Tuesday, January 30, 2018

சதாசிவ பிரம்மேந்திராள்

நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் (அதிஷ்டானம் )ஜீவ சமாதி
ஓம் ஸ்ரீஸதாசிவ பிரஹ்மணே நம; நம் நாட்டில் பல யோகிகளும்
சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் பல பெற்ற புண்ய பூமியாகும்.
கரூர் மாவட்டம் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில்
காவிரிக்கரையின் அருகே உள்ள நெரூர் என்னும் ஊரில் ஸ்ரீ சதாசிவ
பிரம்மேந்திராள் அவர்களின் அற்புத ஜீவசமாதி அமைந்துள்ளது.

நெரூர்சதாசிவம் திருக்கோவில் என்று கேட்டால் கருர் பஸ் நிலையத்தில் இருந்தே பஸ்கள் உள்ளன. பரமசிவேந்திராள் என்ற குருநாதர் சிவராமகிருஷ்ணன் என்ற இயற்பெயரை மாற்றி சதாசிவம் என்னும் பெயர் சூட்டி சந்நியாசம் கொடுத்துஅனுப்பி வைக்க குருவின் உபதேசப்படி அதிகம் யாரிடமும் பேசாமல் நெரூரில் நீண்ட காலம் வாழ்ந்து வந்துள்ளார் .

பல அற்புதங்களை சித்துகளை செய்த அற்புதமான மகான் . ஸ்ரீ சதாசிவ பிரம்மம் தமது ஜீவசமாதி அமைக்க சீடர்களான தஞ்சாவூர்,புதுக்கோட்டை, மைசூர் மகாராஜாக்களை அழைத்து "குகை அமைத்து சாமக்கிரியைகளால் மறைத்து விடுங்கள்" என்றார் .

அவர் சொன்னமுறைப்படி ஜீவசமாதி குகை அமைக்கப்பட்டது.ஸ்ரீ சதாசிவ பிரம்மம்அங்கிருந்த சீடர்களை அழைத்து "நான் ஜீவசமாதி ஆக இந்த குகையில்இறங்கிய பின்பு விபூதி,உப்பு,மஞ்கள் ,செங்கற்பொடி போட்டு குகையை மூடிவிடச்சொன்னார் .

பின் 9 ஆம்நாள் எம் சிரசின் மேல் வில்வமரம்
முளைக்குமென்றும் ,1 2 ஆம் நாள் காசியில் இருந்து சிவலிங்கம் வரும் அதை
எம் ஜீவசமாதியில் இருந்து12 அடிக்கு முன்னதாக கிழக்கில் கோவில்
கட்டசொல்லிவிட்டு ஜீவ சமாதி அடைய குகைக்குள் சென்று அமர்ந்து விட்டார் .

சீடர்கள் குருவின் உபதேசம் கேட்டு பின் குகையை மூடிவிட 8 ஆம் நாளில்
வில்வம் துளிர்விட 12 ஆம் நாள் காசியிலிருந்து சாது ஒருவரின் மூலம்
சிவலிங்கமும் வந்து சேர்ந்த அற்புதம் நடந்தது .

திருக்கோவில் 220ஆண்டுகாலமாக பலரால் மெருகேற்றப்பட்டு ஸ்ரீ சதாசிவபிரம்மத்தின் ஜீவசமாதியுடன் அமைதியாய் இன்றும் வரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம்அளித்துக்கொண்டிருக்கிறது.

சித்தர்களை தேடி சித்தர்களின் ஜீவசமாதிகளை
தேடி பயணிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் அமைதியையும் , இருட்டிலே
பயணிக்கும் வாழ்க்கையை வெளிச்சமாக்கும் அருமையான ஸ்தலம் . ஸ்ரீ
சதாசிவபிரம்மேந்திராளை தேடி வாருங்கள் .

கரூர் அருகே 12 கி.மீ தொலைவில் உள்ள
நெரூரில் ஸ்ரீ சதாசிவபிரம்மேந்திராள்ஜீவசமாதியை பற்றி சென்ற பதிவில்
பார்த்தோம் . அந்த பதிவை படிக்காதவர்கள் அதையும் படித்து வரவும் .

