Friday, January 5, 2018

எளியமுறை #உடற்பயிற்சி

உடல் நலமாக இருக்க எளியமுறை உடற்பயிற்சி செய்ய
வேண்டும்.
தத்துவஞானி
வேதாத்திரி மகரிஷி அவர்கள் வடிவமைத்துள்ள எளியமுறை உடற்பயிற்சியில் பயிற்சிகள் உள்ளன.

அவை:
1) கைப்பயிற்சி
2) கால் பயிற்சி
3) மூச்சுப்பயிற்சி
4) கண் பயிற்சி
5) கபாலபதி
6) மகராசனம்
7) உடலைத் தேய்த்தல்
8) உடலை அழுத்துதல்
    (அக்கு பிரசர்)
9) உடலை தளர்த்துதல்

எளியமுறை  உடற்பயிற்சி  குறிப்புகள்:

1) 8 வயது முதல் 80 வயதுக்கு மேல் வரை உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் எளியமுறை உடற்பயிற்சியைத்
தாெடங்கலாம்; செய்யலாம்.

2) ஒவ்வாெரு நாளும் காலையில் ஒரு வேளை மட்டும் உடற்பயிற்சி
செய்ய வேண்டும்.

3) வெறும் வயிற்றில் பயிற்சி செய்ய வேண்டும்.

4) தரையில் பாய் அல்லது கனத்த விரிப்பு விரித்து, அதன்மீது தான், உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும்.

5) கண்களை மூடிய நிலையில் அனைத்துப் பயிற்சிகளையும்
செய்ய வேண்டும்.
விதிவிலக்காக, கீழ்க்கண்ட பயிற்சிகளை மட்டும் கண்களை இயல்பாகத் திறந்து
வைத்துக்காணெ்டு
செய்ய வேண்டும்.
🌹கைப்பயிற்சி நிலை 1.6
🌹கண் பயிற்சிகள் முழுவதும்
🌹மகராசனம் 2ஆம் பகுதியில் நிலை -6.2.7

6) கண்களை மூடிய நிலையில் உடலில் எங்கு அசைவு
நடைபெறுகிறதாே அங்கு மனதைச் செலுத்த வேண்டும்.

7) அசைவுகள் நிதானமாகவும்,
மென்மையாகவும் இருக்க வேண்டும். எவ்வித அவசர
அசைவுகளுக்கும் வேக உணர்வுக்கும் இடம் காெடுக்காமல் பயிற்சிளைச் செய்ய வேண்டும். இப்பயிற்சியில் வியர்வை வராது.

8) எல்லாப் பயிற்சிகளையும் 30 நிமிடங்களில்
செய்து முடிக்கலாம்.

9) எல்லாப் பயிற்சிகளையும்
செய்து முடித்த பிறகு சிறிதளவு தண்ணீர் அல்லது நீர்ம உணவு அருந்தலாம். பயிற்சி முடிந்து 15 நிமிடங்களுக்குப் பிறகு எந்த உணவும் உண்ணலாம்.

10) மாலையில் பயிற்சி செய்வதாக இருந்தால், கடைசியாகச் சாப்பிட்டது கடின உணவானால், சாப்பிட்ட 4 மணி நேரத்திற்குப் பிறகு
இப்பயிற்சிகளைச்
செய்யலாம்.
கடைசியாகக் குடித்தது காபி, தேநீர், முதலிய நீர்ம உணவானால், குடித்த அரை மணி
நேரத்திற்குப் பிறகு இப்பயிற்சிகளைச்
செய்யத் தாெடங்க
வேண்டும்.

11) அறுவை சிகிச்சை செய்து காெண்டவர்கள், சிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் கழித்துதான் இப்பயிற்சிகளைத்
தாெடங்க வேண்டும்.

12) குடல் இறக்கம், இதய நாேய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், காது சம்பந்தப் பட்ட
நாேய்கள் உள்ளவர்கள் கபாலபதி பயிற்சி செய்ய வேண்டாம்.
மற்ற எல்லாப் பயிற்சிகளையும்
மெதுவாகச் செய்ய
வேண்டும்.

13) இதய நாேய் உள்ளவர்கள் எளியமுறைக் குண்டலினி
யாேகத்தில் தேர்ச்சி
பெற்ற ஆசிரியரின் ஆலாேசனைகளைப் பெற்று அவற்றின்படி பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

பெண்களுக்கு  உரிய  குறிப்புகள்:

1) மாதவிடாய் காலத்தில் பெண்கள் இப்பயிற்சிகளைச்
செய்ய வேண்டாம்.

