*💓்💓*:
✨⚡✨⚡✨⚡✨⚡
நமக்கு ஒரு பதினைந்து வயது இருக்கும் போதே மூலாதாரத்திற்கு ஆற்றல் வந்து விடுவதால்
நாம் முழுமையாய் தவம் கற்கும் காலம் வரை அங்கேயே (தாய்வீடு) இருந்ததால் புது இடத்திற்கு போனால் ஆக்கினை, துரியம்.இன்னும் பிற தவங்கள் மனதில் (உயிரில்) பதிகிறது . வழக்கமாய் அங்கேயே இருப்பதால் சாந்தி தவத்தின் போது நாம் அங்கேதான் இருக்கிறோம். புது இடம்போல் பழகிய இடம் தோன்றாது.
யோகசாதனையின் ஆற்றல் மிகுதியின் காரணமாகவோ, உணவின் காரணமாகவோ, ஆராய்ச்சியின் காரணமாகவோ, அல்லது கோள்களின் நிலை காரணமாகவோ, தவக்கனல் மிகுந்தால், அதை உடனடியாக உணர்ந்து, தணித்துக் கொள்ளவும், அந்த தவக்கனலின் மிகுதியை உடல் நலனுக்கும், உள்ளத்தின் நலனுக்கும் பயனாக்கி கொள்ளவும் சாந்தி தவம் உதவுகிறது.
சாந்தி தவத்தினால் உடல் வெப்பம் தனியும், நரம்பு மண்டலம் அமைதி அடையும். தவத்தின் போது முழுமையான அனுபவம் ஏற்படும். உடலுக்கு மூலப்பொருளான வித்துக் குழம்பு பால் சுரப்பியில் தேங்கி கிடப்பதால் சாந்தி தவத்தால் தவ ஆற்றல் உடல் ஆற்றலாக மாறும்.
நாம் சாந்தி தவத்தை முழுமையாக செய்தால் முதலில் கண்கள் குளிர்ச்சி பெரும்.
1 .சாந்தி தவத்தால் நிலத்தை சார்ந்த ஆராய்ச்சி பற்றிய அறிவு அதிகமாகிறது.
2 .உடல் வலி, காய்ச்சல், அசீரணம் போன்ற நோய்கள் நீங்குகின்றன.
3 .உடலில் உயிரின் இயக்கம் சீராகிறது.
4 .உடல் சக்தி மனோ சக்தியாகவும், மனோ சக்தி உடல் சக்தியாகவும் மாற்றி பயன் பெறலாம்.
ஆரம்ப பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வேளை சாப்பிட்ட பிறகும் மூன்று நிமிடம் மூலாதாரத்தை கவனிக்க வேண்டும். இதற்கு உட்கார்ந்து தவம் செய்ய வேண்டும் என்பதில்லை. சாப்பிட்டு முடித்தபின் அடுத்த அடுத்த காரியங்களை பார்த்துக்கொண்டே, நினைவை மட்டும் மூலதாரத்தில் வைத்திருக்க வேண்டும்.
மூலதாரத்திளிருந்து உணர்வு மேலெழுப்பப் பெற்ற உணர்வாளர்களுடைய உயிர் ஆற்றலானது சில சூழ்நிலைகளுக்கு உள்ளாகும் போது சிதைவையும் , இழப்பையும் ஏற்க வேண்டி வரும். அவை :
1 . மாத விலக்கில் இருக்கும் பெண்களின் அருகாமை
2 . நாயின் அருகாமை
3 . பன்றியின் அருகாமை மற்றும்
4 . பிணத்தின் அருகாமை. பிணத்தில் பக்கத்தில் போக கூடாது.
ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், இந்த மாதிரி சீவ காந்த சிதைவு நிலைகளை எதிர் கொள்ள வேண்டி வரும் போது நாம் சாந்தி யோகத்தில் இருந்து கொண்டால் சீவ காந்த சிதைவு ஏற்படாது.
சீவ காந்த சிதைவு என்பது நாய், பன்றி, பூனை, ஆந்தை, கோட்டன் , வவ்வால் போன்ற உயிரினங்களில் உண்டு. அதை வளர்ப்பதிலும் , தொடுவதிலும் , யோகிகள் தவிர்த்தே ஆக வேண்டும்.
சீவகாந்த உறுதிநிலை அருகம்புல், வேம்பு, துளசி, பசு, யானை, மயில், மான், குழந்தை, , நவரத்தின கற்கள், வெள்ளி, பொன், பெண்களிடத்திலும் அதிகம் இருக்கும்.
முகத்திலோ, கண்ணிலோ சூடு தெரியலாம். ஜூரம் வரலாம். வயிற்று வலி, வயிற்று பொருமல் போன்ற உஷ்ண வியாதிகள் வரலாம். அப்படி வந்து விட்டால், உடனடியாக சாந்தி யோகம் கொடுத்து விட வேண்டும்.
சாந்தியை பல காலம் செய்வதால் எந்தப் பிரச்சினையும் வராது.
மனதையும், உடலையும் அமைதி படுத்துவதால் தான் அதற்க்கு சாந்தி தவம் என்றே பெயர்.
சாந்தி தவம் செய்வதால் உடல் குளிர்ச்சி அடையலாம் .
உடல் செல்களின் காந்த துருவ இணைப்பு ஒரு ஒழுங்குக்கு வரும். நிலைக்கும்.
இதனால் நாள் பட்ட கர்ம நோயும் தீரும்.
கர்ம நோயை எதிர்க்க சாந்தி யோகம் செய்வதென்றால் தொடர்ந்து செய்து வர வேண்டும். தினந்தோறும் செய்ய வேண்டும். இரண்டு வேளையும் செய்து வர வேண்டும். மூன்று மாதம் செய்து வர வேண்டும். அதற்குள் அந்த நோயை அகன்று விடும். இல்லையென்றால் இன்னும் மூன்று மாதம் நீடித்து கொள்ள வேண்டும். இக்காலகட்டத்தில் மேல்தவம் எதுவும் செய்யக் கூடாது.
மூலாதாரம் மண்ணுக்குரிய மையமாகையினால்,
சப்த தாதுக்களில் மண்ணுக்குரிய வித்துவின் உற்பத்தி அதிகமாகும்.
அதனால் பால் உணர்வுகள் கூடுதலாகும்.
பால் உறவில் வல்லமை கூடும்.
இவற்றை சமாளித்து கொள்ள கூடிய அறிவு பலமும்,
குணசிறப்பும் ஏற்கனவே பெற்றிறுக்க வேண்டும்.
பால் உணர்வில் வல்லமை இன்மையை போன்ற
பலகீனகங்களையும் இந்த தொடர்ந்த சாந்தி யோகம் சரிப்படுத்தும்.மலட்டு தன்மை கூட சாந்தி யோகம் சரிப்படுத்தும்.
பால் உணர்வு கருவிகளுக்கு பக்கத்தில் மூலதாரம் இருப்பதால், பால் உணர்வு வெறியும் தவம் தொடர்ந்து செய்வதால் உண்டு பண்ணக் கூடும்.
சாந்தி யோகத்தால் பெரிய நன்மைகளையும் உண்டு
பண்ணிக் கொள்ளலாம் அல்லது கஷ்டங்களை நீக்கிக் கொள்ளலாம்.
*💓வாழ்க வளமுடன்💓*
No comments:
Post a Comment