ஸ்ரீ
சதாசிவ பிரம்மம் கொடுமுடி அருகேயுள்ள அகத்தியம்பாறை என்னும் இடத்தில் தவம் செய்து கொண்டு இருந்தபோது காவிரியின் திடீர் வெள்ளம் இவரை உருட்டிச்சென்று மண்ணில் புதைத்து விட்டது .

காவிரியின் சீற்றம்
அடங்கியதும் சதாசிவ பிரம்மத்தை சீடர்களும் ,மக்களும் தேட கிடைக்கவில்லை.

பல காலம் கழித்து கட்டிடம் கட்ட மணல் தோண்ட வந்தவர்கள் ஆழமாக தோண்ட மண்வெட்டி புதைந்திருந்த சதாசிவ பிரம்மத்தின் தலையில் பட்டு காயமாகி ரத்தம் வந்ததும் மணல் எடுக்க வந்தவர்கள் ஓடிப்போய் ஊர் பெரியவர்களைகூட்டி வந்து சுற்றிலும் மணலை எடுத்து சதாசிவ பிரம்மத்தை உடம்பு சுத்தம் செய்து விட யாரிடமும் பேசாமல் அமைதியாக நடந்து சென்றாராம் .

அடுத்ததாக புதுக்கோட்டை பகுதியில் சதாசிவபிரம்மம் நெற்கதிர் நிலங்களுக்கிடையே நடந்து சென்று கொண்டு இருந்தாராம் . அப்போது வைக்கோல் போர்அடுக்கும் வேலை நடந்து கொண்டிருக்க , அடுக்கிக்கொண்டிருந்த வைக்கோல் போர்களுக்கிடையே சதாசிவ பிரம்மம் விழுந்து விட்டாராம் .

வைக்கோல் போர்
அடிப்பவர் சதாசிவ பிரம்மத்தை கவனிக்காது அவர் மேலேயே வைக்கோல் போரைஅடுக்கி பெரிய வைக்கோல் போர் ஆகி விட்டது.

சதாசிவ பிரம்மம் கீழே கிடக்க பல அடி உயரத்திற்கு வைக்கோல் போட்டு விட்டனர் .ஒரு வருடமாக பசுக்களுக்கு  வைக்கோல் போட படிப்படியாக குறைந்த வைக்கோல் போரில் இருந்து சதாசிவ பிரம்மம் எழுந்து நடக்க அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர் .

இந்த விஷயம் மந்திரியின் காதுக்கு சென்று பின் அரசன் விஜயரகுநாத தொண்டைமானிடம் சென்றது.

அவரும் சதாசிவ பிரம்ம் இருக்குமிடத்தை வந்து 8 வருடமாக மன்னர் காத்திருந்து பின் மன்னரின் பொறுமையை அறிந்துசதாசிவ பிரமம் மணலிலேமந்திரத்தை எழுதிக்காண்பிக்க அதை மனனம் செய்து அந்த மணலை தன் அங்கவஸ்திரத்தில் எடுத்துச்சென்று அரண்மனையில் பூஜை செய்யதொடங்கினாராம் .

அந்த பூஜை இன்றும் புதுக்கோட்டை அரண்மனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.கரூர் தான் தோன்றிமலையில் ஸ்ரீ வெங்கடாசலபதி சிலையை வணங்கி ஜன ஆகர்ஷ்ண
சக்கரம் எழுதி பூஜை செய்து அங்கு அமைத்து

"வறுமையால் திருப்பதி
செல்லமுடியாத பக்தர்கள் தான்தோன்றி மலையப்பரை வணங்கினால் திருப்பதி சென்று வந்ததிற்கு ஈடாகுமென அருளிச்சென்றார் .

தன் நிலை மறந்தவாறு உடையில்லாமல் இறை தியானத்தில் அரசன் கொலு பட்டறையின் வழியே நடந்து செல்ல கோபப்பட்டு மன்னர் சதாசிவ பிரமத்தை அறிந்திராமல் அவரின் கையை வெட்டி விடகை துண்டானது கண்டு கொள்ளாமல் திரும்பி நடக்க மன்னர் மன்னிக்க வேண்டி
கேட்டு நிற்க வெட்டிய கையை ஒட்ட வைத்து நடந்து சென்றாராம் .