2) கருவுற்ற பெண்கள் கீழ்க்கண்ட பயிற்சிகளைச் செய்யக்கூடாது:
• மூச்சப் பயிற்சிகளில் வஜ்ஜிராசனத்தில்
செய்யக்கூடிய நிலை
3.1 & 3.2 வேண்டாம்.
• மகராசனம் முதல் பகுதி, இரண்டாம் பகுதி முழுவதும் வேண்டாம்.
மற்ற எல்லாப் பயிற்சிகளையும் பேறு காலம் வரையில்
செய்யலாம்.

3) உடல் நலம் சீராக இருந்தால், பேறு காலத்திலிருந்து மூன்று மாதங்கள் கழிந்த பிறகு, எல்லாப் பயிற்சிகளையும்
செய்யலாம்.

4) அறுவை சிகிச்சை (சிசேரியன்)
செய்திருந்தால் சிகிச்சை முடிந்து ஆறு மாதங்கள் கழித்து இப்பயிற்சிகளைச்
செய்யலாம்.
[1/4, 5:26 PM] ‪+91 88257 94244‬: கேள்வி:  கோபம் என்பது என்ன ?

சிக்கலான சந்தர்ப்பங்களில் பொறுப்போடும் அதே சமயம் சாந்தமாகவும் ஒன்றிணைந்தவனாகவும் இருப்பது எப்படி ?

ஓஷோவின் பதில்:

கோபத்தின் மனோதத்துவம் என்னவென்றால் நீ எதையாவது விரும்புகிறாய், நீ அதை பெறுவதற்கு யாரோ தடையாக இருக்கிறார்கள், நீ அதை பெறுவதை தடுக்கிறார்கள், ஒரு தடங்கலாக இருக்கிறார்கள்.

உனது சக்தி முழுமையும் ஒன்றை பெறவிரும்புகிறது, யாரோ அந்த செயலை தடுக்கிறார்கள்.

நீ விரும்பியதை பெற முடியவில்லை. அந்த விரக்தியடைந்த சக்தி கோபமாக மாறுகிறது.

உன்னுடைய ஆசை பூர்த்தியடையக் கூடிய சாத்தியக்கூறை அழித்த மனிதர் மேல் கோபம் வருகிறது.

உன்னால் கோபத்தை தடுக்கமுடியாது. ஏனெனில் கோபம் ஒரு தொடர் விளைவு, பின் விளைவு. ஆனால் அந்த பின் விளைவு நிகழாமல் இருக்க நீ ஏதாவது செய்யலாம்.

வாழ்வில் ஒன்றை மட்டும் நினைவில் கொள். வாழ்வா சாவாஎன்ற கேள்வி வரும் அளவு எதையும் ஆழ்ந்து விருப்பப் படாதே.

சிறிது விளையாட்டுத்தனமாகவும் இரு.

விருப்பப் படாதே என்று நான் சொல்லவில்லை – ஏனெனில் அந்த ஆவல் உன்னுள் அழுத்தப்பட்டுவிடும்.

விருப்பம் கொள், ஆனால் அதைப்பற்றி சிறிது விளையாட்டுத்தனத்தோடு இரு என்றுதான் சொல்கிறேன்.

கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் பரவாயில்லை, அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் .

விளையாடுபவர் போல இருந்து பழக வேண்டும். நாம் நமது ஆசைகளுடன் ஒன்று பட்டு விடுகிறோம்.

அதுதடைபடும்போது அல்லது தடுக்கப்படும்போது நமது சக்தியே தீயாகி விடுகிறது.

அது உன்னை எரிக்கிறது. அந்த நிலையில் கிட்டத்தட்ட மனம் தடுமாறிய நிலையில் நீ என்னவேண்டுமானாலும் செய்வாய் – பழி வாங்குவதற்காக.

உன்னுடைய வாழ்வு முழுவதும் தொடரக்கூடிய சங்கிலி தொடர் நிகழ்ச்சிகளை அது உருவாக்கும்.

நீ கோபத்தை அடக்க முயலாதே!

கோபத்தின் வேர்களுக்கு செல்.

ஏதோ ஆசை தடைப்பட்டு, நிறைவேறாமல் உள்ளது. அந்த விரக்தி தான் கோபத்தை உண்டாக்குகிறது.

இதுதான் அதன் ஆணி வேராக இருக்கும்.

இது ஒருமுறை உன் இருப்பில் உரைத்து விட்டால் பின் எல்லாமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும்.

கோபம் மறைந்து விடும், அப்படி அது மறைவது உனக்கு ஒருபுது ஆச்சரியமாக இருக்கும் ஏனெனில் கோபம் மறையும் போது அது அதன்பின் கருணையும் அன்பும் நட்பும் நிறைந்த அளவற்ற ஆற்றலை விட்டு செல்லும்.

~~ ஓஷோ ~~

No comments:

Post a Comment