ஒரு மரண வீட்டில் எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். அந்த வழி வந்த பட்டினத்தார் அழுபவர்களைக் கண்டதும் அவரும் கதறி அழத் தொடங்கினார்.உடனே பட்டினத்தாரிடம்,"நீங்கள் ஏன் இப்படி அழுகிறீர்கள் எனக் கேட்டாார்கள்.நான் செத்தவருக்காக அழவில்லை.கதறியழும் உறவினர்களுக்காகவே அழுகின்றேன்" என்றார்" ஏன்?" என்று அவர்கள் கேள்வி கேட்டதும் ," செத்த பிணத்துக்காக சாகப்போகும் பிணங்கள் அழுவது மூடத்தனம் இல்லையா?.மரணம் என்பதும் இறைவன்தான்.அதனை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள் " என்று கிளம்பினாராம். மரணத்தையும் இறைவனாகப் பார்க்க முடியும் போது இந்த உலகில் எல்லாமே இறைவன்தானே!
No comments:
Post a Comment