இப்படி பல அற்புத சித்துக்களை நிகழ்திய ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் கடைசியாக நெரூர் வந்து ஜீவசமாதி அடைந்து தம்மை நாடி வருகிறவர்களுக்கு ஆசியையும்
நன்மையையும் அளிக்கிறார் .

ஸ்ரீசதாசிவம் ஜீவசமாதி அடைந்த அதே நாளில்
மானாமதுரையில் வைகை ஆற்றங்கரையில் மானாமதுரை சிவன் கோவில் பின்புறம் ஸ்ரீ சதாசிவர் சூட்சமசரிரமாகவூம் , கராச்சியில் காரணசரீரமாகவும் ,நர்மதா நதி ஓம்காரம் என்ற இடத்தில் அங்கேயும் ஜீவசமாதியானதாக கருதப்படுகிறது.

காசியிலும் ஸ்ரீ சதாசிவம் ஜீவசமாதி ஆகியுள்ளதாக அறியப்படுகிறது.
சித்தர்கள் பலர் பல முகமாக காட்சி கொடுத்து ஒருவரே பல இடங்களில்
ஜீவசமாதியானதாக அறிகிறோம் .

அவ்வகையில் பல அற்புதங்கள் செய்த ஸ்ரீ
சதாசிவ பிரம்மேந்திராள் மட்டும் விதிவிலக்கன்று. வாய்ப்பு கிடைக்கும்
போது தரிசனம் செய்யுங்கள்

Saturday, January 27, 2018

நம் உடம்பு ஓர் அருள் மாளிகை !

நமது உடம்பு ஒரு தெய்வீக நகரம்.அந்த நகரத்தில் இல்லாத்து எதுவும் இல்லை.

அந்த நகரத்திற்கு அருள் மாளிகை வீடு என்று பெயர்.அந்த வீட்டின் நடுவில்(தலைபாகம்) அழகான மேடை ஒன்று இருக்கிறது.அந்த மேடையின் மேலே ஓர் அழகான மூடிய தாமரை மொக்குப் போன்ற மலர் இருக்கின்றது. அதன் நடுவில் தான் ஆன்ம ஒளி அமர்ந்து கொண்டு .இந்த உடம்பு என்னும் மெய் மாளிகையை இயக்கிக் கொண்டு உள்ளது.

மெய் இருப்பதால் உடம்பிற்கு மெய் என்று பெயர்...

அந்த மலரின் நடுவில் இருக்கும் ஆன்மாவைத் தெரிந்து கொள்ள உலகில் எத்தனை வேறுபாடுகள்.குழப்பங்களை சமய.மதங்கள் உருவாக்கி உள்ளன.

அந்த சிறிய இடத்தில் தான் ஆன்மா தனித்து இயங்கிக் கொண்டு இருக்கின்றது.அந்த இடத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டு பிடிப்பது தான்மனித இனத்தின் ஆனமீக வாழ்க்கை.

அகத்தில் தேடாமல் புறத்தில் தேடுவது ஆன்மீகம் அல்ல !

அதை மனிதன் அறிந்து கொள்ள வேண்டியதே சிறந்த வழியாகும்.சிறந்த அறிவாகும்.

இந்த உலகமோ விசாலமானது.நமது இதயமோ சிறியது.அந்த சிறிய இதயத்தில் உள்ள இடமோ.உலகம் போல விசாலமாக விரியும் தன்மை உடையது.அதாவது தெய்வீகத் தன்மை உடையது.

இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் நம் சிறிய இதயத்துள்ளே அடங்கி இருக்கிறது.அந்த சிறிய இடத்தில் பூமியும்.தண்ணீரும்.நெருப்பும்.காற்றும்.ஆகாயமும்.

சூரியன்.சந்திரன்.நட்சத்திரங்கள். மற்றும் கிரகங்களும்.இடியும்.மின்னலும்.மழையும்.கோடானுகோடி அணுக்களும்.மற்றும் எல்லாவற்றையும் நம் இதயம் என்ற வீட்டிற்குள்ளே காணலாம்.

மனித உடம்பான அருள் மாளிகையில் அமர்ந்து இருக்கும்.தனித்தலைமைப் பெரும்பதியான ஆனமாவைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றும்.வழியைக் காட்டுவது தான்.வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க பெரு நெறியாகும்.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியில் குழப்பம் இல்லாமல் பின் பற்றுபவர்கள் மட்டுமே அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும். ஒளி தேகத்தைப் பெறமுடியும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற முடியும்.உடம்பை அருள் மாளிகையாக மாற்றிக் கொள்ள முடியும். அதற்குப் பெயர்தான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்..

வள்ளலார் பாடல் !

திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டுவருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்துவல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவேகருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.! 

என்று உண்மையை எடுத்து சொல்லுகின்றார் வள்ளலார்.

நாம் அனைவரும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பெருநெறியை.உண்மை நெறியை பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

கலியுகத்தில் நாட்டு நடப்பு எவ்வாறு இருக்கும

"".""?!??

என்று கோரக்கர் மட்டுமல்லாது, நந்திதேவர், சினேந்திரமாமுனிவர் முதலான பல சித்தர்கள் பாடியிருப்பதாக நாம் அறிவோம் .

இப்பொருள் பற்றி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1604-1693) தெலுங்கு தேசத்தில் வாழ்ந்த ஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள் என்பார், "சாந்திர சிந்து" என்னும் வேதமாகிய "காலக்ஞானம்" என்னும் தீர்க்கதரிசனத்தை 14,000 ஒலைச் சுவடிகளில் தெலுங்கு மொழியில் இயற்றி, அதை அவர் தங்கியிருந்த பனகானபள்ளி என்ற ஊரில் ஒரு புளிய மரத்தின் அடியில் புதைத்து வைத்துவிட்டு, அதில் கண்ட விஷயங்களை மக்களுக்குப் போதித்து வந்தார்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெலுங்கு மொழியில் தோன்றிய நூல்களில், அவர் கலியுகத்தின் தன்மை பற்றிக் கூறிய தீர்க்கதரிசனங்கள் இடம்பெற்றுள்ளன.

தெலுங்கு மொழியிலிருந்து திரு. டி.எஸ்.தத்தாத்ரேய சர்மா என்பவர் தமிழாக்கம் செய்து "ஜெகத்குரு வீரபிரம்மேந்திர சுவாமிகள் வாழ்க்கைச் சரித்திர தத்துவம்" என்ற தலைப்பிலும், ஜே.ராவுஜி என்பவர் "காலக்ஞான தத்துவம்" என்ற தலைப்பிலும் வெளியிட்டுள்ளனர்.

திரு. தத்தாத்ரேய சர்மா என்பவரின் நூலில் பக்கம் 33,41, 67, 68, 100-3 கண்ட தீர்க்கதரிசனங்களைக் காண்போம்.

1. ஆணுக்குப் பெண் வித்தியாசமற்று தோற்றத்திலும் செயலிலும் ஒன்றுபட்டுப் போகிறது.

2. தாய்தந்தையர்கள் ஆண் மக்களை நம்பாது பெண் பிள்ளைகளை நம்புவர்.

3. பெண்களின், தூய்மை,  பெண் தன்மை மாயவசத்தால்  அழிந்து போகும்.

4. ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெடும்.

5. அரசே பெண்களின் கருச்சிதைவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்.

6. விதவை மறுமணம் செய்து கொள்வாள்.

7. மகன் தந்தையையும், தந்தை மகனையும் மோசம் செய்வர்; பந்த பாசங்கள் அற்றுப் போகும்.

8. தன் மகளின் கற்பை தந்தையே சூரையாடுவன்.

9. கணவனை நிந்தித்து துன்புறுத்தும் மனைவியும், பெற்ற தாய் தந்தையரைப் பேணாத மக்களும் பெருகிவிடுவர்.

10. பெற்ற மக்களையே விற்றுப் பிழைக்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படும்.

11. அழகுடைய மங்கையர் விலைபொருளாகி விற்பனைக்கு உள்ளாகுவர்.

12. திருமணங்கள்,குலம் கோத்திரமின்றி நடைபெறும். அதற்கு அரசே ஆதரவு அளிக்கும்.

13. உயர்குலப் பெண்கள் நாட்டியம், பாட்டு, கச்சேரி,   புகைப்படம் என்ற மோகத்தில் கெட்டழிவர்.

14. தெய்வ நம்பிக்கை தளர்வடையும்.

15. தெய்வ வழிபாடு செய்வோருக்கு தரித்திரம் மிகுதியாகும்.

16. குலத்தொழில்கள் மாறுபடும்.

17. ஆலயங்களில் கள்ளத்தனம் நிறையும்.

18. ஆலயங்களில் பிராமணர்களுக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட குலத்தோர் அர்ச்சகர்களாக மாறுவர்.

19. சைவர்கள் வேத சாரத்தை விட்டு விலகுவர்; மாமிசம் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளுவர்.

20. சாத்திரங்கள் பொய் என வாதிடப்படும்.

21. வேதங்களின் பொருள் மாற்றமடையும்; (வேதங்களில் எத்தனையோ இடைச் செருகல்கள் ஏற்பட்டு விட்டன என்பது சரித்திரம் கண்ட உண்மை.)

22. வேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.

23. திருப்பதி ஆலயச் செல்வங்கள் திருடிச் செல்லப்படும்.

24. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி , காசி விசாலாட்சி சாமி சிலைகளில் கண்ணில் கண்ணீர் வரும்.

25. காசியிலுள்ள கங்காநதி கானாமல் போகும்.

26. எல்லா சிவலிங்ககளிலும். வியர்வை உண்டாகும்.

27. திருப்பதி கோவிலில் முதலை புகுந்து அதனால் பூஜைகள் மூன்று நாட்கள் தடைப்படும்.

28. காளஹஸ்தி  சுவர்ணமகி ஆற்றில்  அதிசியம் தோன்றும்

29. காளஹஸ்தி  கோபுரங்கள்  சேதமடையும்.

30. புண்ணிய சேத்திரம் நதி தீர்த்தம் போன்ற இடங்களில் மக்கள் வியாபாரிகளாலும் புரோகிதர்களாலும் ஏமாற்றப்படுவர்.

31. அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.

32. முஸ்லீம்களின் ஆதிக்கமும் அரசும் பாதிப்படையும்; வஞ்சனைகள் தலைதூக்கும்.

33. புதுவித அரசியல் அமைப்புகள் ஏற்படும்; தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு அதன் காரணமாக மக்களின் நிலை சீர்கெட்டுப் போகும்.

34. மனிதன் பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான். ஆனால், அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.

35. நிழற்படங்கள் அசைந்தாடும்; அது தர்மவழிகளை அழிக்கும்.

36. குதிரை, மாடுகள் வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக இயந்திர வாகனங்களும் அதிதுரிதப் போக்குவரத்தும் நடைபெறும்.

37. இயந்திரங்கள் நன்மைக்காக அறிவின் பலத்தால் பெருகிடினும், மனிதன் மனிதனாக இல்லாது இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.

38. இவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.

39. உண்மைகள் பொய்யாகும்; பொய்மைகள் உண்மையாகத் தோன்றும்.

40. நல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகின் கண் தீமைகளுக்கே முதலிடம் அளிக்கப்படும்.

41. பொருளாசை மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்.

42. மனிதருள் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.

43. ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.

44. சாந்தம் குறையும்; கோபம் அதிகரிக்கும்.

45. கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.

46. போதைப் பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.

47. உணவுப் பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும்.

48. கண்பார்வை மிகையாக கெடும்.

49. எண்ணற்ற நோய்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களை அழிக்கும்.

50. மக்களின் சராசரி வயது குறையும்.

51. செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் போன்ற பொருட்களுக்குத் தங்க  முலாம் பூசப்பட்டு அவை தங்கம் என்று மக்களிடம் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்ற நிலை ஏற்படும்.

52. முன்னேற்றம் உள்ளது போல் தோன்றினாலும் மனிதனின் குணங்கள் விகாரப்பட்டு அழிவை தனக்குத்தானே தேடிக் கொள்வான்.

53. மூன்று தலைகொண்ட பசுங்கன்று ஜனிக்கும். அதற்கு இரண்டு யோனிகள் இருக்கும். அவைகளில் ஒன்று மனிதத் தன்மை கொண்டதாக இருக்கும்.

54. நமது பாரத தேசம் இரண்டாகப் பிளக்கப்படும்; பிறகு அது மூன்று பாகங்களாகும்.(இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம்)

55. வங்காள தேசம் என்னும் பிரிவு, பல உயிரிழப்பிற்கும், புயலுக்கும், பெருவெள்ளத்திற்கும் ஆளாகும். மக்களின் சேதம் மிகையாகும்.

