். அதைப் பார்க்கும் பொழுது என்ன ஆனந்தமாக இருக்கும். அந்த வட்டாரத்தில் நிற்பதே ஆனந்தமாக இருக்கும்.
திருக்கடையூர் போன்ற கோவில்களில் ‘சஷ்டியப்த பூர்த்தி’ நடத்தும் பொழுது தரையில் 60 விளக்குகள் கொளுத்தி வைத்திருப்பார்கள். ஜீவகாந்தப் பெருக்கமா? அது. ஜீவ காந்த இழப்பு. எந்த அளவுக்கு வெளிச்சத்தைப் பார்க்கிறோமோ அந்த அளவுக்கு ஜீவகாந்தத்தை வெளிச்சமாக ‘Convert’ பண்ணி ‘Consume’ பண்ணுகிறோம்.
எரிய விடாதீர்கள். மடியில் வைத்துக் கொள்வது போல் அருகே வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் சில தவறான கருத்துக்களை ஜோடித்துக் கொள்ளாதீர்கள்.
‘இப்படிச் செய்தால் அப்படி வருமே. எனவே அப்படி செய்தால் எப்படி வரும். உங்களுக்கு மேல் இருக்கக் கூடியவர்கள் அல்லது பேராசிரியர்கள் ஒருவருக்கு இருவரிடம் நேரிடையாக கேட்டு சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
ஜீவகாந்தம் விளக்கிலிருந்து வருவதில்லை. அதே போல் ஜீவகாந்தம் கண்ணாடியிலிருந்தும் வருவதில்லை. சில பேர் சொல்வார்கள். கண்ணாடியிலிருந்து வருகிறது. என்னமாக இருக்கிறது. என்ன ஆனந்தமாக இருக்கிறது பாருங்கள் என்பார்கள்.
அப்படியென்றால் நீங்கல் எல்லாம் “Barbar Shop”-ல் Cutting பண்ணப்போகும் பொழுது பார்த்துக் கொள்ளலாம். நூதனமாகச் சொன்னால் பெரியவர்களாக மதிக்கப்படுவார்கள் என்று நினைத்துக் கொண்டவர்கள் உளறியதை எல்லாம் சரி பண்ணிக் கொள்ள வேண்டி இருக்கிறது.
கண்ணாடிப் பயிற்சியில் சில நுணுக்கங்கள் இருக்கிறது. சுத்தமான கண்ணாடியாக இருக்க வேண்டும். அழுக்கு இருக்கக் கூடாது. கறை இருக்கக் கூடாது. தெரிப்பு, கீறல் எதுவும் இருக்கக் கூடாது. குண்டு எதுவும் பட்டு கண்ணாடி பின்னமாகி இருக்கக் கூடாது. அதையெல்லாம் விட முக்கியம் கண்ணாடி 6mm thickness இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment