எத்தனையோ சித்தர் பெருமக்கள் தமிழகத்தில் வாழ்ந்து பல்வேறு *அதிசயங்களை நிகழ்த்தியும் மருத்துவம், யோகப்பயிற்சி, ஆன்மீகம், பகுத்தறிவு சிந்தனை*களையும் மக்களுக்கு வழங்கிச் சென்றுள்ளனர்.
நம் நாட்டின் சித்தர்கள் பார்ப்பதற்கு *வெள்ளைத் தோல் ஆங்கிலேயர்கள்* போல் இருந்தால் தான் நம்புவேன் என்பது நமது அறியாமையே.
கரடுமுரடான தோற்றத்தில் தான் பெரும்பாலும் காணப்படுவார்கள். ஏனென்றால் தமிழர்கள் *நீக்ரோயத்* இனத்தைச் சேர்ந்தவர்கள்.
அப்படிப்பட்ட எளியதோர் தோற்றத்தில் தன்னை *மழைச்சித்தர்* *(Rain Siddhar)* என்று கூறிக்கொள்ளும் ஒருவரை அண்மையில் சந்தித்தேன்.
*தன்னால் எந்தவித சூழலிலும் மழையை வர வைத்து ஏரி, குளங்களை நிரப்பி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்ய முடியும் என்று சவால் விட்டுப் பேசினார்.*
*இதைக் கேட்டால் ஏதோ ஒரு பைத்தியம் உளறுகிறது என்றே யாராயிருந்தாலும் எண்ணத் தோன்றும்.*
ஏனென்றால் நம்முடைய பார்வையின் கோணம் அப்படி உள்ளது.
அரசாங்கமானது ஏதேதோ ஆராய்ச்சி, விழா, கோடிக்கணக்கில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் என்று செலவுகள் செய்கிறதே, அதுபோல் *இந்த மழைச்சித்தரை வைத்து தமிழக அரசு ஆய்வு செய்யலாமே.*
தண்ணீருக்காக *கர்நாடகா, கேரளா, ஆந்திரா* மாநிலங்களோடு போராடவோ, கெஞ்சவோ வேண்டியதில்லையே.
இவர் சொல்வது பொய்யென்றால் *அரசை ஏமாற்றிய குற்றத்திற்காக கைது* செய்யலாமே.
உலகில் நவீன விஞ்ஞானத்தால் இன்ன காரணம் என்று அறுதியிட்டு கூற முடியாத *அற்புதங்களை நிகழ்த்தும் மனிதர்கள்* என்று ஊடகங்களில் அவ்வப்போது நாம் அனைவரும் படிக்கத்தான் செய்கிறோம். *அதுபோன்ற ஓர் அதிசய மனிதராக ஏன் மழைச்சித்தர் இருக்கக்கூடாது?*
*தமிழன் என்று சொன்னாலே கேவலமா? அல்லது நம்பிக்கை அற்றவர்களா?*
*இச்செய்தி அரசுக்கு சென்று சேர யாரேனும் பரிந்துரை செய்யுங்கள்*
*வசதி வாய்ப்புள்ள தனியார் தொண்டு நிறுவனங்களும் இவரை வைத்து ஆய்வு மேற்கொள்ளலாமே!*
*வந்தால் மழை. போனால் சில லட்சங்கள் ரூபாய் வீண்செலவு* என்று நிறைவடைவோம்.
தொலைக்காட்சி ஊடகத்தில் வந்த *வீடியோ காட்சி* ஒன்றையும் எம்மிடம் காட்டினார் *மழைச்சித்தர் எனப்படும் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள்*
*மழைச்சித்தரின் செல்பேசி:9751631252*
நன்றி! வாழ்க வளமுடன்!!
தகவல்: வாசன் சுருளி.
No comments:
Post a Comment