56. பாரத தேசத்தில் மக்களின் ஜனத்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகிவிடும். அப்போது ஜனத்தொகையைக் குறைக்க அரசு செயல்படும்.

57. இவ்வுலகில் பல பாகங்களில் பூகம்பங்களும் விஷ சக்திகளும் ஏற்பட்டு பெரும் அழிவும் உயிர்ச் சேதங்களும் ஏற்படும்.

58. இயற்கையின் பருவகாலங்கள் நிலைகெட்டுப் போகும்; பருவங்கள் கடந்து மழை பொழியும்.

59. இயற்கை வளங்கள் எல்லாம் விஷக்காற்றால் அழிவு பெறும்.

60. நிலமகளிடம் ஆழ்ந்திருக்கும் செல்வங்கள் மக்களின் சுக போகத்திற்கு வெளிக்கொணரப்படுவதால் நிலமகள் பலமிழந்து நிலநடுக்கங்களும், பெருத்த பூகம்பங்களும் ஏற்படும். எரிமலை வெடித்து உலகை அழிக்கும்.

61. கலியின் முடிவு பிரளயமாகி உலகே அழியும். அதன் காரணமாகப்  பெருவெள்ளங்கள் தோன்றி ஊரையும் மக்களையும் அழிக்கும்.

62. பகலில் நட்சேத்திரம் தோன்றும். இதனால் மக்களுக்கு சேதாரம் உண்டாகும்.

63. பசுவின் கருவில் மனிதன் பிறப்பான் அவன் மக்களிடையே ஆண்டவனைப் பற்றி விவாதம் செய்வான்.

64. ஒரு முட்டையிலிருந்து இரண்டு குஞ்சுள் வெளிவரும்.

65. யானை வயிற்றில் பன்றி முகத்தோடும், பன்றி வயிற்றில் குரங்கு முகத்தோடும், குட்டி பிறக்கும் .

66. வேப்பமரத்தின் இலைகள் இனிப்பாக மாறும்.

67. எண்ணையில்லாமல் விளக்குகள் எரியும் (மின்சாரம்)  

68. ஆண், பெண் உறவு இல்லாமல் குழந்தை பிறக்கும்  (Test Tube Baby) 

69. பாலை விட தண்ணீர் அதிக விலைக்கு விற்கும்.

70. குழந்தையில்லாத குறைகள் அதிகமாகும்.

இவ்வாறு கலியுகத்தில் நடக்கப் போவதை கூறிப்பிட்டார்.

ஆனால் தற்போது இவை அனைத்தும் நடைபெற்ற வண்ணம் இருப்பது அறியக்கூடியதாக இருக்கின்றது.

Thursday, January 25, 2018

உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்.

ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா!

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்த பெருமைக்குரியவர்,
அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை.

அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது,
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.

அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.

ஆனாலும் கணவரிடம்
காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே
அவை இரண்டும் என்றாராம்.

நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை.

அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சி
யாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.

அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது விசிறு என்றார்.

பழைய சோறு எப்படி சுடும்?
அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை.

விசிற ஆரம்பித்து விட்டார்.

இப்படி,கணவருடன்
வாதம் செய்யாமல்
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம்
கொண்டிருந்தார்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!

அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”
என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே
மனைவியின் பிரிவைத்
தாங்காமல் கலங்கி விட்டார்.

நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக்குறளின் பொருள்.

ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர் மனைவியின் பிரிவைத் தாளாமல்
"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு" என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.

அடியவனுக்கு இனியவளே!

அன்புடையவளே!

என் சொல்படி நடக்கத்
தவறாத பெண்ணே!

என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!

பின் தூங்கி முன் எழுபவளே!

பேதையே!

என் கண்கள் இனி எப்படித்தான் இரவில்
தூங்கப் போகிறதோ!

என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் இந்தசம்பவத்தை
மனதிற்குள்
அசைபோடுவார்களா..!!

ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார். 

அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்.

யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ
அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள்.

அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இருவரும்  அறிவாளியாக  இருந்தால் அதுவே கோவில்.